மேகதாது அணையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்க்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
June 09, 23 மேகதாது அணை விவகாரத்தில் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து தமிழ்நாடு அரசு மாறப்போவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தமிழக அரசின் நீர்வளத்துறையின் கீழ் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி, விண்ணமங்கலம் மற்றும் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.Continue Reading