உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் தரைவரிசைப் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 78 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்கடன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம், உலகின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்தியா உட்பட உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் குறித்து அந்தந்த நாடுகளின் மக்களிடம் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இந்நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது.Continue Reading

கடந்த 2019ஆம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ்மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, “எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?” என கூறியிருந்தார். ராகுல்காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவைContinue Reading

2022-23 நிதியாண்டில் திருப்பதியில் ரூ.1,520 கோடி காணிக்கை பெறப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயில் உலகின் பணக்கார கோயில்களின் ஒன்றாகும். திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்ய வருவார்கள். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். இங்கு வரும் மக்கள் சுவாமியை தரிசனம் செய்த பின் உண்டியலில்,Continue Reading

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டதிலிருந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. வரும் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைப்போம் என்று ஆளுங்கட்சியான பா.ஜ.க கூறிவருகிறது. எதிர்க் கட்சியான காங்கிரஸோ, மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்று நம்பிக்கையுடன் கூறிவருகிறது. மூன்றாவது பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம், கணிசமான தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்தContinue Reading

2024 நாடாளுமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் காங்கிரஸூக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கணித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் பேட்டி ஒன்றில் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் நான் இருந்திருந்தால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் சிறிய கட்சிகளை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்க ஊக்குவித்திருப்பேன். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கான புதிய காரணத்தை கண்டுபிடித்துContinue Reading

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 1000-க்கும் கீழ் இருந்த தினசரி தொற்று பாதிப்பு தற்போது 3000 கடந்து பதிவாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி 3,095 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கேரளாவில்தான் அதிக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 4375 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 3090 பேருக்கு தொற்று பாதிப்புContinue Reading

“இந்தியாவுக்கு வந்தவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால், அங்கிருப்பவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. அங்கே வலி இருக்கிறது.” – மோகன் பகவத் இந்துத்துவ தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் பலமுறை, `இந்தியாவிலிருக்கும் முஸ்லிம்களின் முன்னோர்கள் இந்துக்கள்தான். கட்டாயப்படுத்தி அவர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டனர்’ என்று கூறியிருக்கின்றனர். இப்படியிருக்க, இஸ்லாமியக் குடியரசு நாடான பாகிஸ்தானில் இருப்பவர்கள், இந்தியாவிலிருந்து பிரிந்ததைத் தவறு என்று நினைப்பதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார். மறைந்த ஹேமு கலானியின்Continue Reading

மேற்கு வங்கத்தின் ஜி.எஸ்.டி. பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்று மத்திய பா.ஜ.க. அரசை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கினார். மேற்கு வங்கத்தின் மீதான மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரண்டு நாள் தர்ணாவை கடந்த புதன்கிழமையன்று தொடங்கினார். இதுக்குறித்து மம்தா பேசுகையில், அவர்கள் (மத்திய பா.ஜ.க. அரசு) கூட்டாட்சி அமைப்பை சீரழித்து வருகின்றனர். பா.ஜ.க. அல்லாத அனைத்து மாநிலங்களையும்Continue Reading

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை கேட்டு தொடரப்பட்ட வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதத்தை குஜராத் நீதிமன்றம் விதித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் முதுகலை பட்டத்தின் விவரங்களை வழங்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு அளித்தார். இந்த மனு தொடர்பாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு தலைமை தகவல் ஆணையம் எனப்படும் சிஐசி உத்தரவிட்டது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில்Continue Reading