மே 17,2023 மதுவிலக்கு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போராட தயார் என்றால், அவருடன் இணைந்து நாங்களும் போராட தயார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் வாங்கி குடித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், அனைவரும் முண்டியம்பாக்கம் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர்Continue Reading

மே 17,2023 பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியதை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இடஒதுக்கீடு என்பதுContinue Reading

மே 17,2023 தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களின் ஆட்சியர்களை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். பல்வேறு துறைகளுக்கான செயலாளர்கள் மாற்றப்பட்டனர். இந்நிலையில், தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் ஐஏஎஸ்Continue Reading

மே 17,2023 எங்களை விட ஒரு வாக்கு எடுத்துவிட்டால் நாங்கள் அரசியல விட்டே போயிடுறோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஆர். வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று ஒரத்தநாட்டில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஓபிஎஸ், வைத்திலிங்கம் போன்ற துரோகிகளுக்கு அதிமுகவில் இடமில்லை. ஓபிஎஸ், வைத்திலிங்கத்தின் நாடகம் பலிக்காது. துரோகிகள் பற்றி பேசுவது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம். எப்போ பார்த்தாலும் தர்மயுத்தம்.. தர்மயுத்தம்; எத்தனை முறை தர்மயுத்தம்Continue Reading

May16,2023 மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு இன்று  சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில்  இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு பாதிப்புContinue Reading

May 16,2023 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சர் ஆக இருந்த செந்தில் பாலாஜி , போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக புகார் இருந்தது . இது குறித்து எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்புContinue Reading

May 16,2023 சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 457 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை 908 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. லாட்டரி விற்பனையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்குContinue Reading

May 16,2023 தமிழகம் முழுவதிலும் உள்ள கள்ளச் சாராய வியாபாரிகளைக் கைது செய்து சிறையில் அடைக்க சட்டம், ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு எதிரான வேட்டை தொடங்கி உள்ளது. இந்நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 2 நாட்களாகதமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,558 குற்றவாளிகள் கைதுContinue Reading

May 16, 2023 தினகரன் – ஓபிஎஸ் இணைந்து செயல்படுவோம் என்று அறிவித்திருப்பதற்கு ’இரண்டு துரோகிகளும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட  அவர்  பேசியதாவது: “அதிமுகவில் உள்ள ஒரு தொண்டன்கூட மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என எண்ணுகிறான். ஆனால் இங்குள்ள கட்சிக்காரர்களின் உழைப்பால் இப்பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம் எம்எல்ஏவாகி,Continue Reading

May 16,2023 பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தில் அமலாக்கதுறை சோதனை நடத்தி வருகிறது. பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தமிழில் பல முன்னணி திரைப்படங்களை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த நிறுவனம் தயாரித்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பாகம் 2 படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பொருளாதார ரீதியிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது.Continue Reading