சென்னை ஆருத்ரா கோல்ட் ரேட்டிங் மோசடி தொடர்பாக ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட மைக்கேல் ராஜ் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முழுவதையும் கையாண்டது மைக்கேல்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் விசாரணையின் போது 1749 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் இந்தப் பணப்பரிமாற்றம் யார் , யாருக்கு நடைபெற்று உள்ளதோ அவர்களுக்கு சம்மன் அனுப்பி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.Continue Reading

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். மேலும் விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். பக்கிரிசாமி தனது பள்ளியில் படித்து வரும் 6-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.Continue Reading

தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபானக்  சில்லறை விற்பனைக் கடைகள்  மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டாஸ்மாக் எனப்படும் அரசு மதுபானக் கடைகள் மூலம் 8047.91 கோடி ரூபாய் கூடுதல் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022- 2023 ஆம் ஆண்டில் ஆயத்தீர்வை வருவாய் மூலமாக ரூ. 10,401.56 கோடியும், மதிப்புக்கூட்டு விற்பனை வரிContinue Reading

சென்னை ராயபுரத்தில் நீர்மோர் பந்தலைத் திறந்துவைத்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார், “தி.மு.க ஆட்சியில் கருத்துரிமை முழுக்கப் பறிக்கப்பட்டிருக்கிறது. பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவது லைவில் வருவதில்லை. ஏனென்றால், அங்கு சட்டமன்றம் நடக்கவில்லை. ஸ்டாலின் தர்பார்தான் நடந்துகொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்குக்கூட பக்குவமின்றி கேலியும், கிண்டலுமாகத்தான் பதிலளிக்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.Continue Reading

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் தனியார் பள்ளியொன்றில் 5 வயது சிறுமி ஒருவர், அந்தப் பள்ளியின் தாளாளரும், தி.மு.க நகர்மன்ற உறுப்பினருமான பக்கிரிசாமி என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. முன்னதாக, பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று வயிற்றுவலி எனப் பெற்றோர்களிடம் கூறியதையடுத்து, சிறுமியைப் பெற்றோர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றிருக்கின்றனர். அப்போது, சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். இந்தContinue Reading

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாநிலத்திலேயே இல்லாத வகையில் அதிக சொத்துவரியை உயர்த்தியுள்ள நகராட்சியைக் கண்டித்து பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியினர் பெண்கள் உட்பட சுமார் 200.க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் வியாபாரிகள் நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் எனContinue Reading

அதிமுக கட்சி விதி திருத்தங்களை அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த ரிட் மனு ஈபிஎஸ் விண்ணப்பத்தை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அவகாசம்Continue Reading

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக மாணவிகளிடம் மாநில மனித உரிமை ஆணையம் இன்று விசாரணை நடத்திவருகிறது. மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் உள்ள கலாஷேத்ரா நிறுவனம் நடத்தி வரும் ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி சென்னை திருவான்மியூரில் செயல்பட்டுவருகிறது. இங்கு பணியாற்றும் 4 ஊழியர்கள், பாலியல் தொல்லை தருவதாக குற்றம்சாட்டிய மாணவிகள், கடந்த 2 வாரங்களுக்கு முன்புContinue Reading

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் பாகுபாலி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த கிராமம் மேட்டுப்பாளையம்-வனப்பத்திரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையில் உள்ளது. இந்நிலையில், அருகிலுள்ள நெல்லிமலை வனப்பகுதியிலிருந்து தினமும் உணவு, குடிநீர் தேடி காட்டு யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்டContinue Reading

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கியதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் முடிவில் இன்று உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.Continue Reading