ஆகஸ்டு,23- அமைச்சர்கள் தங்கம்.தென்னரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இருவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதுக் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. இரண்டு பேரும் செப்டம்பர் 20- ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை தங்கம்.தென்னரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இருவரும் அமைச்சர்களாக இருந்த போதுContinue Reading

ஆகஸ்டு, 21- மதுரை அதிமுக மாநாடு அந்த கட்சிக்கு திருப்புமுனையை ஏற்படுத்துமோ இல்லையோ, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையில் புதிய உதயத்தை உருவாக்கி விட்டது. ஜெயலலிதா மறைவுக்கு முன் பத்தோடு பதினொன்றாக அதிமுகவில் இருந்த அவர், இன்று கட்சிக்குள் மட்டுமின்றி,தமிழகத்திலும் பெருந்தலைவராக உருவெடுத்து விட்டார். மதுரை மாநாடு அதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின்பு,தென் மாவட்டங்களில் அதிமுகவை பலப்படுத்துவதற்காகவும், தனக்குள்ள செல்வாக்கை நிலைநாட்டவும் பழனிசாமிமதுரையில் இந்த மாநாட்டைContinue Reading

ஆகஸ்டு,20- நடிகர் ரஜினிகாந்தின் இமயமலை பயணம் இந்த முறை சாமன்ய மக்களுக்கும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ‘மலைக்கு போனோமா.பாபாஜி குகையில் தியானம் செய்தோமா’ என்கிற அளவிலேயே அவரது பயணம் சுருக்கமாக இருக்கும். ஆனால் இந்த முறை அப்படி இல்லை. பயணத்தை முடித்துகொண்டு ரஜினி ஊர் திரும்பவில்லை.மாநிலம் மாநிலமாக சென்று அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.சொல்லி வைத்த மாதிரி அனைவருமே பாஜக தலைவர்கள்.பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்கள். ரஜினியின் திட்டம் என்ன?Continue Reading

ஆகஸ்டு,18- சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்கு தெற்கு ரயில்வே ஒப்புதல் வழங்கி உள்ளது. சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் ரூ 395 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து  முனையத்திற்கு நகருக்குள் இருந்து எளிதில் சென்று வருவதற்கு வசதியாக  தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் தடத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்றுContinue Reading

ஆகஸ்டு, 17- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி  கைது செய்யப்பட்டார். இதற்கு எதிராக அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்துContinue Reading

மரண ஓலை எழுதப்பட்டு, பின்னர் உயிர் பிழைத்து வரும் நாயகர்களாக உலகில் இரண்டு பேர்   உள்ளனர். ஒருவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். இரும்புத்திரை நாட்டை தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பவர். கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து அவ்வப்போது ஊடகங்களில் செய்தி வரும். ‘அவர் கவலைக்கிடமாக இருக்கிறார். இறந்து போனார்’ என்று கூட செய்திகள் வந்தன.கொஞ்சநாள் கழித்து ஏதாவது ஒரு ராணுவ நிகழ்ச்சியில் முகம் காட்டி,Continue Reading

ஆகஸ்டு,16- சுதந்திர தின விழா மேடைகளில் பொதுவாக அரசியல் வாசம் வீசுவதில்லை. தமது அரசுகள் நிறைவேற்றிய திட்டங்களை பிரதமரும், முதல்வர்களும் பட்டியலிடுவார்கள்.ஆனால் டெல்லி செங்கோட்டையில் நேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திரதின உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, மக்களவை தேர்தல் பிரச்சார மேடையாக அதனை மாற்றிக்கொண்டார். தொடக்கத்தில் அரசின் சாதனைகளை பெருமிதம் பொங்க விளக்கினார். பின்னர் ட்ராக் மாற ஆரம்பித்தார்.’மீண்டும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15- ஆம் தேதிContinue Reading

ஆகஸ்டு, 14- ‘அன்னக்கிளி’ படத்தில் வந்த தெங்குமராட்டா கிராமத்தில் வசிப்பவர்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தேவையான நிதியை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த கிராமத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நடக்கும் மோதல் அதிகரித்ததால், குத்தகைக்கு வழங்கப்பட்ட வனப்பகுதி நிலங்களை மீட்க வேண்டும் என்று தமிழக அரசின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு, கோவைContinue Reading

ஆகஸ்டு,14- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவருடைய சகோதரர் அசோக், அசோக்கின் மனைவி நிர்மலா, அவரது மாமியார் லஷ்மி ஆகியோர் தான் மூளையாக செயல்பட்டுள்ளனர் என்று அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. அறிக்கையில் அமலாக்கத்துறை மேலும் கூறியிருப்பதாவது.. அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் இன்னும் கைது செய்யப்படவில்லை . அவரை அமலாக்கத்துறை தேடி வருகிறது. இந்த நிலையில் அசோக் குமார் கேரள மாநிலம் கொச்சியில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல.Continue Reading

ஆகஸ்டு,13- யதார்த்தமான நடிப்பினால் ரசிகர்கள்நெஞ்சங்களை தொட்டு, தமிழ் சினிமாவில் பெரிய உயரத்தை எட்டியவர் நடிகர் விஜய் சேதுபதி. ’இமேஜ்’பார்க்காமல் வில்லன் வேடத்திலும்விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.ரஜினி, விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடித்த அவர் இந்திக்கும் சென்று விட்டார்.ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் விஜய் சேதுபதிதான் வில்லன். விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கப்போவதாக சேரன் கூறியிருந்தார். இந்த புராஜெக்ட்  தொடர்பாக இருவரும் நேரில் சந்தித்து பேசினர். அப்போது கதையின்Continue Reading