June 21,23 வேக கட்டுப்பாடு வரம்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கமளித்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திங்கள் கிழமை அளித்த பேட்டி வருமாறு “சென்னை மாநகரில் வாகனங்களின் வேகத்தைக் கண்காணித்து அபராத ரசீது அனுப்பும் ஸ்பீடு ரேடார் கன் கருவி 30 இடங்களில் பொருத்தப்பட இருக்கிறது. முதல்கட்டமாக 10 இடங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டு உள்ளது இதனை தொடர்ந்து வேகமாக செல்லும்Continue Reading

June 20,23 சமூகநீதிக்காக பாடுபட்டவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் புகழாரம் தெரிவித்துள்ளார்.   திருவாரூரில்  கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்ற  அவர் முத்துவேலர் நினைவு நூலகத்தை திறந்து வைத்தாார். பின்னர் பீ அவர் பேசியதாவது: சமூக ஏற்ற தாழ்வுகளை களைத்தவர் தான் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களை – வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளContinue Reading

June 20, 23 ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வரும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால கடந்த வாரம் கைது செய்யப்பட்டதால் அவர் வகித்து வந்த துறைகள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்துContinue Reading

June 20, 23 விஜய் அரசியலுக்கு வருவது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசியமலை சுத்தப்படுத்த யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார். நடிகர் விஜய் கடந்த சனிக்கிழமை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார். சென்னை நீலாங்கரையில் நடைபெற்றContinue Reading

June 20, 23 அரசின் அனைத்து வரி மற்றும் கட்டணங்கள் ஏற்கனவே உயர்த்தப்பட்ட நிலையில், சாலை வரியை உயர்த்த திமுக அரசு முடிவெடுத்து உள்ளது கண்டனத்திற்க்கு உரியது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள  அறிக்கை வருமாறு, “‘விடியல் தருவோம்’ என்று கூறி ஆட்சியைப் பிடித்த விடியா திமுக அரசு, சாலை வரியை 5 சதவீதம் அளவிற்கு உயர்த்துவதற்கு முடிவெடுத்துள்ளதாக அனைத்து நாளிதழ்களிலும் வெளிவந்துள்ள செய்தி,Continue Reading

June 20, 23 அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு நாளை ( புதன் கிழமை)  விசாரணைக்கு வரவுள்ள  நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களின் பேரில்  அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த வாரம் கைது செய்தது. நீதிமன்றக் காவலில் உள்ள அவருக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறவும்  நீதிமன்றம்Continue Reading

June 20, 23 தமிழக அரசு சாலை வரி விதிப்பை உயர்த்த இருப்பதால் புதிய வாகனங்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் 14.77 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 12.47 லட்சம் வாகனங்கள் இரு சக்கர வாகனங்கள் ஆகும். இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசு சாலை போக்குவரத்து வரியை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ரூ.1Continue Reading

June 19, 23 சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கிண்டி, மீனம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, நூங்கம்பாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்Continue Reading

கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை நீடிக்கும்-வானிலை ஆய்வுContinue Reading

ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி வளைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்ட நவாஸ் கனி எம்.பி-யின் உதவியாளர் விஜயராமு மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் தினேஷ்குமார் அளித்த புகாரில் அடிப்படையில் போலீசார் இந்தContinue Reading