தமிழ் புத்தாண்டு தினத்தை சொந்த ஊரில் கொண்டாட ஏராளமானவர்கள் புறப்பட்டு உள்ளதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நெரிசல் நிலவுகிறது.புத்தாண்டோடு சேர்த்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டு உள்ளனர். சென்னையில் இருந்து தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கு அதிகம் பேர் கோயம் பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து இருந்தனர். நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன.Continue Reading

தமிழ் மொழி மீது இந்தியை ஒரு போதும் திணிக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுடன் “தமிழ் தர்ஷன்” என்ற நிகழ்ச்சியில் அவர் உரையாடினார். அப்போது ஆர்.என்.ரவி, இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது என்றார். சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என்று கூறிய ஆளுநர், தமிழ் மீது ஹிந்தி உட்பட எந்த மொழியையும்Continue Reading

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முந்தைய அரசால் தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக 10.5% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார் . சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் ஜி.கே.மணி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அளித்த பதிலில் முதல்வர் ஸ்டாலின் இதனை தெரிவித்து உள்ளார். மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் ஆணையம்Continue Reading

சென்னை ஆருத்ரா கோல்ட் ரேட்டிங் மோசடி தொடர்பாக ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட மைக்கேல் ராஜ் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முழுவதையும் கையாண்டது மைக்கேல்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் விசாரணையின் போது 1749 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் இந்தப் பணப்பரிமாற்றம் யார் , யாருக்கு நடைபெற்று உள்ளதோ அவர்களுக்கு சம்மன் அனுப்பி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.Continue Reading

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,000த்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 10,158 பேருக்கு தொற்று உறுதி. தற்போது 44,998 பேர் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளனர். 230 நாட்களில் இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.Continue Reading

அதிமுக கட்சி விதி திருத்தங்களை அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த ரிட் மனு ஈபிஎஸ் விண்ணப்பத்தை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அவகாசம்Continue Reading

தமிழ் சினிமா உலகத்தில் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான ‘சின்னத்தம்பி’ வெளியாகி 32 ஆண்டுகள் ஆகிவிட்டதை நடிகை குஷ்பு நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், “தமிழ் சினிமாவில் புயலைக் கிளப்பிய சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆகிவிட்டதை தன்னால் நம்பமுடியவில்லை.என் இதயம் இயக்குநர் பி.வாசுவுக்கும் மற்றும் நடிகர் பிரபுவுக்கும் துடிக்கும். ஆன்மாவைத் தொடும் பாடல்களைத் தந்த இளையராஜாவுக்காக என்றென்றும் கடைமைப்பட்டு இருப்பேன். நந்தினி ஒவ்வொருவரதுContinue Reading

காஷ்மீரையும் லடாக்கையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் சோஜிலா சுரங்கப்பாதை (( Zojila Tunnel )) அடுத்த ஆண்டுடில் போக்குவரத்துக்கு திறக்கப்பட உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரத்து 649 அடி உயரத்திலான இந்தச் சுரங்கப் பாதையை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை சோஜிலா கணவாய் வழியாகத்தான் இந்திய ராணுவத்துக்குத் தேவையான பொருட்கள் காஷ்மீரில் இருந்து லடாக்குக்குச் கொண்டுச் செல்லப்பட்டு வருகின்றன. இந்தப் பாதையும் பயணமும்Continue Reading

குஜராத் மாநிலத்தில் பள்ளி ஒன்றில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வினாத்தாளில் சச்சின் டெண்டுல்கர் எந்த விளையாட்டின் வீரர் என்ற கேள்வி ஒன்று இடம் பெற்றிருந்தது. இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. அதிசயம் என்னவென்றனால் அந்த கேள்விக்காக கொடுக்கப்பட்ட 4 விருப்பங்களில் ஹாக்கி, கபடி, கால்பந்து, செஸ் ஆகியவை மட்டுமேContinue Reading

5 பேர் உயிரிழப்பு – அமைச்சர் விளக்கம். குளத்தை தூர்வாராமல் தீர்த்தவாரி நடைபெற்றது குறித்து முதல்வர் தம்மைக் கண்டித்ததாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளளார். சென்னையின் புறநகராக மூவரசன் பேட்டை குளத்தில் புதன் கிழமை நடைபெற்ற தீர்த்தவாரியின் போது ஐந்து பேர் இறந்தது குறித்து சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு அளித்த பதிலில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.தீர்த்தவாரி நடைபெற்ற குளம் கோயில் குளம் அல்ல, பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படும்Continue Reading