செப்டம்பர்,12 மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியிலும், அடுத்த ஆண்டு ஜனவரியிலும் முடிவடைகிறது. எனவே ஒரே நேரத்தில் 5 மாநில சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர்கள் இந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று முன்னேற்பாடுகளை பார்வையிட்டு வருகிறார்கள். மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே ஆய்வுகளை முடித்து விட்டனர்.Continue Reading

செப்டம்பர்,11- கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளுக்கு எப்போதுமே ஜுனியர் பார்ட்னர்களால் தொல்லை தான்.பீகாரில் ‘இந்தியா’கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாருக்கும், ஆர்.ஜே.டி.தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கும், தோழமை கட்சிகளால் கூடுதல் இம்சை உருவாகியுள்ளது. பீகாரில் கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் நிதிஷ்  கட்சி கூட்டு வைத்திருந்தது.லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானும் இவர்களுடன் இருந்தார். மொத்தம் 40 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் 39 இடங்களைContinue Reading

செப்டம்பர்,09- முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைலையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒரு காலத்தில் கர்நாடக மாநிலத்தில் வலுவான கட்சியாக இருந்தது. தேவகவுடாவும், அவரது மகன் குமாரசாமியும் முதலமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்.அங்கு பாஜக, கால் ஊன்றிய பின் , தேவகவுடா கட்சி கட்டெறும்பாகி விட்டது. கடந்த சட்டசபை தேர்தலில் அவரது கட்சி படுதோல்விஅடைந்தது. இருப்பினும் ’மக்களவை தேர்தலில் நாங்கள் தனித்தே நிற்போம்-, கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை –ஐந்தாறு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும்Continue Reading

செப்டம்பர்,09 – ஆறு மாநிலங்களில் காலியாக இருந்த ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ’இந்தியா’ கூட்டணி கூட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக மூன்று இடங்களை கைப்பற்றியுள்ளது. மே.வங்காள மாநிலத்தில் பாஜக வென்ற இடத்தில் ,இப்போது திரினாமூல் காங்கிரஸ் வாகை சூடியுள்ளது. உ.பி.யிலும் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. இதனால் ’இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முடிவுகள் எப்படி? உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சிContinue Reading

செப்படம்பர், 07- பா.ஜ.க.வுக்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ எனும் பெயரில் வலிமையான கூட்டணியை உருவாக்கியுள்ளன. அண்மையில் மும்பையில் நடந்த ‘இந்தியா’ அணியின் ஆலோசனை கூட்டத்தில் ‘நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது’என முடிவு செய்யப்பட்டது. ஆனால் சில மாநிலங்களில் ‘இந்தியா’வை எதிர்த்து ‘இந்தியா’யாவே போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் கேரள மாநிலத்தில் எலியும் பூனையுமாக உள்ளனர்.அங்கு இரு கட்சிகள்Continue Reading

செப்டம்பர்,07- இந்தியா சுதந்தரம் அடைந்த போது நாட்டில் கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சி மட்டுமே இருந்தது.மத்தியிலும் , அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆண்டது.அந்த கட்சியின் சரிவு கேரள மாநிலத்தில் இருந்து தொடங்கியது. 1957 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை அகற்றி விட்டு, கேரள மாநித்தில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அதன் பின்னர் நாட்டில் பல்வேறு கட்சிகள் வேர் விட்டன.கம்யூனிஸ்ட்கள் தமிழகம்,ஆந்திரா,மே.வங்காளம்,பீகார் போன்ற மாநிலங்களில் வளர்ந்தார்கள். தமிழகத்தில் திமுக உருவானது. வடக்கேContinue Reading

செப்டம்பர்,05- அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கும், ஆர்.ஜே.டி. கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கும் உள்ள ஒற்றுமை யாதெனில், இருவருமே அசைவ பிரியர்கள். இன்னொரு ஒற்றுமையும் உண்டு. அஜித் அருமையாக பிரியாணி சமைப்பார்.அதுபோல் லாலுவும் மட்டன் கறி வைப்பதில் மடல் வாங்கியவர் என சொல்லலாம். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு இருவருமே தங்கள் கையால் அசைவ உணவு தயாரித்து, அவர்கள் சாப்பிடுவதை அழகு பார்க்கும் குணம் கொண்டவர்கள் . அஜித் அவுட்டோர் ஷுட்டிங்கிலும்Continue Reading

செப்டம்பர்,04- மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த 26 கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ எனும் பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. அவைகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை ( செவ்வாய்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 8 மாதங்களில் மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல், பொதுத்தேர்தலுக்கான பரிசோதனைக்களமாக அமைந்துள்ளது. திரிபுராவில் இருContinue Reading

செப்டம்பர்03- ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வடிவமைத்துள்ள‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களின் 3 வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நடந்து முடிந்துள்ளது. ‘தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தோழமை கட்சிகள் ஓரிரு வாரங்களில் முடிக்க வேண்டும்’ என இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மே.வங்காளம், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைத்தவிர மற்ற மாநிலங்களில் தொகுதி பங்கீட்டில் பிரச்சினை இருக்காது.தமிழ்நாட்டில் தொகுதி பங்கீடு ஒரு சம்பிரதாயமாகவே இருக்கும்.கடந்த தேர்தலில் கொடுக்கப்பட்ட தொகுதிகளையேContinue Reading

ஆகஸ்டு,31- உத்தரபிரதேச மாநிலம் கோண்டா பகுதியை சேர்ந்தவர் அபர்ஜித். கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அபர்ஜித்தை துப்பாக்கி முனையில் வழிமறித்த இரண்டு பேர், அவரது பைக், செல்போன், மற்றும் பர்சை பறித்துக்கொண்டுதப்பிச்சென்றனர். இது குறித்து அபர்ஜித் அங்குள்ள சாபியா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.இந்த கொள்ளை தொடர்பாக அங்கித் வர்மா உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனால் அங்கித் தலைமறைவானார்.Continue Reading