அ.தி.மு.க.வுடன் விளையாடுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது என்பதை அண்ணாமலை உணரவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்து உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள சுதந்திரப் போரட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது செய்தியாளாகளிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுகவில் உள்ளவர்களின் சொத்து விவரங்கள் தெளிந்த நீரோடை போன்றது என்றார். சொத்து விவரங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்தில்Continue Reading

ஏப்ரல் 17 48 மணி நேரத்திற்குள் அண்ணாமலை பகிரங்க மண்ணிப்புக் கேட்க வேண்டும் என்றும், ரூ. 500 கோடி நஷ்ட ஈடு கேட்டும் திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், பாஜக குறித்து ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்காக பதிலுக்கு ரூ. 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதற்கு முன்னர் BGR நிறுவனத்திற்கு முறைகேடாக திமுக வழங்கிய ஒப்பந்தத்தை வெளிக்கொண்டுContinue Reading

ஏப்ரல்.17 தி.மு.க தலைவர்கள் சொத்துப் பட்டியல் வெளியீடு தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 48 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்புக் கேட்பதோடு, ரூ.500 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுகவினரின் சொத்துப் பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்களை கடந்த 14-ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அப்போது,Continue Reading

ஏப்ரல்.17 தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்திற்கு போயிருப்பதாகவும், ஸ்டாலின் ரொம்ப பேசினால் அரசாங்கம் போய்விடும் என்றும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் சீருடையுடன் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, தேர்நிலை திடலில் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, PFI (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்) இந்தியா உட்படContinue Reading

சந்தனக் கடத்தல் வீரப்பன் கூட்டாளியான மீசை மாதையன் உடல் நலக்குறைவால் மைசூரு அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக் கிழமை மரணம் அடைந்தார். கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த மாதையன் கடந்த 11-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்தார். தொடாந்து அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனின்றி மாதவன் உயிர் பிரிந்தது. 1993- ம் ஆண்டு கர்நாடக போலீசில் சரணடைந்த மாதையன் மீது 4 தடா வழக்குகள் பதிவாகின.இவற்றில் ஒருContinue Reading

ஏப்ரல் 16 முத்துப்பேட்டை பேருந்து நிழற்கட்டிடத்தை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்கிரமித்து தங்கி இருப்பதால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதி மார்க்கத்திற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தும் பயணிகள் நிழற்கட்டிடம் ஒன்று உள்ளது. இங்குதான் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், தஞ்சாவூர் உட்பட மதுரை, திருநெல்வேலி தூத்துக்குடி போன்ற பகுதிக்கு பேருந்துகளில் செல்லவும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அதனால் இந்தContinue Reading

ஏப்ரல் 16 பி.கே.மூக்கையாத்தேவர் விழாவை அரசு விழாவாக எடுப்பேன் என்றும், அவர் பெயரிலும் வீரமங்கை மாயக்காள் பெயரிலும் கல்லூரி உருவாக்குவேன் என்றும் சீமான் பேசியுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோயில் முன்பு பி.கே.மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பாப்பாபட்டியில் உள்ள பி.கே.மூக்கையாத்தேவர் சிலைக்கும், உசிலம்பட்டி பேருந்து நிலையம்Continue Reading

ஏப்ரல் 16 ட்விட்டர் என்பது தரம் கெட்ட நபர்கள் செய்யும் விமர்சனங்களால் நிரம்பியுள்ளன. அவ்வாறு செய்பவர்களை நான் பிளாக் செய்து விடுகிறேன் என்று எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், நடிகரும் திரைப்பட இயக்குனருமான பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த எஸ்.வி.சேகர் தரிசனம் மேற்கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர் கூறுகையில், ”நேரடியாக அண்ணாமலை குறித்து எந்த கருத்தும் கூறவில்லை, தினம்தோறும்Continue Reading

ஏப்ரல் 16 மின்னணு சாதனங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அபுதாபி, துபாய் நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, ரூ. 2.08 கோடி மதிப்புடைய 3.4 கிலோ தங்கம், ஐ ஃபோன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பயணிகளை, சுங்கத்துறை கைது செய்து விசாரணைContinue Reading

ஏப்ரல் 16 கோடையை தணிப்பதற்காக நாமக்கல்லில் இருந்து ஏற்காடு சென்ற கார் ஒன்று மலைப்பாதையில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், தொடர் விடுமுறை காரணமாகவும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குடும்பத்தினரோடு ஏற்காடு சென்று வருகின்றனர் . இந்த நிலையில் நாமக்கல்லில் இருந்து பொறியாளர் கவினேஷ் என்பவர் தனது அம்மா மற்றும் நண்பர்களோடு, தனது டஸ்டர் காரில் ஏற்காட்டுக்கு சென்றுContinue Reading