ஜுலை, 13- முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பல்வேறு அடுக்குகளாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது. தமிழக அரசு, தி.மு.க.மற்றும் கலைஞர் மீது பற்றுள்ள தன்னார்வலர்கள் என பல தரப்பினர் பல விதங்களில் கலைஞரை கொண்டாடுகிறார்கள். கருணாநிதி,புத்தகங்களின் காதலர். அவரது ஆழமான வாசிப்பும், படைப்பாற்றலும் தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். பள்ளிப்பருவத்தில் எழுத ஆரம்பித்தவர், 94 வயது வரை எழுதிக்கொண்டே இருந்தார்.அவர் தொடாத துறைகளே இல்லை.’எழுத்தாளர்’கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில்Continue Reading

சேலம் மாவட்ட தொழில் முனைவோரை கடந்த ஒருவாரமாக பெண் ஒருவர் உலுக்கிக் கொண்டிருக்கிறார். அடையாளம் தெரியாத அந்த பெண்ணிடம் இருந்து எடப்பாடியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு மூன்று நாட்களுக்கு முன் ஆபாசப் படங்கள் வந்ததுதான் பிரச்சினையின் ஆரம்பம். படஙகளைப் பார்த்து அதிர்ந்துப் போன அவர், அதனை அழித்துவிட்டு மற்ற நண்பர்களிடம் தகவலை தெரிவித்தார். அவர்களும் தங்களின் செல்போன் வாட்ஸ் அப் க்கு ஆபாசப் படங்களை பெண் ஒருவர் அனுப்பி உள்ளார்Continue Reading

தலைவர்கள் இரு தொகுதிகளில் போட்டியிடுவது சகஜம். பாரம்பர்ய தொகுதியில் அதிருப்தி நிலவும் பட்சத்தில் அந்த தொகுதியில் போட்டியிடும்  தலைவர் ,பாதுகாப்பு கருதி இன்னொரு தொகுதியிலும் மனு செய்வார். அதற்கு உதாரணம் ,ராகுல்காந்தி. குடும்பத்தொகுதியான அமேதியில் வெற்றி பெறுவது கடினம் என கணிப்புகள் சொன்னதால், கடந்த மக்களவை தேர்தலில் ராகுல்காந்தி அமேதி தவிர வயநாடு தொகுதியிலும் களம் இறங்கினார். நினைத்த மாதிரியே அமேதி, ராகுல் காலை வாரியது.வயநாட்டில் வென்றார். எந்த தொகுதியில்Continue Reading

ஜூலை, 11- செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் ஆட்கொணர்வு மனு, மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும்Continue Reading

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பதுதான் அதிமுக என்பதை தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றும் இதோ போன்று அந்தக் கட்சியின் தலைமை நிர்வாகிகள் பெயரும் பதியப்பட்டு இருக்கிறது.  இதனால் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இனி அதிமுக என்று அதிகாரப்பூர்வமாக சொல்லிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல்Continue Reading

சொகுசாக உட்கார்ந்துகொண்டு வன்மங்களை விதைப்பவர்களால் அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக சென்னையில் காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்று கூறிய அவர் சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்றார்.நிம்மதியாக உள்ள நாட்டில் தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றும் முதலமைச்சசர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது..Continue Reading

ஜுலை, 11 – தமிழகத்தில் மதுக்கடைகளை தனியார் ஏலம் எடுத்து, மது விற்பனை செய்தபோது ‘டெட்ரா பேக்’ எனப்படும் காகித டப்பாவில் மதுபானம் விற்கப்பட்டது. விலை குறைவு என்பதால் ’டெட்ரா பேக்’ மது விற்பனை அமோகமாக இருந்தது. ஆனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.பின்னர் அரசாங்கமே மது விற்பனையில் நேரடியாக இறங்கியபோது ’டெட்ரா பேக்’ விற்பனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் காகித டப்பாக்களில் மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம்Continue Reading

தமிழ்நாட்டு மக்களின் சமையல் பொருட்களில் முன்பெல்லாம் அரிசிக்குதான் அதிகம் செலவிட வேண்டியிருக்கும். அந்த நிலை கடந்த சில நாட்களாக மாறி காயகறிகளுக்கு அதிக செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை உச்சத்தில்தான் உள்ளது. விலை குறைவதாக செய்திகள் வெளியானலும் கூட தெரு முனை கடைகளில் கிலோ ரூ 140 என்ற விலை பெரும்பாலான இடங்களில் குறையவில்லை. இந்த சூழலில் சின்ன வெங்காயத்தின் விலையும்Continue Reading

மக்களவை தேர்தலோ, சட்டப்பேரவை தேர்தலோ வருவதற்கு முன்பாக பிரதான அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தி தங்கள் வலிமையை வெளிச்சம் போட்டு காட்டுவது வழக்கம். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் மதுரையில் மாநாடு நடத்தி ‘மாஸ்’ காட்ட முடிவு செய்துள்ளது, அ.தி.மு.க. இந்த மாநாடு மதுரை விமானநிலையம் அருகே கருப்புசாமி கோயில் எதிரே உள்ள திடலில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமிContinue Reading

சொந்த ஊரில் வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதிப்பதை, வெளிநாடு சென்றால் , சொற்ப ஆண்டுகளில் அள்ளி விடலாம் என்ற கனவில் தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர்  விமானம் ஏறி விடுகிறார்கள். முன்பெல்லாம் ஆண்கள்தான் வெளிநாடுகளுக்கு செல்ல ஆர்வம் காட்டினார்கள். அண்மைக்காலமாக பெண்களும் வெளிநாடுகளுக்கு பறந்த வண்ணம் உள்ளனர். வீட்டு வேலைக்கு என  அந்நிய தேசங்களுக்கு ,குறிப்பாக அரபு நாடுகளுக்கு அழைத்துச்செல்லப்படும் பெண்கள், அங்கு பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.Continue Reading