டிசம்பர்-21 மின்சாரம் பாய்ந்து ஆதிபராசக்தி பக்தர் உயிரிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாணியம்பாடியில் இருந்து 20- க்கும் மேற்பட்டோர் பேருந்து ஒன்றில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி என்ற இடத்தில் டீ குடிப்பதற்காக பேருந்தை ஓரம் கட்டியபோது தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் பேருந்து உரசியுள்ளது. அப்போது மின்சாரம் பாய்ந்து அகல்யா (20) என்பவர் உயிரிழந்துவிட்டார். *Continue Reading

டிசம்பர்-20. திருநெல்வேலியில் பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே மாயாண்டி என்பவர் இன்று காலை வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாயாண்டியை வெட்டிக் கொலை செய்துவிட்டு காரில் தப்பிச் சென்றவர்களை கண்டுபிடிக்க போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் இவர்கள் மூன்று பேரும் பிடிட்டு உள்ளனர். கடந்த ஆண்டு கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக இருந்த ராஜாமணி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாகContinue Reading

டிசம்பர்-20, மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது. முதற்கட்டமாக இரவு 10.45 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் மதுரை விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. *Continue Reading

டிசம்பர்-19. சேலம் மாவட்டம் மேட்டூரில் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் இரண்டுப பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் 840, இரண்டாவது பிரிவில் 600 என மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் சிகிச்சைக்காகContinue Reading

டிசம்பர்-18. தமிழ் நாடு அரசின் மது விலக்குப் பிரிவு பல ஆண்டுகளாக நடைபெறும் கள்ளச்சாரய விற்பனையை தடுக்காமல், என்ன செய்து கொண்டிருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கில் கைதானவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் மேற்கண்ட கேள்வியை கேட்டார்கள். இதைனயைடுத்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கு எதிரான அனைத்து மனுக்கள் மீதானContinue Reading

டிசம்பர்-18, ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி விழுப்புரத்தில் டிசம்பர்- 21 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற உள்ள போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார். *Continue Reading

டிசம்பர்-03, புதுச்சேரி – கடலூர் இடையிலான போக்குவரத்து 2- வது நாளாக துண்டிக்கப்பட்டு உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் முள்ளோடை பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இந்தச் சாலையில் தண்ணிர் தேங்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து தடைபட்டு இருக்கிறது. *திருமணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைாயில் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிது. *இன்று (டிசம்பர் 03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ▪️ விழுப்புரம் (பள்ளி + கல்லூரி) ▪️Continue Reading

டிசம்பர்-2. ஊழல் மற்றும் மோசடி வழக்குகளில் ஜாமீனில் விடுவிக்க்கப்பட்ட செந்தில் பாலாஜி, மூன்றாவது நாளே அமைச்சராக பொறுப்பேற்க வேண்டிய அவசரம் என்ன என்று உச்சநீதிமன்றம் கேட்டு உள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜி போக்குவரத்துக் கழகங்களில் ஆட்களை நியமிப்பதற்கு லஞ்சம் வாங்கினாா் என்பது வழக்காகும். இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது திமுக அரசினால் மின்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அவரை கடந்த 2023-Continue Reading

டிசம்பர்-2, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்து அவதூறாக X-தளத்தில் பதிவிட்டது, பெரியார் சிலையை உடைப்பேன் என்று பேசியது ஆகிய இரண்டு வழக்குகளில் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா-வுக்கு தலா ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. கனிமொழி பற்றி அவதூறாக X தளத்தில் பதிவிட்டது மற்றும பெரியார் சிலையை உடைப்பேன் என்று பேசியது தொடர்பாக அவர் மீது கடந்த 2018- ல் பதியப்பட்டContinue Reading

டிசம்பர்-1. பெஞ்சல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே போன்று விழுப்புரம் மாவட்டத்திற்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இந்த மாவட்டத்தில் திண்டிவனத்தை அடுத்து உள்ள மயிலத்தில் நேற்று ஒரே நாளில் 50 சென்டி மீட்டர் மழைக் கொட்டித் தீர்த்தது. இதுதான் நடப்பாண்டில் ஒரே நாளில் பெய்த அதிக மழையாகும். இதனால்Continue Reading