ஜுலை, 18 -இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்த கன மழையினால் தலைநகர் டெல்லிக்குள் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது  உலகத்தின் பல நாடுகளில் வெயில் கொடுமை இதுவரை இல்லாத அளவுக்கு உள்ளது. இந்த வெப்ப அலை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் ஜப்பானை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் இத்தாலி இதுவரை இல்லாத வெப்பத்தை அனுபவித்து வருகிறது. ரோம், போலோக்னா மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்டContinue Reading

சொந்த ஊரில் வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதிப்பதை, வெளிநாடு சென்றால் , சொற்ப ஆண்டுகளில் அள்ளி விடலாம் என்ற கனவில் தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர்  விமானம் ஏறி விடுகிறார்கள். முன்பெல்லாம் ஆண்கள்தான் வெளிநாடுகளுக்கு செல்ல ஆர்வம் காட்டினார்கள். அண்மைக்காலமாக பெண்களும் வெளிநாடுகளுக்கு பறந்த வண்ணம் உள்ளனர். வீட்டு வேலைக்கு என  அந்நிய தேசங்களுக்கு ,குறிப்பாக அரபு நாடுகளுக்கு அழைத்துச்செல்லப்படும் பெண்கள், அங்கு பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.Continue Reading

ஜுலை,05-  பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் உள்ள ஜெனின் என்ற நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் மூன்றாவது நாளாக கடுமையான தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் திங்கட்கிழமை ஜெனின் நகரம் மீது மிகப்பெரிய அளவில் இஸ்ரேல் ராணுவம் வான் வழித் தாக்குதலை  மேற்கொண்டது.  குண்டு வீச்சுக்கு ஆளாகி 10 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும்16 முதல் 23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பாலஸ்தீன அதிகாரிகள்Continue Reading

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை பிரபல பாடி பில்டர் ஜோ லிண்டரி்ன் திடீர் மரணம் நிரூபித்து உள்ளது. உடலை கட்டுக் கோப்பாக, முறுக்காக வைத்துக் கொள்வதற்காக ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் உட்கொண்டதால் முப்பது வயதில் மரணம் அவரை தழுவிய செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. ஜோ லிண்டன் முப்பதே வயதில் ரத்த நாளம் வெடித்து இறந்துவிட்டார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த  அவர் கட்டுடலை விதவிதமாக வீடியோContinue Reading

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கலவரத்தில் இது வரை காவல் துறை அதிகாரிகள் 200 பேர் காயம் அடைந்து உள்ளனர். தீவைப்பு, கொள்ளை அடிப்பது, சாலைகளில் தடுப்புகளை போட்டு போக்குவரத்தை முடக்குவது போன்ற செயல்கள் நான்கு நாட்களாக நீடிக்கிறது. முந்தைய இரவுகளுடன் ஒப்பிடும்போது வெள்ளிக்கிழமை இரவு நிலைமை சற்று அமைதியானதாகத் தோன்றினாலும், நாடு முழுவதும் பல நகரங்களில் கொந்தளிப்பான சூழல்தான் காணப்படுகிறது. பாரிஸ் நகரத்தின் புறநகர்ப் பகுதியான நான்டெர்ரேவில் கடந்த செவ்வாய்கிழமைContinue Reading

கொரோனா நோய் என்பது சீனா நடத்திய உயிர் தாக்குதல் (biological attack) என்று அந்த நாட்டின்  வூகான் மாகாணத்தை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளது உலகம் முழுவதும் விவாதப் பொருளாகி இருக்கிறது. கடந்த 2019- ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்த புறப்பட்ட கொரானா பெருந்தொற்று உலகத்தை மூன்று ஆண்டுகள் முடக்கிப் போட்டிருந்தது யாராலும் மறந்துவிடக் கூயடிது அல்ல. பல லட்சம் பேர் உயிரிழந்தனர். பல லட்சம் கோடி ரூபாய்Continue Reading

ஜூன், 26- கடந்த வாரம் வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடலுக்குள் வெடித்தை அமெரிக்க கடற்படை உறுதி செய்தது. இந்தச் சூழலில் ஓ.டி.டி. ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்போம். கனடா அருகே அட்லாண்டிக் கடலில் 12,500 அடி ஆழத்தில் கடந்த 1912-ம் ஆண்டு மூழ்கி, சிதைந்து கிடக்கிறது டைட்டானிக் கப்பல். அதனைப் பார்வையிடுவதற்காக,Continue Reading

ரஷ்யாவில் திடீர் கிளச்சியில் ஈடுபட்ட வாக்னர் என்ற தனியார் ராணுவம் திடீரென பின் வாங்குவதாக அறிவித்து உள்ளது. மாஸ்கோவைக் கைப்பற்றுவதற்காக ஆயுதங்களுடன் சென்று கொண்டிருந்த  25  ஆயிரம் வீரர்களின் பயணம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. ரஷ்யாவின் நட்பு நாடான பெலராஸ் அதிபர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வாக்னர் ராணுவத்தின் தளபதி யெவ்ஜெனி பிரிகோஜி இந்த முடிவை எடுத்து உள்ளார். அவர், ரத்தம் சிந்தும் அபாயம் இருப்பதால் பின்வாங்குவதாக தெரிவித்து இருக்கிறார். இதனால்Continue Reading

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுவதற்காக ரஷ்யா நியமித்திருந்த வாக்னர் என்ற தனியார் ராணுவம் இப்போது ரஷ்யா மீதே போர் தொடுத்துள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. உக்ரைன் மீது கடந்த 17 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷ்யா, போதிய வீரர்கள் இல்லாததால் வாக்னர் என்ற தனியார் ராணுவத்தை போரில் பயன்படுத்தியது இப்போது பெரிய பிரச்சினையாகிவிட்டது. வாக்னர் குழுவின் தளபதி யெவ்ஜெனி பிரிகோஷ், ரஷ்ய படைகள் நடத்தியContinue Reading

அட்லான்டிக் பெருங்கடலில் நான்கு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலைக் காண்பதற்கு சுற்றுலா சென்று மாயமான நீர் மூழ்கி கப்பலில் இருந்த ஐந்து கோடீசுவரர்களும் இறந்துவிட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறத. ‘டைட்டன்’ என்று பெயர் கொண்ட அந்த நீர் மூழ்கிக் கப்பலின் சிதைவுகளை அமெரிக்காவின் கடலோரக் காவல் படை தனது தேடுதல் பணியின் போது கண்டறிந்து உள்ளது. அட்லாட்டிக் பெருங்கடலில் நடைபெற்ற தேடுதல் பணியின்Continue Reading