தமிழ்நாட்டு மக்களின் சமையல் பொருட்களில் முன்பெல்லாம் அரிசிக்குதான் அதிகம் செலவிட வேண்டியிருக்கும். அந்த நிலை கடந்த சில நாட்களாக மாறி காயகறிகளுக்கு அதிக செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை உச்சத்தில்தான் உள்ளது. விலை குறைவதாக செய்திகள் வெளியானலும் கூட தெரு முனை கடைகளில் கிலோ ரூ 140 என்ற விலை பெரும்பாலான இடங்களில் குறையவில்லை. இந்த சூழலில் சின்ன வெங்காயத்தின் விலையும்Continue Reading

மக்களவை தேர்தலோ, சட்டப்பேரவை தேர்தலோ வருவதற்கு முன்பாக பிரதான அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தி தங்கள் வலிமையை வெளிச்சம் போட்டு காட்டுவது வழக்கம். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் மதுரையில் மாநாடு நடத்தி ‘மாஸ்’ காட்ட முடிவு செய்துள்ளது, அ.தி.மு.க. இந்த மாநாடு மதுரை விமானநிலையம் அருகே கருப்புசாமி கோயில் எதிரே உள்ள திடலில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமிContinue Reading

சொந்த ஊரில் வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதிப்பதை, வெளிநாடு சென்றால் , சொற்ப ஆண்டுகளில் அள்ளி விடலாம் என்ற கனவில் தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர்  விமானம் ஏறி விடுகிறார்கள். முன்பெல்லாம் ஆண்கள்தான் வெளிநாடுகளுக்கு செல்ல ஆர்வம் காட்டினார்கள். அண்மைக்காலமாக பெண்களும் வெளிநாடுகளுக்கு பறந்த வண்ணம் உள்ளனர். வீட்டு வேலைக்கு என  அந்நிய தேசங்களுக்கு ,குறிப்பாக அரபு நாடுகளுக்கு அழைத்துச்செல்லப்படும் பெண்கள், அங்கு பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.Continue Reading

ஜுலை, 10- கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அடுத்த இரண்டு நாட்கள் முக்கியமானதாகும். அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துக் கழகத்தில் வேலை கொடுப்பதாகக் கூறி பணம் வசூலித்து ஏமாற்றினார் என்பது அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான புகாரகும். இந்த புகார்களுக்கு நடுவே அவருக்கு வேண்டியவர்கள் வீட்டில் கடந்த மாத தொடக்கத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. கரூரில் அவருடைய தம்பி அசோக் குமார்Continue Reading

  தமிழ்நாடு ஆளுநர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு 15 பக்க கடிதத்தை எழுதி உள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதன் சுருக்கம் வருமாறு.. ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டு தமிழ்நாடும் அரசும் சட்டமன்றமும் செய்து வரும் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதற்கு முன்பு நாகாலாந்து மாநில ஆளுநராக ரவி பொறுப்பு வகித்த போதும் அவருடைய செயல்பாடுகள் திருப்திகரமாகContinue Reading

ஜுலை, 09 – சென்னை  பெருங்குடி திருவள்ளுவர் நகரில் நேற்று ( ஞாயிறு) அதிகாலை அனிதா என்பவரின் கூரை வீடு திடிரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் தூக்கம் கலைந்து அனிதா, ஜன்னல் வழியே புகை வர தொடங்கியதை பார்த்த உடன் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு மகள்களையும் அவசரமாக எழுப்பி வெளியே கொண்டு வந்து உள்ளார். தெருவாசிகள் ஓடி வந்து  தீயை அணைக்க முயற்சித்தாலும் கொழுந்து விட்டு எறிந்த நெருப்பை அணைக்கContinue Reading

வலிமையாக உள்ள கட்சிகளில் உள்கட்சி பூசல் இருப்பது சகஜம். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிலும் மாவட்ட வாரியாக மோதல் உண்டு. தூத்துக்குடி மாவட்டம் அதற்கு விதி விலக்கல்ல. அந்த மாவட்டத்தில் உள்ளதி.மு.க.வின் இரு அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், கீதா ஜீவனுக்கும் இடையேயான பனிப்போர் அனைவரும் அறிந்தது. ஜெயலலிதா அ.தி.மு.க.பொதுச்செயலாளராக இருந்தபோது , தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.வில் பல கோஷ்டிகள் இருந்தன.ஜெயலலிதா மறைவுகு பிறகு கட்சி மூன்றாக பிளவுபட்டContinue Reading

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்கு பேட்டி கொடுத்தாலும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐந்து நிமிட பேட்டி என்றாலும் அதில் ஒரு பொடி வைத்து பேசுவதில் வல்லவர். சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் சென்று முருகனை தரிசனம் செய்தார்.பின்னர் சென்னை திரும்பும் வழியில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியது வருமாறு.. “அம்மாவின் ஆட்சி காலத்தில் காவலர்களுக்கு மனContinue Reading

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பின் மண்ணும் செழித்துள்ளது; மக்களும் செழித்துள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளர்ர். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் “வேளாண் வணிக திருவிழா 2023” உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி மற்றும் வேளாண் வணிக கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசியதாவது.. வேளாண் துறை வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வோடும், உயிரோடும் தொடர்புடையது. ஒரு நாட்டின் செழிப்பின் அளவுகோல், வேளாண் துறைContinue Reading

ஜுலை, 07- மகளிர் உரிமைத் தொகை பெறும் திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறக்கூடியவர்களை முடிவு செய்வதற்காக முதலமைச்சர் தலைமையில் சென்னையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு பேசிய முதலமைச்சர் திட்டத்திற்கு கலைஞர் பெயரை சூட்டுவதற்கான காரணத்தை விளக்கினார். தொடர்ந்து கலைஞர் உரிமைத் திட்டத்தில் உதவிப் பெறுவதற்கான தகுதி உள்ளவர்கள்,தகுதி இல்லாதவர்கள் மற்றுமContinue Reading