மே.8 தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மே 10ம் தேதி முதல் 15 நாட்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடப்பாண்டில் மே மாதம் 10 ந்தேதி முதல் 24 ந்தேதி வரை 15 நாட்களுக்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் நெறிமுறைகளின்படி,Continue Reading

திராவிடம் அனைவரையும் சமமாக நடத்தும் என்று திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க,ஸ்டாலின், ஆளுநரை வைத்து எங்களை அச்சுறுத்த நினைத்தால், அஞ்ச மாட்டோம் என்றும், ஆரியத்தை வீழ்த்தும் ஆயுதம் திராவிடம் என்பதால், அதனைப் பார்த்து ஆளுநர் பயப்படுகிறார் எனவும்Continue Reading

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியின் பவுலர்கள் மும்பை பேட்ஸ்மேன்களை திணறடித்து ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சஹார், தேஷ் பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மும்பை அணிContinue Reading

மே.6 சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர் ஹரிபத்மனுக்கு பிணை வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, அந்த மனுவை மனுதாரர் வாபஸ் பெற்றுக்கொண்டார். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா வளாகத்தில் செயல்பட்டுவரும் ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அக்கல்லூரி நடனத்துறை உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் கடந்த ஏப்.3-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிணைContinue Reading

மே.6 நீலகிரி மாவட்டம் கூவமூலா பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்லக்கூடிய தரைப்பாலம் கன மழையால் சேதடைந்தது. இதனால், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துவருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், அய்யன்கொல்லி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கூவமூலா அருகேContinue Reading

மே.5 கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள்கள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக தலைமைச்செயலாளருக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் எதையும் செய்யவில்லை என்றும், தமிழ்நாடு அரசு அவர்கள் மீது பழிவாங்கும் விதமாக நடவடிக்கை எடுக்கிறது என்றும் பேட்டி ஒன்றில் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இந்த வழக்கில் 6,7ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இருவிரல் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாகவும்Continue Reading

மே.5 சாதிச்சான்றிதழை சரிபார்க்கும் அதிகாரம் டி.என்.பி.எஸ்.சிக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1996-97 ஆம் ஆண்டுகளில் நடத்திய குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஜெயராணி என்ற பெண், இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்டார். அவரின் கணவர் இறந்த நிலையில், கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறிContinue Reading

தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கி இருப்பதாக ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். கவர்னர் ஆர்.என்.ரவி தனியார் ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில், அதில், திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை. காலாவதியான கொள்கைகளைக் கொண்டு திராவிட மாடல் என்ற பெயரில் ஆட்சி நடத்துவதாக தெரிவித்து இருந்தார். திராவிட மாடல் கொள்கைகள் ஒரே நாடு ஒரே பாரதம்Continue Reading

நீலகிரியில் கடந்த ஒரு வாரமாக மேகமூட்டம் மற்றும் மழை பெய்த நிலையில் வெப்பம் தணிந்து குளுகுளு காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சமவெளி பகுதிகளில் இம்முறை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதலே உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன்Continue Reading

மே.4 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாத் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று அழகரை எதிர்கொண்டு மக்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி இன்று நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து, நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறுContinue Reading