ஜுலை,21- எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை  தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவருமே , எந்த பிரச்சினையிலும் வாய் திறப்பதில்லை. எடப்பாடி பழனிசாமியின் கைக்கு அதிமுக வந்தபின், மாஜிக்கள், மாவட்டங்கள் என எல்லோருமே பொளந்து கட்டுகிறார்கள்.பலரின் பிதற்றல்களும்,உளறல்களும் பொடியன்கள் கூட பரிகாசம் செய்யும் அளவுக்கு எல்லை மீறி போய் விடுகிறது. சம்மந்தமில்லாமலும், சர்ச்சையாகவும் பேசுவதில் இன்றைக்கு அதிமுகவில் நம்பர் -1 ஆக இருப்பது திண்டுக்கல் சீனிவாசன்.Continue Reading

சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் செய்ய இருந்த பாதையில் அரசு பேருந்து விபத்தில் சிக்கியதால் போலிஸ் அதிகாரிகள் பெரும் பதற்றத்திற்கு ஆளானார்கள். சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் 25 ஜி என்ற எண் கொண்ட பேருந்து காலை 11: 40 மணி அளவில் அண்ணா சதுக்கத்தில் புறப்பட்டு அண்ணா மேம்பாலம் வந்து கோடம்பாக்கம் செல்வதற்கு கீழே இறங்கும் போது பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி விபத்துக்கு ஆளானது. சுவரில் சிக்கிக்Continue Reading

அமைச்சர் பொன்முடி மீதான சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் மேலும் 5 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. செம்மண் குவாரிகளை பொன்முடி தனது பினாமிகளுக்கு ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு 28 கோடி ரூபாய்  இழப்பு ஏற்பட்டது என்பது வழக்காகும்.இது தொடர்பாக பொன்முடி, மகன் கவுதம சிகாமணி, திமுக நிர்வாகிகள் கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 போ் மீது கடந்த 2012-ஆம் ஆண்டில்Continue Reading

ஜுலை, 20- தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி சென்னை விருகம்பாக்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை போலியான ஆவணங்கள் மூலம் விற்பனை ஒப்பந்தம் போட்டு உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து அந்த ஒப்பந்தத்தை பதிவுத்துறை ரத்து செய்துள்ளது. பல்வேறு ஊழல் வழக்குகளை அம்பலப்படுத்தி வரும் அறப்போர் இயக்கம், கடந்த ஏப்ரல் மாதத்தில் நயினார் பாலாஜி மீது இது தொடர்பாக குற்றம்Continue Reading

சட்ட விரோத பணப்பறிமாற்ற வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தினமும் பழம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் 14-ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், நெஞ்சு வலி ஏற்பட்டதால் முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு  பைபாஸ் இதய அறுவை சிகிச்சை நடந்தது. சுமார் ஒரு மாத காலம் சிகிச்சையில்Continue Reading

ஜுலை,19- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டு உள்ளதால் வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. 2001 முதல் 2006 ஆண்டு அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடை பெற்றுவருகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருக்கும்Continue Reading

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை வகிக்கும் என்று ல் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தி உள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்ற போது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதுக் குறித்து விவாதிக்கப்பட்டது. பாராதீய ஜனதாவுடன் மற்ற சிறிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்பது, நாடு முழுவதுக்கும் ஒரே தேர்தல் அறிக்கை தயாரிப்பது போன்ற அம்சங்களும் ஆலோசிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா தலைமையில்Continue Reading

ஜுலை,19- ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில்  கடந்த  14  ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாவீரன்’. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் , யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில்  நடித்துள்ளனர். இந்தப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. ‘மாவீரன்’ திரைப்படத்திற்குContinue Reading

ஜுலை, 19- அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த மாதம் 14- ஆம் தேதி கைது செய்ததால் அவரிடம் இருந்த இலாகாக்கள் முதலமைச்சரால் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டன. அவரை பதவி நீக்கம் செய்யுமாறு ஆளுநர் ரவி கேட்டுக்கொண்டார். இதனை ஏற்க மறுத்த முதலமைச்சர்,  செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று தெரிவித்தார். அதன் பிறகு ஆளுநரே செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக மாலைContinue Reading

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் இப்போதே வரிந்து கட்டி. விட்டன. பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சி தலைவர்கள் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினர். 26 கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டுவது என தீர்மானிக்கப்பட்டது. பெங்களூர் கூட்டம் முடிந்த சில மணி நேர்த்தில் டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  தலைவர்கள்Continue Reading