May 28,2023 சிதம்பரம் கோயில் தீட்சிதர் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தாராபுரத்தை அடுத்த மூலனூர் அருகே அனுப்பபட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “சிதம்பரம் கோயில் தீட்சிதர் மற்றும் சிறுமியின் பாலிய விவாக திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன.Continue Reading

May 28,2023 ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், இந்த சீசனில் லீக் சுற்றில் 20 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்த நிலையில் சென்னைContinue Reading

May 28, 2023 சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.வி.கங்கா பூர்வாலாவுக்கு, தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று காலை பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, மும்பை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகிக்கும் சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை நியமிக்கு மாறு, உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஏப். 19-ல் மத்திய அரசுக்குப் பரிந்துரைContinue Reading

May 28, 2023 ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின்: 2023-ம்ஆண்டு ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்ற எனதுவேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று,Continue Reading

May 28, 2023 சுருளிபட்டியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் யானையை பிடிக்க கும்கி யானை கம்பம் வரவழைக்கப்பட்டுள்ளது.கேரளா மாநிலம் மூணாறு பகுதி மக்களை பயமுறுத்தியும், 20 பேரை கொன்ற அரிக்கொம்பன் என அழைக்கபடும் காட்டுயானையின் அட்டகாசம் அதிகரித்ததினால் அச்சமடைந்த பொதுமக்கள் பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் யானை பிடிக்கபட்டு, தமிழக- கேரளா எல்லை பகுதியில் மங்களதேவி கண்ணகி கோவில் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. இந்த நிலையில் இங்கு விடப்பட்ட இந்த அரிக்கொம்பன் காட்டுContinue Reading

May 28,2023 புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திமுக, உள்பட 19 கட்சிகள் புறக்கணிக்கப்பதாக அறிவித்துள்ளன. இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படிContinue Reading

May 28, 2023 குடிமகனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டிட திறப்புவிழாவை மகிழ்ச்சியுடனுடம் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். – இளையராஜா தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார். புதிய நாடாளுமன்றம் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இதில், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று இரவு, தமிழ்நாட்டின் திருவாவடுதுறை மடத்தின் ஆதீனங்களிடமிருந்து இந்தியாவின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேரு பெற்றுக்கொண்ட செங்கோலினை நாளைContinue Reading

May 28, 2023 அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. என்னைப் பற்றி தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகளை பரப்பு நபர்களுக்கு ஒரு வேண்டுகோள், குறைந்த பட்சம் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா தெரிவித்துள்ளார். பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்‌ஷன்ஸின் துணை நிறுவனத்திடம், கல்லல்Continue Reading

May 28, 2023 தேனி மாவட்டம் கம்பம் குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஆட்கொல்லி அரிசி கொம்பன் காட்டு யானையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று (மே 27) கம்பம் வந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, யானையை பிடிப்பது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார். அதனைத்தொடர்ந்து, கம்பம் தனியார் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஐ.பெரியசாமிContinue Reading

May 28,2023 புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் சோழர்கால செங்கோலை நிறுவினார். தலைநகர் டெல்லியில் 64ஆயிரத்து 500 சதுர அடியில் , முக்கோண வடிவில், 4 மாடிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதற்காக புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அமைந்துள்ள இடத்திற்கு வந்த பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகருடன் வளாகத்தில்Continue Reading