ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் 264 பேர் உயிரிழந்துள்ளனர். 900-திற்கும் அதிகமான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கோரவிபத்துக்கு காரணம் மனித தவறா? தொழில்நுட்ப கோளாறா என்பதை பார்க்கலாம். ஒடிசா மாநிலம் பாலசூர் அருகே நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7.30 மணி அளவில் இந்த ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. சாலிமரிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு ரயில்Continue Reading

ஜூன்.3 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று ஒரே நாளில் ஐந்து போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த 2022 டிச.26-ம் தேதி ஜெயிலர் (ஆண், பெண்) பணிக்கான தேர்வும், மீன்துறை சார் ஆய்வாளர் தேர்வு கடந்த பிப்.7-ம் தேதியும் நடத்தப்பட்டது. இதேபோல், பொது சுகாதார பணியில் அடங்கிய சுகாதார அலுவலர் பணிக்கான தேர்வு பிப்ரவரி 13-ம் தேதியும்,Continue Reading

ஒடிசா அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் பாலசோர் மாவட்டம் அருகே வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பஹானாகா வனப்பகுதியில் விரைவு ரயில் வேகமாக வந்துContinue Reading

June 02, 2023 மூன்று நாட்களுக்கு 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து, வரும் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், இந்த வாரContinue Reading

ஜூன்.2 கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் 8-வது நாளாக சோதனை நடத்திவருவதால் அங்கு பரபரப்பு நிலவிவருகிறது- கரூரில் கடந்த 26ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரிகள் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். அப்போது, வருமானவரித்துறையின் சோதனைக்கு கரூர் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தContinue Reading

ஜூன்.2 தமிழகத்தில் செயல்பட்டுவரும் பட்டாசு ஆலைகள், குடோன்களை அரசு தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு தமது டிவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி இரங்கள் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பதிவில், சர்க்கார் கொல்லப்பட்டி விபத்தில் காயமடைந்த மேலும்Continue Reading

June o1, 2023 தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் கௌரவ துணை தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : ”தமிழ்நாடு மாநில மாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோரின் ஒப்புதலோடு,Continue Reading

June 01, 2023 பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார். ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா குஜராத் ஜாம்நகர் வடக்கு பாஜக எம்எல்ஏ ஆவார் என்று கூறி இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதற்கு பாஜகவில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம் கடும் பதிலடி கொடுத்திருக்கிறார். சிறந்த காரியகர்த்தாவாக இருப்பதற்காக ஜடேஜாவை தமிழக பாஜக மாநிலத் தலைவராக்க முடியுமா? அவரை ஆகContinue Reading

ஜூன்.1 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தற்காலிகமாக பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டா என சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்கிவரும் நாம் தமிழர் கட்சியின் தங்களது ட்விட்டர் பக்கங்களில் அரசியல், சமூகம் சார்ந்த பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்துவருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்Continue Reading

அரசு பேருந்துகளில் ஒப்பந்த முறையை நிறுத்தி வைப்பதாக அளித்து இருக்கும் வாக்குறுதியை தமிழக அரசு காப்பாற்றத் தவறினால் மீண்டும் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று சிஐடியு எச்சரித்துள்ளது. அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து இதனை தெரிவித்துள்ளார். புதிதாக வாங்கப்படும் மாநகர பஸ்களை அரசு-தனியார் பங்களிப்புடன் ஓட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை போக்குவரத்து துறை ஆராய்ந்து வந்தது. இதற்கு தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறுContinue Reading