*விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 10 பேர் உயிரிழப்பு … காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி. *தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு…. புற்றுநோய் உண்டாக்கும் Rhodaminbe-B நிறமி இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை *தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்….காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. நியமனம்.Continue Reading

*மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸ் கட்சியின் ஒன்பது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் பரபரப்பு … கடந்த 2018-ல் வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்தததாக ₹210 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக பொருளாளர் அஜய் மக்கான் புகார். *காங்கிரஸ் கட்சியின் மேல் முறையீட்டு மனுவை அடுத்து வங்கி கணக்குகள் தற்காலிகமாக இயக்க வருமான வரி மேல்முறையீடு தீர்ப்பாயம் அனுமதி… தீர்ப்பாயம் உத்தரவை தொடர்ந்து காங்கிரஸ்Continue Reading

*அரசியல் கட்சிகள் பெருமளவு நிதிகளை வாங்கிக் குவிப்பதற்கு வகைசெய்யும் தேர்தல் பத்திரம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு … தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்ட விரோதாமானவை, தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடடினயாக நிறுத்தவும் உத்தரவு . *கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்கள் தவிர வேறு வழிகள் உள்ளன … தேர்தல் பத்திரம் தொடர்பான சட்ட திருத்த மசோதாக்களும் கம்பெனி சட்டContinue Reading

*மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற, சட்ட மன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்யக் கூடாது .. ஒரு நாடு ஒரு தேர்தல்’ திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது .. . முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இரண்டு முக்கிய தீர்மானங்கள் சட்டப் பேரவையில்குரல் வாக்கெடு்ப்பு மூலம் நிறைவேறியது. *ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று, அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைந்து மத்தியில் அமையும் ஆட்சி கவிழுமானால், அனைத்து மாநிலங்களையும்Continue Reading

*டெல்லி நோக்கி விவசாயிகள் நடத்திய முற்றுகை போராட்டம் காரணமாக தலைநகரத்தின் எல்லையில் பலத்த கட்டுப்பாடு. … போராட்டத்தை கலைக்க டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகளை மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு. *கண்ணீர் புகைக் குண்டுகளை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக முன்னேறியதால் பதற்றம்… தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை கலைக்க போலீசர் முயற்சி *டெல்லியில் பகல் முழுவதும் பல மடங்கு கூடுதல் பாதுகாப்பு … முக்கியமான பல மெட்ரோContinue Reading

*சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்… 6 மாதங்களாக சிறையில் இருந்துக்கொண்டு அமைச்சராக இருப்பதாலேயே அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் ராஜினாமா. *தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி தமது உரையை படிக்காமல் வெளிநடப்பு … அரசின் உரையை படித்தால் அரசியலமைப்புச் சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் படிக்கவில்லைContinue Reading

*பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ,,, சரியான நேரத்தில், அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் பேட்டி. *கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே தொகுதிகளை வழங்க திமுக மறுத்து வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் … வாக்களிக்கும் மக்களை மட்டுமே அதிமுக நம்புவதாகவும் கருத்து. *உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் மக்களவைத்Continue Reading

*பாகிஸ்தான் தேசிய நாடாளுமன்றத்தின் 266 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் முன்னணி நிலவரம் தெரியவந்துள்ள 163 தொகுதிகளில் சிறையில் உள்ள இம்ரன்கானின் தெக்ரிக் கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சைகள் 73 இடங்களில் முன்னிலை…. நவாஷ் ஷெரிப்பின் முஷ்லிம் லீக் கட்சி 48 இடங்களிலும் பிலவால் புட்டோ வின் மக்கள் கட்சி 35 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தகவல். *பாகிஸ்தான் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இம்ரான்கானின் தெக்ரிக் கட்சி ஆதரவு பெற்றContinue Reading

*சென்னையில் அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம் ஆர்.ஏ.புரத்தில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர் ஒருவன் ஈ மெயில் வெடிகுண்டு மிரட்டல் … பள்ளிகளில் சோதனை செய்ததில் எந்தவித மர்மப் பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று காவல்துறை விளக்கம். *பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் … சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு, விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாContinue Reading

*முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள வாய்ப்புகளை ஸ்பெயின் மாநாட்டில் எடுத்துரைத்தன் விளைவாக ரூ.3,440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன… தமிழ்நாட்டை தொழில்துறையில் தலைசிறந்த மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் பத்து நாள் வெளிநாட்டுப் பயணம் முடிந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி. *சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் ஆஜர்… கடந்த வாரம் வீட்டில்Continue Reading