மின் கட்டணம் – வீட்டு நுகர்வோருக்கு பாதிப்பில்லை. மின் கட்டணத்தில் மத்திய அரசு செய்துள்ள மாற்றத்தால் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்-தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம். ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாக தண்டத்தொகை ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை. மின் கட்டண ஆணைப்படி உச்ச நேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை என விளக்கம்.  Continue Reading

அப்பர் கோதையாறு அருகே குட்டியாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக்கொம்பன் யானை சரியான உணவு எடு்த்துக் கொள்ளாததால் உடல் நலக்குறைவுக்கு ஆளாகி மெலிந்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் இயற்கை ஆர்வலர்களை கவலைக் கொள்ளச் செய்துள்ளது. தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் மயக்க ஊசிச் செலுத்தி கடந்த 5- ஆம் தேதி பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை வனத்துறை அலுவலர்களால் லாரியில் ஏற்றி நெல்லை மாவட்டம் களக்காடு வனத்திற்கு கொண்டு செல்லப்படட்து. இரண்டுContinue Reading

அமைச்சர் செந்தில் பாலாஜியை தங்கள் காவலில் எடுத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமா என்ற கேள்விதான் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகி உள்ளது. வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் கடந்த 12- ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி திடீரென உடல் நலக் குறைவு காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரை இந்த மாதம் 28- ஆம் தேதிContinue Reading

கோவையில் தனியார் பேருந்தின் பெண் ஓட்டுநர் சர்மிளா வேலையில் இருந்து விலகியது பெரிய செய்தியாகி உள்ளது. அவருக்கு உதவுவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உறுதி அளித்திருக்கிறார். கோவையைச் சேர்ந்த 24 வயது சர்மிளா, வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தின் டிரைவராக பணியாற்றி வந்தார். தமிழ் நாட்டில் தனியார் பேருந்தின் முதல் பெண் டிரைவர் என்பதால் சர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது.Continue Reading

தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதய்சங்கருக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. “ஆதனின் பொம்மை” என்ற நாவல் எழுதியதற்காக உதயசங்கருக்கு இந்த விருது கிடைத்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1960-ம் ஆண்டு பிறந்தவர். நீலக்கனவு, யாவர் வீட்டிலும், பிறிதொரு மரணம் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளை அவர் வெளியிட்டு இருக்கிறார். தமிழர்களின் தொன்மை, நாகரிகம் குறித்து எழுதப்பட்ட நாவலுக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி என எழுத்தாளர் உதயசங்கர் தெரிவித்துள்ளார்.Continue Reading

பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்கவேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மாவிற்கு தலைமைச்செயலர் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறார். வாகனங்களில் செல்வோர் அறைகளில் தங்கும் நிலையில் வாகன ஓட்டுநர்கள் வராண்டா, வாகனத்தில் தூங்குகின்றனர். இரவு நல்ல தூங்கினால்தனே பகலில் சோர்வு இன்றி காரை ஓட்டமுடியும் என்பது கூட அவர்களைContinue Reading

மதுரை அருகே உள்ள வரிச்சியூரை சேர்ந்த செல்வம், கிலோ கணக்கில் நகை அணிந்து நடமாடும் நகை கடையாக உலாவரும் தாதா ஆவார். கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய செல்வத்தின் நெருங்கிய கூட்டாளி செந்தில்குமார். மதுரை அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்  உள்ளிட்ட இரண்டு பேர் கொலை வழக்கி ல் செந்தில்குமாரை முக்கிய குற்றவாளியாக போலீசார்  சேர்த்தனர். போலீசில் செந்தில்குமார் சிக்கினால், தானும் கைது செய்யப்படலாம் எனContinue Reading

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துகின்றனர். இவர் இதற்கு முன்பு காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக இருந்தபோது முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கொரோனா காலகட்டத்தில் லைசால் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததார் என்பது மகேஸவரி மீதான புகாராகும். காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரிந்த துப்புரவு ஆய்வாளர்கள் 3 பேரின் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.ளContinue Reading

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயிலில் தீ விபத்து சென்னையில் இருந்து மும்பை செல்லக் கூடிய விரைவு ரயிலில் தீ விபத்து உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீ விபத்து என தகவல் ரயில் எஞ்சினில் ஏற்பட்ட தீ விபத்து ஒரு மணி நேரத்திற்கு பின் அணைப்புContinue Reading

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய  அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி கொடுத்திருக்கிறது. கலைஞரின் பேனா நினைவு சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் பணிகள் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுContinue Reading