
டிராகன் இந்தியில் ரிலீஸ், வெற்றி பெறுமா?

விஜய், கடைசி படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.

ரஜினி மகள், திருத்தணி முருகனிடம் உருக்கம்.

பாக்கியராஜ்க்கு பார்த்தீபன் செய்த உதவி.

2-ம் வகுப்பு படிக்கும் போது பிரதமருக்கு வாழ்த்து சொன்ன விவேக்.

தமன்னா, காதலரை பிரிந்தது ஏன் தெரியுமா ?

முதல் படத்தில் ஜெயப்பிரதாவின் சம்பளம் 10 ரூபாய்.

பட்டம் துறந்தார் நயன்தாரா.

விஜயகாந்தை வைத்து படம் தயாரிக்கச் சொன்ன ரஜினி.

அரவிந்த் சாமி மகளை மணந்தவர் யார் ?

சிம்பு படத்தில் நடிக்கிறார் சந்தானம்.

ரஜினி குணம் அடைய உண்ணாவிரதம் இருந்த ஸ்ரீதேவி !

அல்லு அர்ஜுனை இயக்கும் அட்லி !

தங்கம் கொண்டு வந்த அஜித் ரசிகர்கள்!

‘பஞ்ச் டயலாக்’குளை தெறிக்க விடும் அஜித்!

எம்.ஜி.ஆரை.எம்.ஆர் .ராதா சுட்டது ஏன்?

துபாயில் திருமண நாளை கொண்டாடிய ரஜினி.

மோகன்லால் படத்திற்கு குறி !

எம்.ஜி.ஆர். இடம் ஒரு மாதம் ஹால்ஷீட் கேட்ட அண்ணா.

தனுஷ் படத்திற்கு புதிய சிக்கல்

படச்சுருளை எரித்துவிடுவேன் என்று மிரட்டிய பாரதிராஜா.
டிராகன் இந்தியில் ரிலீஸ், வெற்றி பெறுமா?
பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. ரசிகர்கள் அந்தப்படத்தை கொண்டாடி தீர்த்தனர்.இளைஞர்கள் மத்தியில் பிரதீப் ரங்கநாதனுக்கு ,தனி ‘கிரேஸ் ‘ உருவானது. இந்த நிலையில் ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஸ்வந்த் மாரிமுத்து, ‘இளம் ஹீரோ’பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘டிராகன்’ என்ற படத்தை டைரக்டு செய்தார். இதில் , காயது லோகர், அனுபமா பரமேசுவரன், ஜார்ஜ் மரியன், கே. எஸ். ரவிக்குமார், கவுதம்
விஜய், கடைசி படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.
தனது ,அயராத உழைப்பால் தமிழ் சினிமாவில் முன்னுக்கு வந்துள்ள ‘இளைய தளபதி ’விஜய், ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிக்கு நிகரான ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். ரஜினியை விட அதிகமாக சம்பளம் வாங்குகிறார். அரசியலுக்கு வரப்போவதாக சொல்லிவிட்டு, ரஜினி பின் வாங்கிய நாள் முதலே விஜய்க்கு அரசியல் ஆசை வந்து விட்டது. தடாலடியாக விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அப்போதே விஜய்,’ அரசியலில்
ரஜினி மகள், திருத்தணி முருகனிடம் உருக்கம்.
‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தின் இரு மகள்களும், சினிமாவில்தான் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தந்தையின் ஆசியும்,ஆதரவும் இருந்தும், இருவரும் குறைந்த பட்ச வெற்றியைக்கூட எட்டவில்லை. மூத்தவரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டதோடு, சினிமாவில் இயக்குநராக களமிறங்கினார். தனுஷை வைத்து’ 3 ‘எனும் படத்தை இயக்கினார். ஓரளவு பெயர் கிடைத்தது. அதன்பின் ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார், படம் சரியாக போகவில்லை. கடைசியாக விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்த ‘
பாக்கியராஜ்க்கு பார்த்தீபன் செய்த உதவி.
பாரதிராஜாவின் பட்டறையில் மெருகேற்றப்பட்ட வர்கள் 80 மற்றும் 90 – களில், கோடம்பாக்கத்தை , தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். இயக்குநர்கள். கணக்கிட்டுப் பார்த்தால், பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, கே.ரங்கராஜ், மனோஜ்குமார், பொன்வண்ணன் என்று நீண்ட பட்டியல் போடலாம். இவர்களில் பாக்யராஜுக்கு தனிப்பெருமை உண்டு. பாக்யராஜை, தனது 16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள் படங்களில் துண்டு துக்கடா வேடங்களில் நடிக்க வைத்த, பாரதிராஜா, தனது ‘ புதிய வார்ப்புகள் ‘ படத்தில்
காசி நகரத்தை செயற்கையாக உருவாக்கும் ராஜமவுலி.
தெலுங்கு தேச சினிமா உலகின் பிரமாண்ட இயக்குநரான ராஜமவுலி,கடைசியாக ஆர் ஆர் ஆர் படத்தை டைரக்டு செய்திருந்தார்.அந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அடுத்து தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ்பாபு நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்குகிறார்.இந்தப்படத்தில் பிரியங்கா சோப்ரா வில்லி கேரக்டரில் நடிக்கிறார்.. இந்த ‘பான் இந்தியா’ படத்துக்கு தலைப்பு வைக்கவில்லை. ரூ.500 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது. தற்போது ஒடிசாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
2-ம் வகுப்பு படிக்கும் போது பிரதமருக்கு வாழ்த்து சொன்ன விவேக்.
‘ சின்ன கலைவாணர் ‘என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக், 2 ஆம் வகுப்பு படிக்கும்போது, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு, கடிதம் மூலம் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன தகவல் –இது . கே.பாலச்சந்தர் இயக்கிய ’ மனதில் உறுதி வேண்டும் ‘என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் விவேக். அதன்பிறகு புதுப்புது அர்த்தங்கள், ஒரு வீடு, இரு வாசல் என அவ ர் இயக்கத்தில் தொடர்ந்து 3
தமன்னா, காதலரை பிரிந்தது ஏன் தெரியுமா ?
‘கேடி ‘ படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை தமன்னா. இங்கு முன்னணி நடிகையாக இருந்த தமன்னா, ‘பாலிவுட்’டுக்கு சென்று அங்கும் கொடி நாட்டினார். இப்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ வெப் தொடரில் நடித்தபோது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். திருமண ஏற்பாடுகளும்
முதல் படத்தில் ஜெயப்பிரதாவின் சம்பளம் 10 ரூபாய்.
ஜெயப்பிரதா என்றதும், 80 ‘கிட்ஸ்’களுக்கு நினைவுக்கு வரும் படம் ‘நினைத்தாலே இனிக்கும்’ இப்போதும் , எப்போதும் இனிக்கும். ‘அதிலும், ‘ஆனந்த தாண்டவமோ’ பாடலும், ஜெயப்பிரதாவின் ஆட்டமும் ,–அது ‘வேற லெவல்’. அவரது, நிஜப்பெயர் லலிதா ராணி . ஆந்திராவின் ராஜமுந்திரியில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை கிருஷ்ணா ராவ் தெலுங்கு திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்தவர்.சிறு வயதிலிருந்தே நாட்டியத்திலும், இசையிலும் கவனம் செலுத்திய ஜெயபிரதா, இரண்டிலும் கரை தொட்டவர். பள்ளி
பட்டம் துறந்தார் நயன்தாரா.
‘லேடி சூப்பர் பட்டம் வேணாம்’ என நயன்தாரா சொல்லிட்டாங்க. இது குறித்து நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை: ‘’நான் நடிகையாக பயணித்துவரும் இந்தப் பாதையில் மகிழ்ச்சி அடைகிறேன். என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது- உங்கள் எல்லையற்ற அன்பும் ஆதரவும்தான் அதற்கு அழகு சேர்த்துள்ளது. என் வெற்றியின்போது என்னை தோளில் சாய்த்து பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னை தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்தீர்கள். நீங்கள் பலரும் எனக்கு
விஜயகாந்தை வைத்து படம் தயாரிக்கச் சொன்ன ரஜினி.
ரஜினிகாந்த், உயர உயர பறந்து கொண்டிருந்த காலகட்டம் அது. ரஜினிக்கு, கதை உருவாக்கிய இயக்குநர்கள், அவரைப்போல் தோற்றம் கொண்ட விஜயகாந்தை அணுகினார்கள். அறிமுக இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்த நடிகர் என்ற அடையாளம் பெற்ற விஜயகாந்த், நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு, கால்ஷீட் கொடுத்து அவர்களையும் வளர்த்து விட்டார். தமிழ் தவிர வேறு மொழி படங்களில் நடிக்காத ஒரே நடிகர் விஜயகாந்த் . திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுக்க முக்கிய காரணமாக
அரவிந்த் சாமி மகளை மணந்தவர் யார் ?
நடிகர் அரவிந்த்சாமியின் மகளுக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றது. இது , காதல் கல்யாணம். 1991 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தளபதி’.ர்ஜினியுடன் முதன் முறையாக இணைந்த மணிரத்னம், இதனை ‘பான் இந்தியா’ படமாக எடுக்க திட்டமிட்டார். அனைத்து மொழி நடிகர்களையும் படத்தில் நடிக்க வைக்க ஆசை. மலையாள ‘சூப்பர்ஸ்டார்’ மம்முட்டியை ஒப்பந்தம் செய்தார். இந்தியில் இருந்து அம்ரிஷ் புரி. தெலுங்கில் ஒரு மூத்த நடிகரிடம் பேச்சு நடந்தது. ஏனோ கை
சிம்பு படத்தில் நடிக்கிறார் சந்தானம்.
சிம்புவின் புதிய படத்தில் சந்தானம் ! — காமெடி கலாட்டாவாக உருவாகும் சிம்புவின் புதிய படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார், சந்தானம். கவுண்டமணி, வடிவேலு, விவேக் ஆகியோருக்கு அடுத்தபடியாக தமிழில் நகைச்சுவை வேடங்களில் கலக்கி வந்தவர் சந்தானம். தனது மூத்த நடிகர்கள் , கதாநாயகனாக புது அவதாரம் எடுத்து, ‘டூயட்; பாடி இருந்ததால், சந்தானத்துக்கும் ‘டூயட்’ ஆசை வந்தது ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.
ரஜினி குணம் அடைய உண்ணாவிரதம் இருந்த ஸ்ரீதேவி !
ரஜினிகாந்துக்கும் , ஸ்ரீதேவிக்கும் ‘மூன்று முடிச்சு’ முக்கியமான படம். அதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவி இந்தப்படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அபூர்வ ராகங்கள் படத்தில் ஓரிரு காட்சிகளில் வந்துபோன ரஜினிகாந்த், மூன்று முடிச்சு படத்தில்தான் முழுமையாக வந்தார். படத்தை தூக்கி நிறுத்தியதே இவர்தான். வில்லனாக அதில் கலக்கிய ரஜினி, பின்னார் ஹீரோவானார். ரஜினியும்,ஸ்ரீதேவியும் 18 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். எல்லாமே வெற்றிப்படங்கள். ப்ரியா, போக்கிரிராஜா, ராணுவவீரன், தர்மயுத்தம்,
அல்லு அர்ஜுனை இயக்கும் அட்லி !
‘ராஜாராணி ‘சினிமா மூலம் இயக்குநராக அறிமுகமான -அட்லீ, தமிழில் தொடர்ச்சியாக வெற்றிப்படங்கள் கொடுத்தார். இதனை அடுத்து இந்திக்கு சென்றார்.அங்கு ஷாருக்கானை வைத்து இயக்கிய ’ஜவான்’ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இது- இந்திக்கு சென்ற தமிழ் டைரக்டர்கள் யாரும் செய்யாத சாதனை. இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அட்லி இயக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது. அட்லீ இயக்கத்தில் சல்மான்கான்
தங்கம் கொண்டு வந்த அஜித் ரசிகர்கள்!
ரஜினி, விஜய்க்கு நிகராக ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர், அஜித். ஆனால் . ஏனோ முற்றும் துறந்த முனிவர் ஆகி விட்டார், ‘அல்டிமேட் ஸ்டார்’. ‘எனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம், ‘என சொல்லி ,பல ஆண்டுகளுக்கு முன்பே அவற்றை கலைத்து விட்டார். சில மாதங்களுக்கு முன்பு ‘ எனக்கு செல்லப்பெயரும் வேண்டாம்.. தல..அல்டிமேட் ஸ்டார்’ என குறிப்பிட வேணாம். ஒண்ணு ‘ ஏகே ‘ன்னு அழையுங்க.. அல்லது அஜித் என்றே கூப்பிடலாம்’
‘பஞ்ச் டயலாக்’குளை தெறிக்க விடும் அஜித்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. ‘விடாமுயற்சி’ யை தொடர்ந்து’ அல்டிமேட் ஸ்டார்’ அஜித், நடித்துள்ள படம். அவருடன், திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்கிறார். வரலாறு படத்துக்குப்பிறகு அவர் மூன்று வேடத்தில் நடிக்கும் , இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை
எம்.ஜி.ஆரை.எம்.ஆர் .ராதா சுட்டது ஏன்?
கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தை உலுக்கிய முக்கிய நிகழ்வுகளில் பிரதானமானது, எம்.ஆர்.ராதாவால், எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவம். 1967 -ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும், அதற்கான ஆயத்தங்களில் இறங்கி இருந்த நேரம் அது. எம்.ஜி.ஆரை. பரங்கிமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திமுக தலைவர் அண்ணா அப்போதுதான் அறிவித்திருந்தார். சினிமாவை பொறுத்தவரை ,‘அரசகட்டளை’ படத்தை கிட்டத்தட்ட முடித்து விட்டு காவல்காரன் படத்தில் , எம் ஜி ஆர் நடித்துக்கொண்டிருந்த
ஷாருக்கானின் வீட்டு வாடகை ரூ. 24 லட்சம் !
இந்தி சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ ஷாருக்கான் ,இப்போது மும்பையின் பந்த்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மன்னத் என்ற பங்களாவில் வசித்து வருகிறார். 25ஆண்டுகளாக குடியிருக்கும் அந்த வீட்டை புனரமைக்க அவர் முடிவு செய்துள்ளார். கடலோர பகுதியில் உள்ள அந்த வீட்டை இடித்துக்கட்ட மும்பை மாநகராட்சியில் அண்மையில் அனுமதி வாங்கினார். புதிய இல்லம் ரெடி ஆகும்வரை வாடகை வீட்டில் குடியேற ஷாருக்கான் முடிவு செய்தார். பந்த்ராவின் பாலிஹில் பகுதியில் அவர் வாடகை வீடு
துபாயில் திருமண நாளை கொண்டாடிய ரஜினி.
‘வேட்டையன்’ படத்தை அடுத்து ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’படத்தில் நடித்து வருகிறார். சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, நம்ம ஊர் சத்யராஜ் , ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர். படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
மோகன்லால் படத்திற்கு குறி !
மோகன்லால் படம் ரிலீஸ் ஆகும் தேதியில் , மலையாள சினிமா உலகம்‘ஸ்டிரைக்’ கை அறிவித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் ஜுன் மாதம் 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். கேளிக்கை வரியை மாநில அரசு குறைக்க வேண்டும், நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது, அவர்கள் பிரதான கோரிக்கை. இந்த போராட்டத்துக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை உள்ளடக்கிய கேரள
எம்.ஜி.ஆர். இடம் ஒரு மாதம் ஹால்ஷீட் கேட்ட அண்ணா.
தமிழக அரசியலை புரட்டிப்போண்ட ஆண்டு 1967. அந்த வருஷம்தான், சட்டப்பேரவை தேர்தலில் , காங்கிரசை வீழ்த்தி திமுக ஆட்சிக்கு வந்தது, அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். அப்போது அண்ணா தலைமையில் திமுக நிஜமாகவே ‘மெகா’ கூட்டணி அமைத்திருந்தது.ராஜாஜியின் சுதந்திரா , காயிதே மில்லத்தின் முஸ்லிம் லீக், மபொசியின் தமிழரசு கழகம், பார்வர்டு பிளாக்,கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் , திமுக அணியில் அங்கம் வகித்தன. இந்த கட்சி தலைவர்கள் பங்கேற்ற
தனுஷ் படத்திற்கு புதிய சிக்கல்
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘குபேரா’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சமயத்தில் ‘குபேரா’ படத்தின் தலைப்புக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. அந்த தலைப்புக்கு உரிமை கொண்டாடுபவர் கரிமகொன்ட நரேந்தர் என்ற தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் . அவர் வாசிக்கும் புகார் பட்டியல் இது : ‘தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில்
படச்சுருளை எரித்துவிடுவேன் என்று மிரட்டிய பாரதிராஜா.
கிராமத்து தெருக்களையும், வயல்களையும் படப்பிடிப்பு தளமாக்கியவர் ,’இயக்குனர் இமயம்’ பாரதிராஜா . கிராமம், நகரம், கிரைம் த்ரில்லர் என பல்வேறு தளங்களில் இயங்கியவர். செல்லூலாயிடில் , காதல் ஓவியம் வரைந்த மகா கலைஞன். முதல் மரியாதை படத்தில் சத்யராஜுக்கு கவுரவ வேடம் கொடுத்த பாரதிராஜா, தனது அடுத்த படமான ‘கடலோரக்கவிதைகள்’ படத்தில் அவரை ஹீரோ ஆக்கினார். அதனை முடித்து விட்டு, அவர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்குவதற்கான அறிவிப்பை
கேரள சினிமா உலகில் மோதல் முற்றுகிறது.
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வி கண்டன.தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஹீரோக்கள் அதிக சம்பளம் வாங்குவதால் , தங்களுக்கு அதிக இழப்பு ஏற்படுவதாக கூறிய, தயாரிப்பாளர்கள், ஜுன்1 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். அன்று முதல் எந்த படப்பிடிப்பும் நடைபெறாது என்று அவர்கள் அறிவித்துள்ளனர். நடிகர்கள் ஊதியத்தை குறைக்க வேண்டும், கேளிக்கை வரியை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும்
திண்டுக்கல், தேர்தலில் அதிமுக வென்றது எப்படி!
திண்டுக்கல் என்றதும், அதிமுகவினருக்கும், அந்தக்கால அரசியல் வாதிகளுக்கும் நினைவுக்கு வருவது, 70 -களில் நடைபெற்ற இடைத்தேர்தலும்,மாயத்தேவரும்தான். அது- எம்.ஜி.ஆர்., அதிமுகவை ஆரம்பித்திருந்த நேரம். திண்டுக்கல் மக்களவை தொகுதி திமுக எம்.பி.ராஜாங்கம் மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு (1973 ஆம் ஆண்டு ) இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுகவில் இருந்து அப்போது தான் எஸ்.டி.சோமசுந்தரம் , அதிமுகவுக்கு வந்திருந்தார்.அவர் அந்த சமயத்தில் , மக்களவை எம்.பி.யாக இருந்தார். தனக்கு அடுத்த நிலையில், சோமசுந்தரத்தை
போட்ட காசை அள்ளியது டிராகன்.
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ திரைப்படம் ,அனைத்து ஏரியாக்களிலும் பட்டையை கிளப்பி, வசூலையும் குவித்து வருகிறது. ‘கோமாளி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் பிரதீப் ரங்கநாதன். அந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு வசூலையும் அள்ளியது. இதனையடுத்து ‘லவ் டுடே’ படத்தை இயக்கி தானே ஹீரோவாகவும் நடித்தார், பிரதீப். இன்றைய காலக்கட்டத்து, காதலை பேசிய ‘லவ்டுடே’ ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. முதலிரண்டு படங்களிலும்
இயக்குநர் அட்லீ படத்தில் நடிக்க கமல் மறுப்பு.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் அட்லீ. தனது குருவை போன்றே தொடர் வெற்றிகளை கொடுத்தவர். ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி, பாலிவுட் சென்றார். ஷாரூக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தை டைரக்ட் செய்தார். படம் ‘ பிளாக்பஸ்டர் ‘. அந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்தது. அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு ‘பான் இந்தியா படத்தை
ராஜமவுலி படத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு வில்லி வேடம் .
மகேஷ்பாபுவின் ‘பான் வேர்ல்டு’ படத்தில் பிரியங்கா சோப்ரா , வில்லியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி சினிமாக்கள்தான் ‘பான் இந்தியா’ எனும் பிம்பத்தை உடைத்தவர் , எஸ்.எஸ்.ராஜமவுலி. அவரது தெலுங்கு படங்களான பாகுபலிகளும், ஆர்.ஆர்,ஆர். படமும் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு, தமிழ்,இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ‘டப்’செய்யப்பட்டு உலகம் முழுக்க திரையிடப்பட்டன. ‘பான் இந்தியா ‘படம் என்ற அடையாளத்தையும் பெற்றது. ராஜமவுலி , இப்போது ‘ பான் வேர்ல்டு’ படத்தை உருவாக்கும்
எட்டு கோடி கேட்கிறார் இசைப்புயல் ரகுமான்.
மீண்டும் ‘பிஸி’ ஆகியுள்ள ‘ இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான், தெலுங்கு சினிமாவில் இசை அமைக்க 8 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்கிறார். தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகன், ராம்சரண்.குளோபல் ஸ்டார்’ என அழைக்கப்படுகிறார். தெலுங்கு சினிமா உலகின் உச்ச நடிகளில்ஒருவர் , அவர்.எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கிய ‘ஆர் ஆர் ஆர் திரைப்படம், அவரை வேறொரு உயரத்துக்கு தூக்கி சென்றது. இதனை தொடர்ந்து ராம் சரண், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில்‘கேம்
ஷங்கர் குமுறல் – ‘அமலாக்கத் துறை செய்தது தவறு ‘
‘’சூப்பர்ஸ்டார்’ ரஜினியை வைத்து பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் டைரக்ட் செய்த படம் ‘ எந்திரன்’. கோடி, கோடியாக வசூல் குவித்தது, இந்தப்படம். ‘இந்த படத்தின் கதைக்கரு எனக்கு சொந்தமானது’-எனது நாவலை காப்பி அடித்து ‘எந்திரன்’ எடுக்கப்பட்டுள்ளது’ என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் ,ஷங்கர் மீது குற்றம் சுமத்தினார். அத்தோடு நில்லாமல் சென்னை எழும்பூர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். ‘எந்திரன்’ பட கதை விவகாரத்தில் காப்புரிமை மீறல் நடந்துள்ளது’என ஆரூர் தமிழ்நாடன்