திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே விரைவு ரயில் தண்டவாளத்தில் தென்னை மரத்தை குறுக்கே போட்டு ரயிலை கவிழ்க்க சதி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் மார்க்கமாக ரயில் இன்ஜின் இரவு நேரத்தில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி ரயில் என்ஜின் ஒன்று சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது திருநின்றவூர்Continue Reading

சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எஸ். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் எனும் புதிய ஆன்லைன் வழி படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஜே.இ இ. உள்ளிட்ட எந்த வித நுழைவுத் தேர்வுகளும் இல்லாமல் சென்னை ஐ.ஐ.டி.யில் ஆன்லைன் வாயிலாக பயில டேட்டா சயின்ஸ் என்ற பாடத்திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இதை அடுத்து ஆன்லைன் வாயிலாக பயிலக் கூடிய பி.எஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம் எனும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சேர விரும்புவோர்Continue Reading

June 07, 23 காஞ்சிபுரம் படப்பையில் இலவசமாக ஜூஸ் மற்றும் பிரட் ஆம்லேட் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் விஜயலட்சுமி. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜெயமாலா மற்றும் இரண்டு பெண் காவலர்களுடன் படப்பை பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் செயல்பட்டுContinue Reading

ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் வீட்டின் மீது முதலீட்டாளர்கள் நள்ளிரவில் தாக்குதல் நடத்தினார்கள். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது. இந்த ஊரில் வசிக்கும் ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் யோகானந்தம் வீட்டின் மீது நேற்றிரவு முதலீட்டாளர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். நெமிலியில் ஒரு ஆண்டுக்கு முன்பு ஆருத்ரா நிதி நிறுவன கிளை அலுவலகம் துவக்கப்பட்து. இதில் ரூபாய் ஒரு லட்சம் கட்டினால்Continue Reading

சென்னை மாநகராட்சியில் அதிமுக ஆட்சி காலத்தில் சாலை சீரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்து உள்ளது கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் சாலைகள்  சீரமைக்க, ரூ. 300 கோடி மதிப்பிலும்,  மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு ரூ. 290 கோடி மதிப்பிலும்,Continue Reading

  ராமநாதபுரம் கடற்கரையில் கடத்தலில் முதலிடத்தில் இருப்பது தங்கக் கட்டிகள்.இவைகளை இலங்கையில் இருந்து கடல் வழியாக படகில் ராமேஷ்வரம் கடற்கரைக்கு கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் கொண்டு வரப்படும் தங்கத்தின் அளவு ஒரு கிலோவுக்கு மேல்தான். உலகத்தின் பிற இடங்களில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் தங்கக் கட்டிகள் அங்கு உள்ளவர்களால் படகில் அனுப்பி வைக்கப்படுகிறது. நடுக்கடலில் அந்த தங்கம் தமிழ்நாட்டு படகுக்கு மாறுகிறது. கடந்த வாரம் 30 கிலோவுக்கும்Continue Reading

குத்தகை தொழிலாளர் முறையின் மனித உரிமை மீறல்களுக்கு ஆவின் அத்துமீறல்களே சான்று: தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியிறுத்தி உள்ளார் . அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை வருமாறு … சென்னையை அடுத்த அம்பத்தூர் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தொழிற்சாலையில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக கடந்த சில மாதங்களாக குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவில் பணியமர்த்தப்பட்டதாகவும், அவர்களுக்கு கடந்தContinue Reading

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் விதிகளை மீறி சிறார்கள் பணியமர்த்தப்படவில்லை என்றும், அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் விதிகளை மீறி சிறார்கள் பணியமர்த்தப்பட்டதாகவும், அவர்களுக்கு சரிவர ஊதியமும் வழங்கப்படாததால் சிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானது. இதனையடுத்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில்Continue Reading

அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அடுத்த தீவிர புயலாக வலுப்பெறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வடகிழக்கு திசையில் நகர தொடங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு வங்கதேசம் மாநிலம் பிபோர்ஜோய் என பெயரை வழங்கியது. பிபோர்ஜோய் என்றால் பேராபத்து என்பது பொருளாகும். அரபிக்Continue Reading

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ராஜஸ்தான் அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட்டும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையில் உள்ள உட்கட்சி பூசல் முடிவுக்கு வரவில்லை. சச்சின் பைலட்டை அவ்வப்போது டெல்லி மேலிடம் தலையிட்டு சமாதானப்படுத்திக் கொண்டே வந்தது. ஆனால், முந்தைய வசுந்தரா ராஜே தலைமையில் நடந்தContinue Reading