ஜுலை, 25- சென்னையில் பிரபல டெக்ஸ்டைல் உரிமையாளரின் கார் மோதி 60 வயது முதியவர் இறந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி உள்ளது. கே.கே நகரை சேர்ந்த ரவிவர்மா என்பவர் இரு சக்கர வாகனம் ஒன்றில் தியாகராயர் நகரில் உஸ்மான் சாலை மேம்பாலம் வழியாக கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று ரவிவர்மா ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் பின்புறமாக மோதியது.   இதில் தூக்கிContinue Reading

ஜுலை, 25- “சர்ச்சை நாயகன்” அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடு்த்து விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்றுக் கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துவிட்டது. கடந்த மாதம் 14- ஆம் தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார் என்பது நினைவுக் கூறத்தக்கது. இதனைContinue Reading

ஜுலை,25- தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தக்காளி, வெங்காயம்  ஆகியவற்றைத் தொடர்ந்து அரிசி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரை கொஞ்சம் கலங்கத்தான் செய்திருக்கிறது. சாப்பாட்டு அரிசி 25 கிலோ கொண்ட மூட்டை ரூ.200 வரை கூடியுள்ளது. இந்த அரிசியின் விலை சில்லரை விற்பனையில் கிலோவிற்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. 25 கிலோ சிப்பம், ஆயிரத்து 200 ஆக இருந்தContinue Reading

ஜுலை,25- மும்பை குண்டு வெடிப்பு,குஜராத் கலவரம் போன்ற பயங்கரவாத செயல்களுடன்  தொடர்பு உள்ள தவ்ஃபிக் என்பவரை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்த இவர் சென்னை வந்த காரணம், போலிசாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் அக்பர் என்பவர், ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதை தவ்பிக் தெரிந்து வைத்துக்கொண்டு, என்.ஐ.ஏ அதிகாரி போல் நடித்து கடந்த 2020Continue Reading

ஜுலை,25- ’நெல்லை எனக்கு தொல்லை’ என திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அடிக்கடி சலித்துக்கொள்வார். நெல்லையிலிருந்து பிரிந்து உருவான தென்காசியும்,திமுகவுக்கு  தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணம்? தென்காசி வடக்கு மாவட்ட திமுக  செயலாளராக இருந்த செல்லத்துரை சில மாதங்களுக்கு முன்பு,கட்சித் தலைமையால் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்துசெல்லத்துரை ஆதரவாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயம் முன் ரகளையில் ஈடுபட்டு பரபரப்பைContinue Reading

ஜுலை,24-சென்னையில் குறிப்பிட்ட சில கல்லூரி மாணவர்களால் ஏற்படும் பிரச்சினை போலிசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது என்ற புகார் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவர்களில் சிலருக்கு பாடம் கற்றுக்கொடுக்க விரும்பிய போலிசார். மாநகர பேருந்து மீது ஏறி ஆட்டம் போட்ட மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி உள்ளனர். சென்னை எண்ணூரில் இருந்து வள்ளலார் நகருக்கான தடம் எண் 56A பேருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது  தியாகராஜா கல்லூரி மாணவர்கள்Continue Reading

ஜுலை,24- கோயம்புத்தூரில் வீட்டு முன்  நிறுத்தப்பட்டு இருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடியவன், கைகளை அசைத்து டாட்டா காட்டிவிட்டு சிட்டா பறந்து சென்ற காட்சி வலை தளங்களில் வைரலாகி வருகிறது. கோவையில் பசார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அங்காளம்மன் கோயில் தெருவில் சுரேஷ் என்பவர் வீட்டு முன் டியூக் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரணடு பேர் அந்த தெருவுக்கு வந்துContinue Reading

ஜுலை, 24- தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது.. பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ரூ. 1,000 என்பது உதவித்தொகை அல்ல, உரிமைத்தொகை.தமிழ்நாட்டு மகளிர் தன்னம்பிக்கையோடும், சுயமரியாதையோடும் வாழ்வதற்காக கொண்டு வரப்பட்டதே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆகும். மகளிர் சுய உதவிக்குழு திட்டத்துக்கு விதை போட்ட மண் தான் தருமபுரி. தருமபுரியில் விதைத்தால், அதுContinue Reading

மிழ்நாட்டில் கடந்த சட்டசபைத்தேர்தலின் போது திமுக பல வாக்குறுதிகளை அளித்தது. இதில் முக்கியமானது, குடும்பத்தலைவிகளுக்கு உதவும் வகையில் மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றஅறிவிப்பு. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும் உடனடியாக , பெண்கள் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற இயலவில்லை. நிதி நெருக்கடியே அதற்கான காரணம். இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஒரு படியாக, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளானசெப்டம்பர் 15–ம்Continue Reading

ஜுலை,23- தமிழ் நாட்டில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டு உள்ளனர். கும்பகோணம் அடுத்து உள்ள திருபுவனத்தில் கடந்த 2019 ஆண்டு ராமலிங்கம் என்ற சமையல் ஒப்பந்ததாரர் வெட்டிக் கொல்லப்பட்டார். மத மாற்றத்திற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்டதால் வாய்த் தகறாறு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்கிருந்து சென்றவர்கள் பிறகு ராமலிங்கத்தை வெட்டிக் கொன்று விட்டனர். இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் Continue Reading