கோவை – சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்படுவதால், கோவையில் இருந்து பெங்களூரு உதய், திருப்பதி, சென்னை செல்லும் இன்டர்சிட்டி ஆகிய ரயில்களின் புறப்படும் நேரத்தை தென்னகவே ரயில்வே மாற்றியமைத்துள்ளது. நாளை முதல் (ஏப்.9) இந்த புதிய கால அட்டவணை அமலுக்கு வருகிறது. தமிழகத்தின் முதல் அதிவேக ரயில் சேவையான வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி சென்னையில் இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். சென்னைContinue Reading

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் அரசு நர்சிங் பயிற்சி மையங்கள் தொடங்கப்படவுள்ளதாகவும், அது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கோவையை அடுத்த நவக்கரை பகுதியில் ஏ.ஜே.கே.கல்லூரி குழும வளாகத்தில் புதிதாக துவங்கப்பட்ட ஏ.ஜே.கே.நர்சிங் கல்லூரி துவக்க விழா, கல்விக் குழுமங்களின் தலைவர் அஜீத்குமார் லால் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு புதிதாகContinue Reading

“கடலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி மறுக்க வேண்டும், என்.எல்.சி. நிலக்கரி சுரங்கங்களை விரிவாக்க நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும், என்.எல்.சியால் கடலூர் மாவட்டம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஏற்பட்ட பல்வகை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தமிழகத்தின், குறிப்பாக கடலூர் உள்ளிட்ட காவிரி பாசனContinue Reading

நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டியில் 2ம் கட்ட அகழாய்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தொடங்கி வைத்தார். தொல்லியல் துறை சார்பாக 2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டி கிராமமும் அடங்கும். ராதாபுரம் தாலுகாவில் உள்ள துலுக்கர்பட்டி கிராமம் நம்பி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இந்த தொல்லியல் மேடானது விளாங்காடு என்றழைக்கப்படுகிறது. இவ்வாழ்வியல் மேடானது, சுமார் 2.5 மீContinue Reading

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சொத்துக்களை கர்நாடக அரசு ஏலம் விட நீதித்துறை சார்பில் அரசு வழக்கறிஞர் கிரண் எஸ். ஜாவலியை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாகContinue Reading

இரண்டு நாள் பயணமாகத் தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வருகிறார். பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில், மெரினாவிற்குப் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாகத் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். நாளை சென்னை வரும் பிரதமர் சென்னை விமானநிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தைத் திறந்துவைக்கவுள்ளார். ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தனி விமானம் மூலம் மதியம் 3 மணியளவில் வரும் பிரதமர், சென்னை விமான நிலையத்தில்Continue Reading

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் சொத்து பிரச்சனையில் தம்பி மனைவியை ஓடும் பேருந்தில் குத்திக்கொன்றுவிட்டு தப்பியோடிய அண்ணனை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகிலுள்ள கணவாய்ப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் கோபி. திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேனி(வயது42). தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கோபிக்கும், அதே பகுதியில் வசித்து வரும் அவரது அண்ணன் ராஜாங்கத்துக்கும்Continue Reading

கன்னியாகுமரியில் பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியர் ஆன்டோ மீது இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனட்டிக் ஆன்டோ (வயது 29). இவர் குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக இருந்தார். இவர் பேச்சிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பாதிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்குContinue Reading

கோவையில் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான குறும்பட விழா நடைபெற்றது. இதில், திரைப்பட இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் டி.பிருந்தா தலைமை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் ஏ.அங்குராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் கலந்துகொண்டார். விழாவில் பேசியContinue Reading

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை மறுநாள் (ஏப்.9) பிரதமர் நரேந்திர வருவதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புலிகள் பாதுகாப்பு திட்டம்தொடங்கியதன் 50-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக வருகின்ற 9-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குச் செல்கிறார். அதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கும் அவர் வரவுள்ளார். அதன்படி, வரும் 9-ந்தேதி காலை 9.35 மணிக்குContinue Reading