மே.9 தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை 2021ம் ஆண்டு மே 7-ம் தேதி ஆட்சி அமைத்தது. பதவியேற்ற ஓராண்டுக்குள் அமைச்சரவையில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த வரிசையில், கடந்த டிசம்பர் 14-ம் தேதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைContinue Reading

மே.9 கோவையில் டிரோன்கள் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். கோவை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்காக தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டது. கலவர சூழல்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க இந்த டிரோன்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப இந்த டிரோன்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஒத்திகை நிகழ்வானது கோவை காவல் பயிற்சிContinue Reading

மே.9 தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை, மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட மாவட்டஙகளில் சுமார் 10 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வீடுகள் மற்றும் என்.ஐ.ஏ வழக்குகளில் தொடர்புடையர்வர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுவருவதாகContinue Reading

கடந்த ஒரு வருடத்தில் மக்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.288.38 கோடி திருடபட்டுள்ள தகவல் பொதுவெளியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வருடத்தில் ரூ.288.38 கோடி பொது மக்கள் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டுள்ளது. இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் ரூ.106 கோடி முடக்கப்பட்டு, ரூ.27 கோடி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் 12 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளது என்பதும், 29 பேர் மீதுContinue Reading

அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர் சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட சொகுசு வசதிகளை கொண்ட சுமார் 1078 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை 251 வழித்தடங்களில் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேற்பட்ட நீண்ட தூர பயணம் மேற்கொண்டு வருகின்றன. பெண்கள் மட்டுமே முன்பதிவு செய்யும்Continue Reading

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், இரண்டாம் கட்டமாக 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயலில் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் உள்ள பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளில் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கடந்தContinue Reading

பிளஸ் 2 தேர்வு முடிவில் கடைசி 15 இடங்களில் 13 வட மாவட்டங்கள் இருக்கும் நிலையில், கல்வி மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு 94.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வென்ற மாணவ, மாணவியருக்கும், 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவிContinue Reading

மே.8 நெல்லை கூடங்குளத்தில் பராமப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக 2வது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த 2 அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில்,Continue Reading

மே.8 சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டார். தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ-மாணவியரில் 94.03 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6Continue Reading

மே.8 ஆளுநர் பாராட்டிவிட்டார் என்பதற்காக கொள்கைகளை விட்டு தர மாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் த.மோ.அன்பரசன் செங்கோல் வழங்கினார். பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாகContinue Reading