டிசம்பர்-23. குஜராத் மாநிலத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இருந்த மது பானங்கள் அனைத்தையும் முன்று மணி நேரத்தில் பயணிகள் குடித்துத் தீர்த்தது பெரும் செய்தியாக பரவி வருகிறது. சூரத் நகரத்தில் இருந்து பாங்காக் நகரத்திற்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவை டிசம்பர் 20- ஆம் தேதி ஆரம்பமானது. முதல் விமானத்தில் 175 பயணிகள் இருந்தனர். விமானத்தில் ரெட் லேபுள், ஷிவாஸ் ரீகல் போன்ற விஸ்கி வகைகளும் பிளாக் பகாடிContinue Reading

டிசம்பர்-23, பள்ளிகளில் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களுக்கு பின் மறுதேர்வு நடத்தப்படும். இரண்டாவது வாய்ப்பிலும் தேர்ச்சி பெறாவிட்டால் அடுத்த வகுப்புக்கு அனுப்பக் கூடாது என்ற மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. *Continue Reading

டிசம்பர்-23. அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் காளிப்பிரியனின் சொத்து விபரங்களை பெறுவதற்கு தகவல் பெறும் சட்டத்தின் கீழ் அனுப்பபப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் இந்த கருத்தை உயர்நீதிமன்றம் வெளியிட்டு இருக்கிறது. அடுத்த 2 மாதங்களில் இதனைப் பரிசீலித்து முடித்துவைக்குமாறு மாநில தகவல் ஆணையத்திற்கு நீதிபதி கார்த்திகேயன்Continue Reading

டிசம்பர்-23. தமிழ் நாட்டின் முக்கிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.. மத்திய மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவும் நிலையில் 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வேண்டும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டு உள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய ஏழு துறை முகங்களுக்கும் இந்த வேண்டுகோள் அனுப்பப்பட்டுContinue Reading

டிசம்பர்-22. நெல்லையில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்களை பணியில் அமர்த்த டிஜிபி உத்தரவு பிறப்பித்து உள்ளார். கூடுதல் பாதுகாப்பு, பிஸ்டல் மற்றும் நீண்ட ரேஞ்ச் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கும் அனுமதி கொடுத்து இருக்கிறார். இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 23- ஆம் தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று டிஜிபி தமது உத்தரவில் தெரிவித்துContinue Reading

டிசம்பர்-22, மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை உயர்த்தி வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் படி பொது இடங்களில் மின் விபத்துகளால் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு மின்சார வாரியம் வழங்கும் நிவாரணத் தொகை ₹5 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முழு பார்வை பாதிப்பு, 2 கை, கால்களும் செயலிழந்தால் வழங்கப்படும் நிவாரணம் ₹3 லட்சமாகவும், ஒரு கை, கால் செயலிழப்புக்கு நிவாரணம் ₹1.50Continue Reading

டிசம்பர்-22. கிறித்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உள்நாட்டு விமானக் கட்டணம் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்து உள்ளது, சாதாரண நாட்களில் சென்னையில் இருந்து தூத்துக்குடி 4,800 ஆக இருந்த விமானக் கட்டணம் தற்போது 14,250 ஆக உயர்ந்து இருக்கிறது. சென்னை-மதுரை கட்டணம் ரூ 4,300- ல் இருந்து 17,700 ஆகவும். சென்னை- திருச்சி கட்டணம் ரூ 2,390- ல் இருந்து ரூ 14,400 ஆகவும், சென்னைContinue Reading

டிசம்பர்-21, டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பாப்கார்னுக்கு 18% வரை வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. பேக்கேஜ் செய்யப்படாத உப்பு மற்றும் பெப்பர் பாப்கார்னுக்கு 5% வரியும், பேக்கேஜ் செய்யப்பட்டு லேபிளிடப்பட்ட பாப்கார்னுக்கு 12% வரியும், கேரமல் வகை பாப்கார்னுக்கு 18% வரியும் விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. பயன்படுத்தப்பட்ட பழைய எலெக்ட்ரிக் கார்களை மறுவிற்பனை செய்வதற்கு 18% ஜிஎஸ்டிContinue Reading

டிசம்பர்-21 மின்சாரம் பாய்ந்து ஆதிபராசக்தி பக்தர் உயிரிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாணியம்பாடியில் இருந்து 20- க்கும் மேற்பட்டோர் பேருந்து ஒன்றில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி என்ற இடத்தில் டீ குடிப்பதற்காக பேருந்தை ஓரம் கட்டியபோது தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் பேருந்து உரசியுள்ளது. அப்போது மின்சாரம் பாய்ந்து அகல்யா (20) என்பவர் உயிரிழந்துவிட்டார். *Continue Reading

டிசம்பர்-21. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 390 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. விசாகபட்டினத்தில் இருந்து 430 கி.மீ., தொலைவிலும் ஒடிசா – கோலாப்பூரில் இருந்து 610 கி.மீ., தொலைவில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா – தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரும் என்றும்Continue Reading