பிரமாண்ட படங்களின் பிதாமகனான இயக்குநர் ஷங்கர்,ஆரம்பத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக பணியாற்றியவர். எஸ்.ஏ.சி.யின் மகன் விஜயை வைத்து அவர் ஜீன்ஸ் படத்தை  இயக்குவதாக இருந்தார். இந்தப்படத்துக்காக ஷங்கர் கேட்ட தேதிகள் மலைக்க வைப்பதாக இருந்ததால் விஜய், அதில் நடிக்கவில்லை. இந்திப்படமான ’த்ரி இடியட்ஸ்’ தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டபோது  ஷங்கருடன் விஜய் இணையும் வாய்ப்பு உருவானது. ‘நண்பன் ‘ என்ற பெயரில் தயாரான அந்தப் டம் பெரிய வெற்றி அடைந்தாலும் மீண்டும்  ஷங்கர்-விஜய்Continue Reading

அண்ணாத்த படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.அடுத்த மாதம் வெளியாகும் இந்த படத்தில் இடம் பெறும் ‘காவலா’ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது வெளியான சில நாட்களில் இரண்டு கோடிக்கும் அதிகமான  பார்வையாளர்கள், இந்தப்பாடலை யூடியூப்பில் பார்த்துள்ளனர். ஜெயிலர் படத்தை முடித்த கையோடு ஓய்வு ஏதும் எடுக்காமல் ’லால் சலாம்’ படத்தின் ஷுட்டிங்கில் ரஜினிகாந்த் பங்கேற்றார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாContinue Reading

ஜுலை,12- தனியார் தொலைக்காட்சிகளில் புதிய சினிமாக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டபோது, தமிழக  திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்குரல் எழுப்பினர். ‘தியேட்டர்களில் படங்கள் வெளியாகி , 6 மாதங்கள் கழித்தே டிவிக்களில் ஒளிபரப்ப வேண்டும்’ என கெடு வைத்தனர். இந்த கோரிக்கையை, சில தயாரிப்பாளர்களே ஏற்கவில்லை. தியேட்டரில் வெளியாகி ஓடாத படங்களை நல்ல விலைக்கு தனியார் தொலைக்காட்சிகளுக்கு தயாரிப்பாளர்கள் விற்று காசு பார்த்தனர். ஒடாத அந்த படங்கள் சில நாட்களிலேயே டிவிக்களில் ஒளிபரப்பானது. தியேட்டர்Continue Reading

ஜுலை,12- தேனி அல்லிநகரத்தில் இருந்து சினிமா கனவில் சென்னை நகருக்கு வந்த பாரதிராஜாவை அடையாளம் கண்டு, அவரை இயக்குநர் ஆக்கியவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. தனது அம்மன் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் ராஜ்கண்ணு தயாரித்த 16 வயதினிலே படம், தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்கியது. கனவு தொழிற்சாலைக்குள்  நட்சத்திரங்கள், இயக்குநர்கள் போன்ற புதிய வரவுகளுக்கு பாதை போட்டது ராஜ்கண்ணுவின் அந்தப்படம் தான். 1977 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் கமல்ஹாசன், ரஜினிகாந்த்,Continue Reading

தமிழில் ஷங்கர் போல், தெலுங்கில் பிரமாண்ட  சினிமாக்களை கொடுக்கும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவர் இயக்கிய பாகுபலி இரண்டு பாகங்களும் பெரும் வெற்றி பெற்றன. இந்தியாவை தாண்டி ராஜமவுலியை அந்த படங்கள் அடையாளம் காட்டின. இதனை தொடர்ந்து ராஜமவுலி இயக்கிய மற்றொரு பிரமாண்ட படைப்பு ஆர்.ஆர்.ஆர். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்,அஜய்தேவ்கன்,அலியாபட், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்த இந்தப்படம் உலக அளவில் பேசப்பட்டது.1300 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனையை படைத்தது. ஆர்ஆர்ஆர்.Continue Reading

ஜுலை, 11- இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி  உள்ள தமிழ் திரைப்படம் ’லெட்ஸ் கெட் மேரிட்’( (Lets Get Married) . சுருக்கமாக- ‘எல்.ஜி.எம்’. காதலை மைய இழையாக கொண்டு தயாராகி இருக்கும் இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். ஹரிஷ்Continue Reading

ஜுலை, 11- இளையதளபதி விஜயும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் ஏற்கனவே மாஸ்டர் எனும் சூப்பர் டூப்பர் படத்தை கொடுத்தனர்.மீண்டும் லியோ படத்தில் இணைந்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.Continue Reading

கேரளாவில் பிறந்த மீரா ஜாஸ்மினுக்கு டாக்டராக வேண்டும் என்பது கனவாக இருந்தது. எபி.எஸ்ஸி. படித்தவர் என்பதால் அவரது கூற்றை நம்பலாம். ஆனால் மலையாளத்தில் அறிமுகமாகி சினிமாவுக்கு வந்து விட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு அரிதாரம் பூசினார். ‘பாடம் ஒண்ணு. ஒரு விலாபம்’என்ற மலையாளப்படத்தில் அற்புதமான  நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.இதனால் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். பிறகு லிங்குசாமி இயக்கத்தில் உருவான ரன் படம் மூலம் தமிழுக்கு வந்தார்.குறுகிய காலத்தில்Continue Reading

இருபது ஆண்டுகளாக ஒரு நடிகை கதாநாயகியாக மட்டுமே நடிப்பது ரொம்பவும் அபூர்வம். அந்த வகையில் த்ரிஷா கொடுத்து வைத்தவர். 20 ஆண்டுகளாக அவர் தமிழில் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.ரஜினி,கமல், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார். கொஞ்சகாலம் அவரை  அதிக படங்களில் பார்க்க முடியவில்லை மணிரத்னம் இயக்கிய பொன்னியின்செல்வன் படத்துக்கு பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் ஜோடியாகContinue Reading

60 வயதை தாண்டியுள்ள ராம்கோபால் வர்மா, இந்தியா முழுவதும் ஓரளவு சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர். நாகார்ஜுனாவை நாயகனாக வைத்து தெலுங்கில் 1989ம் ஆண்டு இவர் இயக்கிய சிவா திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. பின்னர் இந்திக்கு சென்ற ராமகோபால் வர்மா, சிவா படத்தை ரீமேக் செய்தார். இதன் தொடர்ச்சியாக  ரங்கீலா என்ற இந்திப்படத்தை தயாரித்து இயக்கினார்.ஊர்மிளா,அமீர்கான், ஜாக்கிஷெராப் இதில் நடித்திருந்தனர். வசூலை குவித்த இந்தப்படம்தான் ஏ.ஆர்.ரஹ்மான், நேரடியாக இசைContinue Reading