சென்னை பூவிருந்தவல்லியில் பிரபல ரவுடியும், பாஜக பிரமுகமான ஊராட்சி மன்ற தலைவர் பி பி ஜி சங்கர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் பகுதியைச் சேர்ந்தவர் பி பி ஜி சங்கர். பிரபல ரவுடியான இவர் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. வளர்பிறை ஊராட்சி மன்ற தலைவராகவும் பாஜகவில் எஸ் சி,எஸ் டி,மாநில பொருளாளராக பதவி வகித்து வந்தார்.Continue Reading

தினமும் 12 மணி நேர வேலை மசோதா மீதான செயலாக்கம் நிறுத்து வைக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளடு. இந்த மசோதா பற்றி, சென்னை தலைமை செயலகத்தில், இன்று தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில்…Continue Reading

ஏப்ரல் 23 நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ வெளியான விவகாரம் தொடர்பாக, ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என ஆளுநரிடம் பாஜக நிர்வாகிகள் கரு.நாகராஜன், வி.பி. துரைசாமி உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல்Continue Reading

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. 12 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளதால் மதுரை மாநகரமே கோலகலம் பூண்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரபலம். இன்று சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை சிறப்பு பூஜையைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி ஆகியோர் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அதன் பின்னர் 10.35Continue Reading

தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சட்டத்தை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது என்றும், பேரவையில் நிறைவேற்றிய தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை ஆளுநரில் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்து,Continue Reading

ஏப்ரல் 22 திமுக தலைவர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கேஎன் நேரு, டிஆர் பாலு உள்பட திமுக கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து பட்டியல் என்ற பெயரில் பாஜக தலைவர் அண்ணாமலை சில ஆவணங்களை கடந்த வாரம் வெளியிட்டார். அண்ணாமலை வெளியிட்டு இருக்கும் ஆவணங்கள் போலியானவை என்றும் அவற்றில் உண்மையில்லை என்றும் திமுக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்Continue Reading

பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், டெல்லியில் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்யும்படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 19 ஆண்டுகளாக வசித்து வந்த டெல்லி துக்ளக் லேன்Continue Reading

குஜராக் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி தோல்வியை தழுவியது லக்னோ அணி. 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமயிலான லக்னோவும் , ஹர்திக் பாண்டியா தலைமயிலான குஜராத் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.Continue Reading

ஏப்ரல் 21 பிறை தெரிந்ததை அடுத்து தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாட்டப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முகமது சலாவுதீன் ஆயூப் அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதம் மார்ச் 24 ம் தேதி தொடங்கியது. இஸ்லாமியர்களின் முக்கியமான ஐந்து கடமைகளில் ஒன்றாக ரம்ஜான் நோன்பு கருதப்படுகிறது. பிறை தெரிந்தது முதல் தினமும் சூரிய உதயத்திற்கு முன் நோன்பினை துவக்கி, பகல் முழுவதும் தண்ணீர், உணவுContinue Reading

ஏப்ரல் 21 தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை இச்சட்டம் கொண்டுள்ளது. 12 மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அதற்கேற்ற வசதிகள் இருந்தால் மட்டுமே இதற்கான அனுமதி வழங்கப்படும். குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உதாரணமாக, மின்னணுவியல் துறையில்இருக்கக்கூடிய நிறுவனங்கள், தோல் அல்லாத காலணிகள் உற்பத்திச் செய்யக்கூடிய தொழில்கள்,Continue Reading