ஆகஸ்டு,1- மணிப்பூர் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் வேதனை தெரிவித்து உள்ளர். அந்த மாநிலத்தில் கடந்த மே மாதம் தொடங்கிய கலவரம் மூன்று மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த கலவரத்தின் போது குகி சமூகத்துப் பெண்கள் இரண்டு பேரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்ற வீடியோ  பத்து நாட்களுக்கு முன் வெளியானது.  அந்தப் பெண்கள் இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் மீதுContinue Reading

ஆகஸ்டு,1- மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்கு மடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால்  4000 பைபர் படகுகள், 300  விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. நடுக் கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டு வந்த பைபர் படகையும், அதில் இருந்த மீனவர்கள் மூன்று பேரும் தரங்கம்பாடி கிராமத்து  மீனவர்களால் நேற்று சிறைப் பிடிக்கப்பட்டனர்.Continue Reading

ஆகஸ்டு, 1-  தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அருகே இன்று அதிகாலை மூன்று மணியளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது கருப்பு நிற ஸ்கோட கார் வேகமா வந்தது.  நிறுத்த முற்பட்ட போது அந்த காரை ஓட்டி வந்தவர் நிறுத்தவில்லை.  உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலிஸ் ஜீப் மீது கார்Continue Reading

ஜுலை,31- தக்காளியும், தங்கமும் எப்போது விலை கூடும், எப்போது குறையும் என்று வணிகர்களால் கணிக்க முடியாத வஸ்துவாக உள்ளன. இப்போது தக்காளிக்கு பொற்காலம். தமிழக சந்தை சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில், ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை உயர்வு நீடித்து சில்லறை கடைகளில் ஒரு கிலோ 220 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. காயம் பட்டு யாருக்காவது ரத்தம் வழிந்தால்,’முகத்தில் என்ன தக்காளி சட்னியா?’ என கேட்க முடியாது.Continue Reading

ஜுலை, 31- மக்களவைத் தேர்தலை சந்திக்க ஆளும் பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியும் முழு வீச்சில் தயாராகிவிட்டன. இரு அணிகளும் பெரும் சேனைகளுடன் களத்தில் இறங்குவதால் போட்டி கடுமையாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். ‘இன்றைக்கு தேர்தல் நடந்தால் யாருக்கு வெற்றி கிடைக்கும்?’என்ற ஒற்றைக்கேள்வியுடன் இந்தியா டிவி செய்தி சேனலும், சி என் எக்சும் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது. முடிவுகள் பரபரப்பு ரகம் நாடு முழுவதும்Continue Reading

ஜுலை, 31- தமிழகத்தில் புலிகள் எண்ணிக்கை புலி பாய்ச்சலில் அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்திதான். கடந்த 16 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர் ந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு தமிழகத்தில் 76 புலிகள் மட்டுமே இருந்த நிலையில் இப்போது 306 புலிகள் உள்ளன. அதன் விவரம்: 2006-   76 2010-   163 2014-  229 2018-   264 2022 –   306 தமிழ்நாட்டில் மொத்தம் 5 புலிகள்Continue Reading

ஜுலை,29- கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில்  9 பேர் உயிரிழந்தனா். பழைய பேட்டை என்ற இடத்தில் இருந்த குடோனில் ஏராளமான அளவு பட்டாசு இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பட்டாசுகள் இன்று காலை திடீரென வெடித்துச் சிதறியது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் குடோன் இருந்ததால் அருகில் இருந்து வீடுகளும் இடிந்து தரைமட்டமானது. காவல் துறையினரும் தீ அணைப்புத் துறையினரும் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.Continue Reading

ஜுலை, 29- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு துப்பாக்கி கொடுத்து மணிப்பூருக்கு அனுப்பி வைக்கச் சொன்ன பத்ரி சேஷர்த்ரி என்பவை பெரம்பலூர் மாவடட் போலிசார் கைது செய்து உள்ளனர். சென்னையை சேர்ந்த இவர் கிழக்கு பதிப்பகம் என்ற பதிப்பகத்தின் உரிமையாளரும் ஆவார். ஆர்.எஸ்.எஸ். இயக்கச் சிந்தனையாளரான பத்ரி கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சி விவாதங்களில் பாரதீய ஜனதா கட்சியை ஆதரித்து பேசுகிறவராக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்தContinue Reading

ஜுலை,29- சென்னை அருகே  இன்று அதிகாலை, பேருந்து ஒன்று லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் 22 பேர் நூலிழையில் உயிர் தப்பினார்கள். பெங்களூரில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த குளிர் சாதன பேருந்தில் பயணிகள் 22 பேர் இருந்தனர்.  பேருந்த கிட்டத்தட்ட கோயம் பேட்டை நெருங்கிவிட்ட வேளையில் வேலப்பன்சாவடி சந்திப்பில் லாரி மீது மோதி விபத்துக்கு ஆளானது. பேருந்தில் இருந்த 22 பயணிகளும் பின் பக்க கண்ணாடியை உடைத்துக்Continue Reading

ஜுலை,29- குறைவது போல போக்குக் காட்டிய தக்காளி விலை மீண்டும் உச்சத்தை தொட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறது. கடந்த மூன்று தினங்கள் முன்பு சில்லறை விற்பனை கடைகளில் கிலோ 130 அல்லது 140 ரூபாய் என்ற நிலையில் இருந்த தக்காளி இப்போது கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் மொத்த விற்பனையில் கடந்த இரு தினங்கள் முன்பு 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டContinue Reading