அ.தி.மு.க.வுடன் விளையாடுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது என்பதை அண்ணாமலை உணரவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்து உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள சுதந்திரப் போரட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது செய்தியாளாகளிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுகவில் உள்ளவர்களின் சொத்து விவரங்கள் தெளிந்த நீரோடை போன்றது என்றார். சொத்து விவரங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்தில்Continue Reading

ஏப்ரல்- 17. ஆப்பிரிக்க நாடான சூடான் நாட்டில் நடக்கும் மோதல் 60 பேரை பலி கொண்டு விட்டது. ராணுவத்தினருக்கும், துணை ராணுவப் படையினருக்கும் இருந்து வரும் பகை கடந்த வாரம் பெரிய அளவில் வெடித்ததால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. தலைநகர் கார்டூம் உட்பட பல நகரங்களில் இரு படை பிரிவுகளுக்கும் இடையே சண்டை , இரண்டாவது நாளாக ஞாயிற்றுக் கிழமை பகலிலும் நீடித்தது. இந்த மோதல்களினால் திங்களன்றுContinue Reading

சந்தனக் கடத்தல் வீரப்பன் கூட்டாளியான மீசை மாதையன் உடல் நலக்குறைவால் மைசூரு அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக் கிழமை மரணம் அடைந்தார். கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த மாதையன் கடந்த 11-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்தார். தொடாந்து அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனின்றி மாதவன் உயிர் பிரிந்தது. 1993- ம் ஆண்டு கர்நாடக போலீசில் சரணடைந்த மாதையன் மீது 4 தடா வழக்குகள் பதிவாகின.இவற்றில் ஒருContinue Reading

தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் நடைபெற்ற பேரணியில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் காக்கி சீருடை அணிந்து பங்கேற்றனர்.. சென்னையில் கொரட்டூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்.பேரணியில் மத்திய அமைச்சா எல்.முருகன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தென் மண்டலத் தலைவர் வன்னியராஜன், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் சாதி வேறுபாடுகள் பார்ப்பதில்லை என்று கூறினார். கோயம்புத்தூரில் பொன்னையராஜபுரத்தில் துவங்கிய பேரணி, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி ஆகிய வீதிகளின் வழியாக வந்துContinue Reading

உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி. யும் அவருடைய சகோதரரும் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பிரக்யாராஜ் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முன்னால் எம். பி. யான அதிக் அஹமதுவின் மகன் ஆசாத் அஹமது கடந்த 13ம் தேதி ஜான்சி அருகே போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடந்தது. இதில், கடந்த 2019 முதல் சிறையில் இருந்து வந்த அதிக் அஹமது, அவரதுContinue Reading

கோவை அருகே காட்டில் பிடித்த தீயை அனைக்கும் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம் நாதேகவுண்டன் புதூரை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக காட்டு தீ பற்றி எரிந்து வருகின்றது. காட்டுத் தீயை அணைக்க கூடிய பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சனிக்கிழமை பகல் பொழுதில் காட்டுத்தீ பெரும்பாலான இடங்களில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் மீண்டும் வேகமாகContinue Reading

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரபல தாதாவும், சமாஜ்வாடி கட்சியின் சார்பில் 5 முறை எம்.பி்.யாக இருந்தவருமான அட்டீக் அகமது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அகமது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். அவரை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக பலத்த பாதுகாப்போடு அழைத்து வந்தனர். அப்போது அட்டீஷ் அகமது ஊடகத்தினரிடம் பேட்டி பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் 3 பேர்Continue Reading

  இந்தியா முழுவதும் கடந்த ஆறுமாதங்களில் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கோவிட் காரணமாக 20 பேர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுகிவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்து இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் தான் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்தனர். அதன் பின் வெள்ளிக்கிழமைContinue Reading

தமிழ்நாட்டின் கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கான இரண்டு மாத தடைக்காலம் தொடங்கி உள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் இந்த தடை அமலுக்கு வந்திருக்கிறது. மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளில் கடலுக்குள் சென்று மீன்பிடித்துக் கொண்டு வருவதற்கு விதிக்கப்பட்டு உள்ள தடை  ஜூன் 14-ந்தேதி வரை தொடரும். இந்த தடை உத்தரவினால் எந்த ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனர்கள் கடலுக்குச்Continue Reading

உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து 16-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற உளள் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான வழிமுறைகளை தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு வெளியிட்டு உள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி பேரணியில் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார். பேரணியின் போது எந்த விதமான பாடலோ அல்லது சைகைகளோ காண்பிக்காமல் நடந்து கொள்ளவேண்டும். பொது மக்களுக்கு இடையூறாகவும், வாகனContinue Reading