நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர்கள், பிரதிநிதிகள், உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நாட்டின் கொரோனா பரவல் நிலவரம் குறித்தும், தொற்றை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் நாட்டின் அனைத்து மாநிலங்களில் உள்ளContinue Reading

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதை திமுக உறுதிசெய்துள்ளது. 2024 ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டு வருகிறது. அதன்படி, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுடன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என உறுதி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், பாஜக-வுக்கு எதிரானContinue Reading

முதல்வர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்பட ஆளுநர் கடமைப்பட்டவர் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ‘சட்டப்பேரவை நிறைவேற்றும் ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அந்த மசோதா இறந்துவிட்டது என்று அர்த்தம்’ என்று கூறி இருந்தார். இதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்தியContinue Reading

பா.ஜ.க-வின் 43-வது ஆண்டுவிழா நேற்று கொண்டாடப்பட்டது. அது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சமூகநீதி முழக்கத்தை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திய எதிர்க்கட்சிகளைப்போல் இல்லாமல், சமூகநீதிக்காகவும், அனைத்துப் பிரிவினரின் முன்னேற்றத்துக்காகவும் பா.ஜ.க பாடுபடுகிறது. அதை எழுத்திலும் உணர்விலும் பின்பற்றுகிறது. 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் கிடைப்பது, 5 லட்சம் முதல் 50 கோடி ஏழைகளுக்குப் பாரபட்சமின்றி இலவச சிகிச்சையளிக்கும் வசதியளித்திருப்பது ஆகியவை சமூகநீதியின் நிரூபணம்” என்றுContinue Reading

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று ஏற்கனவே கூறப்பட்டாலும், பாஜக தொண்டர்கள் சாதாரணமாக இருந்துவிடக் கூடாது என பிரதமர் மோடி பேச்சு. நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் விரக்தியில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பாஜகவின் 44வது நிறுவன தினத்தையொட்டி, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், சமூகநீதி மீது பாஜக நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், மக்கள்Continue Reading

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவை சந்தித்துள்ளனர். கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில நாள்களில் நடைபெறவுள்ள நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவை சந்தித்துள்ளனர். கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13இல் மேற்கொள்ளப்பட்டுContinue Reading

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வனத்துறை அலுவலகப் பெண் பணியாளரின் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் செயினை பைக்கில் வந்த நபர் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட மானந்த வாடி பகுதியில் உள்ள சாலையில் அதே பகுதியை சேர்ந்த ரோஸ்லின் ஜோசப் என்ற இளம் பெண் ஆனந்தவாடி வனத்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.Continue Reading

நாடு முழுவதும் அதிகரித்துவரும் கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்தியா முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் தொற்று பாதித்த 25,587 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவர்களில் 2,826 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில் குறைந்த தொற்று எண்ணிக்கை தற்போது மீண்டும்Continue Reading

மக்களவை, மாநிலங்களவையில் காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்க வலியுறுத்தியது, ராகுல் காந்தி எம்.பி பதவி பறிப்புக்கு கண்டனம் தெரிவித்தது ஆகியவற்றால், சுமார் இரண்டு வாரங்களாக அவை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் இதுபோன்ற காரணங்களாலே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதன் காரணமாக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுமே, நாடாளுமன்ற இல்லத்திலிருந்து விஜய் சௌக்குக்கு `திரங்கா அணிவகுப்பு’ நடத்தின. அதைத் தொடர்ந்துContinue Reading

அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. அந்தப் பகுதியை தனக்கு சொந்தமானது என்று தொடர்ந்து கூறி வருகிது சீனா. அதுமட்டுமல்லாமல் எல்லைப் பகுதியில் சில இடங்களையும் ஆக்கிரமித்து, அந்தப்பகுதிகளில் பல்வேறு கட்டுமானங்களை நிறுவி வருகிறது. இந்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஊர்களின் பெயர்களை மாற்றும் செயலை மீண்டும் செய்துள்ளது சீனா. இதுபோல பெயர் மாற்றும் வேலைகளை கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து சீனாContinue Reading