பி.டி.ஆர்.ஆடியோ சர்ச்சை - விளக்கம்

ஏப்ரல்.23 விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் மற்றும சபரீசன் ஆகியோரின் சொத்துக்கள் குறித்து பேசியதாக வெளியான ஆடியோ, தொழில்நுட்ப உதவியுடன் இட்டுக்கட்டப்பட்டது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தின் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன், பேசியதாக 26 விநாடி ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. ‘உதயநிதி, சபரீசன் சொத்துகள் குறித்து பேசியதாக வெளியான அந்த ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ வானதிContinue Reading

ஏப்ரல்.23 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தொழிலாளர் நலத்துறை மசோதா குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தொழிற்சாலைகள் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதன் முக்கிய அம்சங்கள், முதலீடுகள், வேலைவாய்ப்புகள் குறித்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர் ஆகியோர் விரிவாக விளக்கம் அளித்ததாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,Continue Reading

ஏப்ரல்.22 தமிழகத்தில் ரமலான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி, இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்புத் தொழுகைகளில் பங்கேற்று, ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். கோவை உட்பட தமிழகம் முழுவதும் ஈகைத்திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு குழந்தைகள், பெரியவர்கள் என புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான்Continue Reading

நீலகிரி மாவட்டத்தில் உதகை வெளியுலகத்திற்கு அறிமுகமானதன் 200 வது ஆண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள தடுப்புச் சுவர்களில் வரையப்பட்டுவரும் வண்ண வண்ண ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துவருகின்றன. மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையை 200 ஆண்டுகளுக்கு, கோவை ஆட்சியராக இருந்த ஜான் சலிவன் என்பவர் வெளிஉலகிற்கு அறிமுகம் செய்துவைத்து, உதகை நகரத்தையும் கட்டமைத்தார். இதைத் தொடர்ந்து, தாவரவியல் பூங்கா போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள்Continue Reading

ஏப்ரல்.22 சிங்கப்பூரின் டெலியோஸ்-2 செயற்கைக்கோளுடன் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஜி.எஸ்.எல்.வி.,பி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. பேரிடர் மேலாண்மை, காலநிலை கண்காணிப்பு, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலும் பல வெளிநாட்டு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டுவருகிறது. அதன்படி,Continue Reading

திமுகவினரின் ஊழல் தொடர்பாக வெளியிட்ட அனைத்து தகவல்களும் பொதுவெளியில் உள்ளவை.அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என்று பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். கடந்த வாரம் வெளியிட்ட சொத்துப் பட்டியலை அடுத்து அவருக்கு திமுக நிர்வாகிகள் பலரும் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். இதற்கு அண்ணாமலை தெரிவித்து உள்ள பதிலில், யாரையும் புண்படுத்துவதற்காக திமுகவினரின் சொத்து விவரங்களை வெளியிடவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் பொதுமக்களுக்கு திமுகவினரின் ஊழல்Continue Reading

சென்னையில் மெரினா கடற்கரைக்கு பிறந்தநாள் கொண்டாட வந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞரை திருட வந்ததாக நினைத்து கடை ஊழியர்கள் அடித்துக கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. மெரினா கடற்கரையின் உட்புறச் சாலையில் பொது பணித்துறை அலுவலகம் எதிரே இளைஞர்கள் மூன்று பேர் ரத்தக் காயங்களுடன் கிடப்பது பற்றிய தகவல் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்கு காலையில் கிடைத்தது. அவர்கள் விரைந்துச் சென்று படுகாயத்துடன்Continue Reading

ஏப்ரல்.21 திமுக சொத்துப்பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் அண்ணாமலை நீதிமன்றத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும் என தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இன்று தொடங்கவுள்ள புத்தக கண்காட்சி திருவிழாவை முன்னிட்டுபாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ராட்சச பலூனை பறக்க விட்டார். மே மாதம் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், புத்தகத் திருவிழா நடைபெறும்Continue Reading

ஏப்ரல்.21 அதிமுகவின் பெயர் மற்றும் சின்னத்தை ஓ.பி.எஸ்., சசிகலா உட்பட யார் பயன்படுத்தினாலும் சட்டப்படி அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் 10 நாட்களில் முடிவை அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடிContinue Reading

ஏப்ரல்.21 தமிழகத்தில் நடைபெற்றுவந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்தன. இதனை, மாணவ-மாணவியர் உற்சாகத்துடன் கொண்டாடினர். தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6ஆம் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4216 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 9.76 லட்சம் மாணவ-மாணவியர் எழுதினர். அதில் 37,798 பேர் தனித்தேர்வர்கள். 13,151 பேர் மாற்றுத் திறனாளிகள். 5 பேர் மூன்றாம் பாலினத்தவர். 2,640 பேர் சிறைContinue Reading