தமிழ்நாட்டில் அமைச்சரவையை தொடர்ந்து, முக்கிய அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். முதல்வரின் செயலாளர், நிதித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் முதல்வரின் முதன்மை செயலாளராகவும். முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டிருக்கின்றனர். ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், உள்துறை செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி, போக்குவரத்துத்துறை செயலாளராகவும், போக்குவரத்துத்துறைContinue Reading

மே 9 தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்டுள்ளார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பததாக கடந்த சில நாட்களாகவே தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்ற, அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதியContinue Reading

ஓ.பன்னீர் செல்வமும் – டிடிவி. தினகரனும் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்து இருப்பது தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரே கட்சியாக இல்லாமல் ஒரே நோக்கத்துடன் செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அடையாறில் உள்ள இல்லத்திற்குச் சென்று டிடிவி தினகரனை சந்தித்தார். இருவரும் சிறிது நேர சந்திப்புக்கு பின், கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஓ. பன்னீர்செல்வம், எப்போதுContinue Reading

“அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் போலி வீடியோக்களை பதிவிட்டு அமைதியை சீர்குலைப்பதா?” – யூடியூபர் மணிஷ் காஷ்யப்பிற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் எதை வேண்டுமானாலும் பரப்புவதா என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோக்கள் வெளியிட்ட விவகாரத்தில், தேசியContinue Reading

பிளஸ் 2 தேர்வில் தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என 600 க்கு 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாணவி சாதனை படைத்துள்ளார். பிளஸ் 2 தேர்வு முடிவுகளை இன்று தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்நிலையில் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம் கணினி, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் உள்ளிட்டContinue Reading

திராவிடம் அனைவரையும் சமமாக நடத்தும் என்று திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க,ஸ்டாலின், ஆளுநரை வைத்து எங்களை அச்சுறுத்த நினைத்தால், அஞ்ச மாட்டோம் என்றும், ஆரியத்தை வீழ்த்தும் ஆயுதம் திராவிடம் என்பதால், அதனைப் பார்த்து ஆளுநர் பயப்படுகிறார் எனவும்Continue Reading

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியின் பவுலர்கள் மும்பை பேட்ஸ்மேன்களை திணறடித்து ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சஹார், தேஷ் பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மும்பை அணிContinue Reading

தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கி இருப்பதாக ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். கவர்னர் ஆர்.என்.ரவி தனியார் ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில், அதில், திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை. காலாவதியான கொள்கைகளைக் கொண்டு திராவிட மாடல் என்ற பெயரில் ஆட்சி நடத்துவதாக தெரிவித்து இருந்தார். திராவிட மாடல் கொள்கைகள் ஒரே நாடு ஒரே பாரதம்Continue Reading

நீலகிரியில் கடந்த ஒரு வாரமாக மேகமூட்டம் மற்றும் மழை பெய்த நிலையில் வெப்பம் தணிந்து குளுகுளு காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சமவெளி பகுதிகளில் இம்முறை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதலே உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன்Continue Reading

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இந்தியாவின் முன்னணி வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்திய அணியின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 16-21, 21-17, 21-19 என்ற செட் கணக்கில் மலேசிய ஜோடியானContinue Reading