மே.11 கோவையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் 7 ரயில்களின் பயண நேரம் இன்று மாற்றப்பட்டுள்ளது. கோவை-பாலக்காடு ரயில் நிலையங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகளுக்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுக்கரை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று 7 ரயில்களின் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை-பாலக்காடுContinue Reading

மே.10 தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை கண்டு சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சித்துள்ளார். கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலம், கூட்டுறவு துறை, ஆதிதிராவிடர், மின்சாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 980 பேருக்கு ரூ.11.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,Continue Reading

மே.10 தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், தட்டச்சர் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளுக்கான காலியிடங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால், ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளதோடு, வழக்குகளின் நிலுவையும் உயரும் நிலை உருவாகியுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பால், அன்றாட நிர்வாகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, வழக்குகளில் சாட்சிகளின் வாக்குமூலப் பதிவு, இடைக்கால உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளை தயார்Continue Reading

மே 9 தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்டுள்ளார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பததாக கடந்த சில நாட்களாகவே தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்ற, அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதியContinue Reading

மே.9 தமிழக அமைச்சரவை மாற்றத்தில் பட்டியலினத்தவர்களுக்கு துணை முதல்வர் மற்றும் முக்கிய துறைகளின் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னைContinue Reading

மே.9 நாட்டின் மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புர்கா, பர்ஹானா, தி கேரளா ஸ்டோரி ஆகிய படங்களை தடை செய்ய வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் உட்பட 4 மொழிகளில் அண்மையில் வெளியான தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் இந்தத் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.Continue Reading

ஓ.பன்னீர் செல்வமும் – டிடிவி. தினகரனும் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்து இருப்பது தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரே கட்சியாக இல்லாமல் ஒரே நோக்கத்துடன் செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அடையாறில் உள்ள இல்லத்திற்குச் சென்று டிடிவி தினகரனை சந்தித்தார். இருவரும் சிறிது நேர சந்திப்புக்கு பின், கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஓ. பன்னீர்செல்வம், எப்போதுContinue Reading

“அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் போலி வீடியோக்களை பதிவிட்டு அமைதியை சீர்குலைப்பதா?” – யூடியூபர் மணிஷ் காஷ்யப்பிற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் எதை வேண்டுமானாலும் பரப்புவதா என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோக்கள் வெளியிட்ட விவகாரத்தில், தேசியContinue Reading

பிளஸ் 2 தேர்வில் தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என 600 க்கு 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாணவி சாதனை படைத்துள்ளார். பிளஸ் 2 தேர்வு முடிவுகளை இன்று தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்நிலையில் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம் கணினி, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் உள்ளிட்டContinue Reading

மே.8 நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு தோல்வி பயத்தால் புதுச்சேரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் என்னும் உயிர்க்கொல்லி தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுவையில் நீட் தேர்வுக்குContinue Reading