மே.22 கோடை சீசனில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை குறைக்கவும், நாடு முழுவதும் 380 சிறப்பு ரயில்களில் 80 ஆயிரம் பெட்டிகளுடன் 6369 டிரிப்களை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட மக்கள் தொடர்புத்துறை அதிகாரி மரிய மைக்கேல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டு கோடை சீசனில், பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், இந்திய ரயில்வே 380 சிறப்பு ரயில்களில் 80 ஆயிரம் பெட்டிகளுடன்Continue Reading

மே.22 கோவையில் இந்திய சிலம்பம் சங்கம் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் 1000க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் பங்கேற்றனர். கோவையில் இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டியில் ஆந்திரா, தெலங்கானா, உ.பி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் குத்து வரிசை,Continue Reading

மே.22 கோவை மத்திய சிறையில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. கோவை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மற்றும் தடுப்பு காவல் என சுமார் 2,300க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தும் பொருட்டு கல்வி, யோகா, தியானம், தொழிற்பயிற்சி போன்ற பல்வேறு வகையான மறுவாழ்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற அரசுContinue Reading

மே.22 கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அம்மாநில சட்டப்பேரவை இன்று கூடுகிறது. வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதை தொடர்ந்து முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுடன் 8 அமைச்சர்களும் முதல் கட்டமாகப் பதவியேற்றுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து, நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கர்நாடக சட்டப்பேரவையின் சிறப்புContinue Reading

மே.22 வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானதுContinue Reading

மே.22 தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நாளை சிங்கப்பூர் செல்கிறார். தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது, மாநிலத்தின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், தொழில்துறையை முன்னெடுத்து செல்வதில் அதிக கவனம் செலுத்திவருகிறார். அதன்படி, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்த இலக்குContinue Reading

மே.22 தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஜூன் 20ஆம் தேதி திருவாரூர் அருகே காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக்க கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு. ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் வரும் ஜூன்Continue Reading

மே.21 ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி 10 அம்சத் திட்டத்தை வெளியிட்டார். ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளின் அமைப்பான ‘ஜி-7’ அமைப்பின் உச்சி மாநாடு கடந்த 19ம் தேதி தொடங்கியது. இதில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மேனுவல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ்,Continue Reading

மே.21 ஒடிசா மாநிலத்தில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் மற்றும் அமைச்சர்கள் தங்களது சொத்துப்பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தங்களது சொத்துப் பட்டியலை இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி முதலமைச்ச்ர நவீன் பட்நாயக்குக்கு ரூ.65 கோடியே 40 லட்சம்Continue Reading

மே.21 குடிமைப் பணி தொடர்பான அதிகாரங்கள் டெல்லி அரசின் கைகளிலே இருக்கும் என்ற உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் டெல்லி யூனியன் பிரதேசமாக இருந்துவருகிறது. பிரிவு 239ன் கீழ் யூனியன் பிரதேசங்களை குடியரசுத் தலைவர்,Continue Reading