Skip to content

இயக்குநர் ஆகிறார் ரவி மோகன்.

நடிகர் ரவி மோகன், இப்போது .தான் நடித்து கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு, இயக்குநராக...

கோடி ரூபாய் கொடுத்தாலும் வடிவேலுடன் நடிக்க நடிகை மறுப்பு.

‘கோடி ரூபாய் தந்தாலும் வடிவேலுவுடன் மட்டும் நடிக்க மாட்டேன் ‘ என கவர்ச்சி...

கண்ணதாசனுக்கே பாடல் சொன்ன நாகேஷ்.

’ இயக்குனர் சிகரம்’ கே.பாலச்சந்தர். தான் இயக்கிய அனைத்து படங்களிலும், நாகேஷுக்கு ஒரு...

‘பேட்ட’ பட இயக்குநருடன் மீண்டும் இணைகிறார் ரஜினி.

பேட்ட’ டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் ,ரஜினிகாந்துடன் மீண்டும் இணைய உள்ளார். தொடர் தோல்விகளை...

சங்கீதா, 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு வருகிறார்.

கேரளாவை சேர்ந்த சங்கீதா, 1978 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'சினேகிகன் ஒரு...

நடிகையை வறுத்தெடுத்த அமைச்சர்

பெங்களூருவில் அண்மையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில்,...

‘ குட் பேட் அக்லி’ பிரிவியூ ஷோ ஒரு நாள் முன்னதாக !

‘குட் பேட் அக்லி’படத்தின் ப்ரீமியர் காட்சியை , பட ரிலீசுக்கு முதல் நாள்...

படக்காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சியில் ராஜமவுலி.

மகேஷ்பாபு படத்தின் ‘ஷுட்டிங்’ காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. ‘ஆர்...

கற்பகம் படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்க மறுத்தது ஏன் ?

எம் ஜி ஆர் படங்களை பொருத்தவரை, அவர்தான் , தனது படத்தில் நடிக்கும்...

டிராகன் இந்தியில் ரிலீஸ், வெற்றி பெறுமா?

பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. ரசிகர்கள்...

விஜய், கடைசி படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.

தனது ,அயராத உழைப்பால் தமிழ் சினிமாவில் முன்னுக்கு வந்துள்ள ‘இளைய தளபதி ’விஜய்,...

ரஜினி மகள், திருத்தணி முருகனிடம் உருக்கம்.

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தின் இரு மகள்களும், சினிமாவில்தான் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தந்தையின் ஆசியும்,ஆதரவும்...

பாக்கியராஜ்க்கு பார்த்தீபன் செய்த உதவி.

பாரதிராஜாவின் பட்டறையில் மெருகேற்றப்பட்ட வர்கள் 80 மற்றும் 90 - களில், கோடம்பாக்கத்தை...

2-ம் வகுப்பு படிக்கும் போது பிரதமருக்கு வாழ்த்து சொன்ன விவேக்.

‘ சின்ன கலைவாணர் ‘என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக், 2 ஆம் வகுப்பு...

தமன்னா, காதலரை பிரிந்தது ஏன் தெரியுமா ?

‘கேடி ‘ படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை தமன்னா. இங்கு...

முதல் படத்தில் ஜெயப்பிரதாவின் சம்பளம் 10 ரூபாய்.

ஜெயப்பிரதா என்றதும், 80 ‘கிட்ஸ்’களுக்கு நினைவுக்கு வரும் படம் ‘நினைத்தாலே இனிக்கும்’ இப்போதும்...

பட்டம் துறந்தார் நயன்தாரா.

‘லேடி சூப்பர் பட்டம் வேணாம்’ என நயன்தாரா சொல்லிட்டாங்க. இது குறித்து நயன்தாரா...

விஜயகாந்தை வைத்து படம் தயாரிக்கச் சொன்ன ரஜினி.

ரஜினிகாந்த், உயர உயர பறந்து கொண்டிருந்த காலகட்டம் அது. ரஜினிக்கு, கதை உருவாக்கிய...

அரவிந்த் சாமி மகளை மணந்தவர் யார் ?

நடிகர் அரவிந்த்சாமியின் மகளுக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றது. இது , காதல் கல்யாணம்....

சிம்பு படத்தில் நடிக்கிறார் சந்தானம்.

சிம்புவின் புதிய படத்தில் சந்தானம் ! --- காமெடி கலாட்டாவாக உருவாகும் சிம்புவின்...

ரஜினி குணம் அடைய உண்ணாவிரதம் இருந்த ஸ்ரீதேவி !

ரஜினிகாந்துக்கும் , ஸ்ரீதேவிக்கும் ‘மூன்று முடிச்சு’ முக்கியமான படம். அதுவரை குழந்தை நட்சத்திரமாக...

இயக்குநர் ஆகிறார் ரவி மோகன்.

நடிகர் ரவி மோகன், இப்போது .தான் நடித்து கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு, இயக்குநராக களமிறங்க முடிவு செய்துள்ளார்.. படத்தொகுப்பாளர் மோகனின் இரண்டாவது மகன் ரவி. ஜெயம் எனும் படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இதனால் தனது பெயரை ‘ஜெயம் ரவி’ என மாற்றிக்கொண்டு படங்களில் நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு, ஜெயம் ரவிக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. இருவரும் பிரிந்து விட்டார்கள்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் வடிவேலுடன் நடிக்க நடிகை மறுப்பு.

‘கோடி ரூபாய் தந்தாலும் வடிவேலுவுடன் மட்டும் நடிக்க மாட்டேன் ‘ என கவர்ச்சி நடிகை சோனா சொல்லி இருப்பது கோடம்பாக்கத்தில் புயலை கிளப்பியுள்ளது.. 2001 ஆம் ஆண்டு அஜித் ஹீரோவாக நடித்து வெளியான ‘பூவெல்லாம் உன் வாசம் ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனா. தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களிலேயே சோனா தோன்றி வந்தார். ‘ பத்து

கண்ணதாசனுக்கே பாடல் சொன்ன நாகேஷ்.

’ இயக்குனர் சிகரம்’ கே.பாலச்சந்தர். தான் இயக்கிய அனைத்து படங்களிலும், நாகேஷுக்கு ஒரு கேரக்டரை வைத்திருப்பார் . ரஜினிகாந்த் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கிய‘தில்லுமுல்லு ‘படத்தில் நடிகராகவே நடித்திருப்பார்,நாகேஷ், கே.பாலச்சந்தர் –நாகேஷ் கூட்டணி அமைத்து .1967 ஆம் ஆண்டு வெளியான படம் அனுபவி ராஜா அனுபவி. நாகேஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். முத்துராமன், மனேரமரா, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.என்.லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, அனைத்து பாடல்களையும், கவியரசர் கண்ணதாசன்

‘பேட்ட’ பட இயக்குநருடன் மீண்டும் இணைகிறார் ரஜினி.

பேட்ட’ டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் ,ரஜினிகாந்துடன் மீண்டும் இணைய உள்ளார். தொடர் தோல்விகளை கொடுத்து வந்த ‘சூப்பர்ஸ்டார்’ரஜினி காந்துக்கு மிகப்பெரிய வெற்றியை தந்த படம் ‘பேட்ட’. இதனை ரஜினியின் ரசிகரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப்படம் 2019 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் திரைக்கு வந்தது. படம் அமோக வெற்றி பெற்றது. அதன் பிறகு இளம் இயக்குநர்களுடன் ரஜினி கூட்டணி அமைத்தாலும் மீண்டும் கார்த்திக்

சங்கீதா, 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு வருகிறார்.

கேரளாவை சேர்ந்த சங்கீதா, 1978 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘சினேகிகன் ஒரு பெண்ணு’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ‘என் ரத்தத்தின் ரத்தமே ‘படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக காலடி எடுத்து வைத்தார்.பிறகு, தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்தார். விஜயுடன் சங்கீதா இணைந்து நடித்த ‘ பூவே உனக்காக’ படம் அவரை தமிழகம் முழுவதும் பிரபலமாக்கியது.விக்ரமன் இயக்கி இருந்தார். வெள்ளிவிழா கொண்டாடிய படம். ஒளிப்பதிவாளர்

நடிகையை வறுத்தெடுத்த அமைச்சர்

பெங்களூருவில் அண்மையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில், நடிகை ராஷ்மிகா மந்தனா, கலந்துகொள்ளவில்லை. கன்னட சினிமா மூலம் திரைஉலக பயணத்தை ஆரம்பித்த ராஷ்மிகா, விழாவில் பங்கேற்காதது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் கவுடா, மேடையில் வெளிப்படையாகவே பேசினார். ‘ராஷ்மிகா மந்தனா தனது சினிமா வாழ்க்கையை, ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட படம் மூலம் கர்நாடகாவில் தொடங்கினார் –

‘ குட் பேட் அக்லி’ பிரிவியூ ஷோ ஒரு நாள் முன்னதாக !

‘குட் பேட் அக்லி’படத்தின் ப்ரீமியர் காட்சியை , பட ரிலீசுக்கு முதல் நாள் இரவிலேயே நடத்த அதன் விநியோகஸ்தர் முடிவு செய்துள்ளார். ‘விடாமுயற்சி ‘படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ‘அல்டிமேட்ஸ்டார்’ அஜித் நடித்த திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ‘குட்

படக்காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சியில் ராஜமவுலி.

மகேஷ்பாபு படத்தின் ‘ஷுட்டிங்’ காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. ‘ஆர் ஆர் ஆர்’ படத்துக்கு பிறகு எஸ்.எஸ். ராஜமவுலி ‘பான் வேர்ல்டு ‘படத்தை இயக்கி வருகிறார். மகேஷ்பாபு நாயகனாக நடிக்கிறார், இருவரும் இணையும் முதல் படம் இது. தற்காலிமாக ‘SSMB 29’ என படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. மகேஷ்பாபு தவிர, பிரியங்கா சோப்ரா, பிருதிவிராஜ் ஆகிய இருவரும் இந்த படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. ரூ. 1000

கற்பகம் படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்க மறுத்தது ஏன் ?

எம் ஜி ஆர் படங்களை பொருத்தவரை, அவர்தான் , தனது படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களையும் முடிவு செய்வார். அவரது, இந்த பிடிவாதம், கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் பலிக்கவில்லை. ஏன் ? பார்க்கலாம். குடும்பப்பாங்கான படங்களை வழங்குவதில் கில்லாடியான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், 1962 ஆம் ஆண்டு வெளியான சாரதா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதனை அடுத்து தெய்வத்தின் தெய்வம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த இரு படங்களுமே நல்ல

டிராகன் இந்தியில் ரிலீஸ், வெற்றி பெறுமா?

பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. ரசிகர்கள் அந்தப்படத்தை கொண்டாடி தீர்த்தனர்.இளைஞர்கள் மத்தியில் பிரதீப் ரங்கநாதனுக்கு ,தனி ‘கிரேஸ் ‘ உருவானது. இந்த நிலையில் ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஸ்வந்த் மாரிமுத்து, ‘இளம் ஹீரோ’பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘டிராகன்’ என்ற படத்தை டைரக்டு செய்தார். இதில் , காயது லோகர், அனுபமா பரமேசுவரன், ஜார்ஜ் மரியன், கே. எஸ். ரவிக்குமார், கவுதம்

விஜய், கடைசி படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.

தனது ,அயராத உழைப்பால் தமிழ் சினிமாவில் முன்னுக்கு வந்துள்ள ‘இளைய தளபதி ’விஜய், ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிக்கு நிகரான ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். ரஜினியை விட அதிகமாக சம்பளம் வாங்குகிறார். அரசியலுக்கு வரப்போவதாக சொல்லிவிட்டு, ரஜினி பின் வாங்கிய நாள் முதலே விஜய்க்கு அரசியல் ஆசை வந்து விட்டது. தடாலடியாக விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அப்போதே விஜய்,’ அரசியலில்

ரஜினி மகள், திருத்தணி முருகனிடம் உருக்கம்.

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தின் இரு மகள்களும், சினிமாவில்தான் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தந்தையின் ஆசியும்,ஆதரவும் இருந்தும், இருவரும் குறைந்த பட்ச வெற்றியைக்கூட எட்டவில்லை. மூத்தவரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டதோடு, சினிமாவில் இயக்குநராக களமிறங்கினார். தனுஷை வைத்து’ 3 ‘எனும் படத்தை இயக்கினார். ஓரளவு பெயர் கிடைத்தது. அதன்பின் ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார், படம் சரியாக போகவில்லை. கடைசியாக விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்த ‘

பாக்கியராஜ்க்கு பார்த்தீபன் செய்த உதவி.

பாரதிராஜாவின் பட்டறையில் மெருகேற்றப்பட்ட வர்கள் 80 மற்றும் 90 – களில், கோடம்பாக்கத்தை , தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். இயக்குநர்கள். கணக்கிட்டுப் பார்த்தால், பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, கே.ரங்கராஜ், மனோஜ்குமார், பொன்வண்ணன் என்று நீண்ட பட்டியல் போடலாம். இவர்களில் பாக்யராஜுக்கு தனிப்பெருமை உண்டு. பாக்யராஜை, தனது 16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள் படங்களில் துண்டு துக்கடா வேடங்களில் நடிக்க வைத்த, பாரதிராஜா, தனது ‘ புதிய வார்ப்புகள் ‘ படத்தில்

காசி நகரத்தை செயற்கையாக உருவாக்கும் ராஜமவுலி.

தெலுங்கு தேச சினிமா உலகின் பிரமாண்ட இயக்குநரான ராஜமவுலி,கடைசியாக ஆர் ஆர் ஆர் படத்தை டைரக்டு செய்திருந்தார்.அந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அடுத்து தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ்பாபு நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்குகிறார்.இந்தப்படத்தில் பிரியங்கா சோப்ரா வில்லி கேரக்டரில் நடிக்கிறார்.. இந்த ‘பான் இந்தியா’ படத்துக்கு தலைப்பு வைக்கவில்லை. ரூ.500 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது. தற்போது ஒடிசாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

2-ம் வகுப்பு படிக்கும் போது பிரதமருக்கு வாழ்த்து சொன்ன விவேக்.

‘ சின்ன கலைவாணர் ‘என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக், 2 ஆம் வகுப்பு படிக்கும்போது, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு, கடிதம் மூலம் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன தகவல் –இது . கே.பாலச்சந்தர் இயக்கிய ’ மனதில் உறுதி வேண்டும் ‘என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் விவேக். அதன்பிறகு புதுப்புது அர்த்தங்கள், ஒரு வீடு, இரு வாசல் என அவ ர் இயக்கத்தில் தொடர்ந்து 3

தமன்னா, காதலரை பிரிந்தது ஏன் தெரியுமா ?

‘கேடி ‘ படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை தமன்னா. இங்கு முன்னணி நடிகையாக இருந்த தமன்னா, ‘பாலிவுட்’டுக்கு சென்று அங்கும் கொடி நாட்டினார். இப்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ வெப் தொடரில் நடித்தபோது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். திருமண ஏற்பாடுகளும்

முதல் படத்தில் ஜெயப்பிரதாவின் சம்பளம் 10 ரூபாய்.

ஜெயப்பிரதா என்றதும், 80 ‘கிட்ஸ்’களுக்கு நினைவுக்கு வரும் படம் ‘நினைத்தாலே இனிக்கும்’ இப்போதும் , எப்போதும் இனிக்கும். ‘அதிலும், ‘ஆனந்த தாண்டவமோ’ பாடலும், ஜெயப்பிரதாவின் ஆட்டமும் ,–அது ‘வேற லெவல்’. அவரது, நிஜப்பெயர் லலிதா ராணி . ஆந்திராவின் ராஜமுந்திரியில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை கிருஷ்ணா ராவ் தெலுங்கு திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்தவர்.சிறு வயதிலிருந்தே நாட்டியத்திலும், இசையிலும் கவனம் செலுத்திய ஜெயபிரதா, இரண்டிலும் கரை தொட்டவர். பள்ளி

பட்டம் துறந்தார் நயன்தாரா.

‘லேடி சூப்பர் பட்டம் வேணாம்’ என நயன்தாரா சொல்லிட்டாங்க. இது குறித்து நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை: ‘’நான் நடிகையாக பயணித்துவரும் இந்தப் பாதையில் மகிழ்ச்சி அடைகிறேன். என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது- உங்கள் எல்லையற்ற அன்பும் ஆதரவும்தான் அதற்கு அழகு சேர்த்துள்ளது. என் வெற்றியின்போது என்னை தோளில் சாய்த்து பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னை தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்தீர்கள். நீங்கள் பலரும் எனக்கு

விஜயகாந்தை வைத்து படம் தயாரிக்கச் சொன்ன ரஜினி.

ரஜினிகாந்த், உயர உயர பறந்து கொண்டிருந்த காலகட்டம் அது. ரஜினிக்கு, கதை உருவாக்கிய இயக்குநர்கள், அவரைப்போல் தோற்றம் கொண்ட விஜயகாந்தை அணுகினார்கள். அறிமுக இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்த நடிகர் என்ற அடையாளம் பெற்ற விஜயகாந்த், நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு, கால்ஷீட் கொடுத்து அவர்களையும் வளர்த்து விட்டார். தமிழ் தவிர வேறு மொழி படங்களில் நடிக்காத ஒரே நடிகர் விஜயகாந்த் . திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுக்க முக்கிய காரணமாக

அரவிந்த் சாமி மகளை மணந்தவர் யார் ?

நடிகர் அரவிந்த்சாமியின் மகளுக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றது. இது , காதல் கல்யாணம். 1991 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தளபதி’.ர்ஜினியுடன் முதன் முறையாக இணைந்த மணிரத்னம், இதனை ‘பான் இந்தியா’ படமாக எடுக்க திட்டமிட்டார். அனைத்து மொழி நடிகர்களையும் படத்தில் நடிக்க வைக்க ஆசை. மலையாள ‘சூப்பர்ஸ்டார்’ மம்முட்டியை ஒப்பந்தம் செய்தார். இந்தியில் இருந்து அம்ரிஷ் புரி. தெலுங்கில் ஒரு மூத்த நடிகரிடம் பேச்சு நடந்தது. ஏனோ கை

சிம்பு படத்தில் நடிக்கிறார் சந்தானம்.

சிம்புவின் புதிய படத்தில் சந்தானம் ! — காமெடி கலாட்டாவாக உருவாகும் சிம்புவின் புதிய படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார், சந்தானம். கவுண்டமணி, வடிவேலு, விவேக் ஆகியோருக்கு அடுத்தபடியாக தமிழில் நகைச்சுவை வேடங்களில் கலக்கி வந்தவர் சந்தானம். தனது மூத்த நடிகர்கள் , கதாநாயகனாக புது அவதாரம் எடுத்து, ‘டூயட்; பாடி இருந்ததால், சந்தானத்துக்கும் ‘டூயட்’ ஆசை வந்தது ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

ரஜினி குணம் அடைய உண்ணாவிரதம் இருந்த ஸ்ரீதேவி !

ரஜினிகாந்துக்கும் , ஸ்ரீதேவிக்கும் ‘மூன்று முடிச்சு’ முக்கியமான படம். அதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவி இந்தப்படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அபூர்வ ராகங்கள் படத்தில் ஓரிரு காட்சிகளில் வந்துபோன ரஜினிகாந்த், மூன்று முடிச்சு படத்தில்தான் முழுமையாக வந்தார். படத்தை தூக்கி நிறுத்தியதே இவர்தான். வில்லனாக அதில் கலக்கிய ரஜினி, பின்னார் ஹீரோவானார். ரஜினியும்,ஸ்ரீதேவியும் 18 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். எல்லாமே வெற்றிப்படங்கள். ப்ரியா, போக்கிரிராஜா, ராணுவவீரன், தர்மயுத்தம்,

அல்லு அர்ஜுனை இயக்கும் அட்லி !

‘ராஜாராணி ‘சினிமா மூலம் இயக்குநராக அறிமுகமான -அட்லீ, தமிழில் தொடர்ச்சியாக வெற்றிப்படங்கள் கொடுத்தார். இதனை அடுத்து இந்திக்கு சென்றார்.அங்கு ஷாருக்கானை வைத்து இயக்கிய ’ஜவான்’ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இது- இந்திக்கு சென்ற தமிழ் டைரக்டர்கள் யாரும் செய்யாத சாதனை. இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அட்லி இயக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது. அட்லீ இயக்கத்தில் சல்மான்கான்

தங்கம் கொண்டு வந்த அஜித் ரசிகர்கள்!

ரஜினி, விஜய்க்கு நிகராக ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர், அஜித். ஆனால் . ஏனோ முற்றும் துறந்த முனிவர் ஆகி விட்டார், ‘அல்டிமேட் ஸ்டார்’. ‘எனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம், ‘என சொல்லி ,பல ஆண்டுகளுக்கு முன்பே அவற்றை கலைத்து விட்டார். சில மாதங்களுக்கு முன்பு ‘ எனக்கு செல்லப்பெயரும் வேண்டாம்.. தல..அல்டிமேட் ஸ்டார்’ என குறிப்பிட வேணாம். ஒண்ணு ‘ ஏகே ‘ன்னு அழையுங்க.. அல்லது அஜித் என்றே கூப்பிடலாம்’

‘பஞ்ச் டயலாக்’குளை தெறிக்க விடும் அஜித்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. ‘விடாமுயற்சி’ யை தொடர்ந்து’ அல்டிமேட் ஸ்டார்’ அஜித், நடித்துள்ள படம். அவருடன், திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்கிறார். வரலாறு படத்துக்குப்பிறகு அவர் மூன்று வேடத்தில் நடிக்கும் , இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை

எம்.ஜி.ஆரை.எம்.ஆர் .ராதா சுட்டது ஏன்?

கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தை உலுக்கிய முக்கிய நிகழ்வுகளில் பிரதானமானது, எம்.ஆர்.ராதாவால், எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவம். 1967 -ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும், அதற்கான ஆயத்தங்களில் இறங்கி இருந்த நேரம் அது. எம்.ஜி.ஆரை. பரங்கிமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திமுக தலைவர் அண்ணா அப்போதுதான் அறிவித்திருந்தார். சினிமாவை பொறுத்தவரை ,‘அரசகட்டளை’ படத்தை கிட்டத்தட்ட முடித்து விட்டு காவல்காரன் படத்தில் , எம் ஜி ஆர் நடித்துக்கொண்டிருந்த

ஷாருக்கானின் வீட்டு வாடகை ரூ. 24 லட்சம் !

இந்தி சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ ஷாருக்கான் ,இப்போது மும்பையின் பந்த்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மன்னத் என்ற பங்களாவில் வசித்து வருகிறார். 25ஆண்டுகளாக குடியிருக்கும் அந்த வீட்டை புனரமைக்க அவர் முடிவு செய்துள்ளார். கடலோர பகுதியில் உள்ள அந்த வீட்டை இடித்துக்கட்ட மும்பை மாநகராட்சியில் அண்மையில் அனுமதி வாங்கினார். புதிய இல்லம் ரெடி ஆகும்வரை வாடகை வீட்டில் குடியேற ஷாருக்கான் முடிவு செய்தார். பந்த்ராவின் பாலிஹில் பகுதியில் அவர் வாடகை வீடு

துபாயில் திருமண நாளை கொண்டாடிய ரஜினி.

‘வேட்டையன்’ படத்தை அடுத்து ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’படத்தில் நடித்து வருகிறார். சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, நம்ம ஊர் சத்யராஜ் , ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர். படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

மோகன்லால் படத்திற்கு குறி !

மோகன்லால் படம் ரிலீஸ் ஆகும் தேதியில் , மலையாள சினிமா உலகம்‘ஸ்டிரைக்’ கை அறிவித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் ஜுன் மாதம் 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். கேளிக்கை வரியை மாநில அரசு குறைக்க வேண்டும், நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது, அவர்கள் பிரதான கோரிக்கை. இந்த போராட்டத்துக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை உள்ளடக்கிய கேரள

எம்.ஜி.ஆர். இடம் ஒரு மாதம் ஹால்ஷீட் கேட்ட அண்ணா.

தமிழக அரசியலை புரட்டிப்போண்ட ஆண்டு 1967. அந்த வருஷம்தான், சட்டப்பேரவை தேர்தலில் , காங்கிரசை வீழ்த்தி திமுக ஆட்சிக்கு வந்தது, அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். அப்போது அண்ணா தலைமையில் திமுக நிஜமாகவே ‘மெகா’ கூட்டணி அமைத்திருந்தது.ராஜாஜியின் சுதந்திரா , காயிதே மில்லத்தின் முஸ்லிம் லீக், மபொசியின் தமிழரசு கழகம், பார்வர்டு பிளாக்,கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் , திமுக அணியில் அங்கம் வகித்தன. இந்த கட்சி தலைவர்கள் பங்கேற்ற