மே.12 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள மோக்கா புயலானது தீவிர புயலாக உருமாறியுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது மோக்கா புயலாக மாறி நிலைகொண்டிருந்தது. இந்தப் புயலானது நேற்று மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுவடைந்தது. இந்த மோக்கா புயல், போர்ட் பிளேருக்கு மேற்கே 510 கிலோமீட்டர் மற்றும்Continue Reading

மே.11 வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்றிரவு 11.30 மணி நிலவரப்படி, அந்தமான் நிகோபார் தீவுகளின் போர்ட்ஃ பிளேயரிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டிருந்தது. மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் மேலும் வலுப்பெற்றுContinue Reading

மே.10 தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாறவுள்ளதைக் குறிக்கும் வகையில், தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.Continue Reading

9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மே.9 தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ்டுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 05.30Continue Reading

மே.8 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாளை (மே.9) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றுContinue Reading

மே.6 தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதனால், அப்பகுதிகளில் மே 7 ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், மே 8 ஆம் தேதியில்Continue Reading

மே.5 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நோளை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும் என்றும், இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, மே 8ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தமிழகContinue Reading

மே.4 தமிழகம் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வரும் 06.05.2023 மற்றும் 07.05.2023 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரிContinue Reading

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்

மே.3 தமிழகத்தில் வரும் 7 அல்லது 8ம் தேதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடியுள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறினார்.சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அவர்Continue Reading

மே.2 தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், இன்றும் நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. ஓரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம், தஞ்சை உட்பட பல மாவட்டங்களில் இரவுContinue Reading