டிவிட்டர் புளூ டிக் நீககம் - எலான் மாஸ்க் அதிரடி

ஏப்ரல்.21 சந்தா தொகுதி செலுத்தாமல், டிவிட்டரில் கணக்கு வைத்துள்ள பயனாளர்களின் பக்கங்களில் இருந்த புளூ டிக்-கை டிவிட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை அண்மையில் வாங்கினார். அதைத் தொடர்ந்து, டிவிட்டரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் புளூ டிக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,Continue Reading

சீனாவை மிஞ்சி இந்தியா உலகத்திலேயே அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடு என்ற பெரும் பேரை பெற்றுவிட்டது. இன்றைய நாளில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவலின் படி இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடியாகும். சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாகும். கடந்த 1950 ஆம் ஆண்டில் இருந்துதான் ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகை விவரங்களை ஐ.நா கணக்கிட்டு வெளியிட ஆரம்பித்தது. அப்போது சைனா உலகத்திலேயே அதிக மக்கள்Continue Reading

ஏப்ரல் 18 சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே நடந்து வரும் மோதலில் இதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக  துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தாக்லோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில்,Continue Reading

ஏப்ரல் 15 ராணுவம் – துணை ராணுவம் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. ஹர்டோம், சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. அங்கு 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார். ஆனால், அந்நாட்டில் கூட்டணி ஆட்சியை கவிழ்ந்து கடந்த 2021 அக்டோபர் மாதம் 25-ம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.Continue Reading

ஏப்ரல் 15 சீனாவில் அலுவலகம் நடத்திய லக்கி டிரா போட்டியில் பங்கேற்று, சம்பளத்துடன் கூடிய 365 நாள் விடுமுறை என்ற பரிசை ஒருவர் தட்டி சென்று உள்ளார். ஷென்ஜென், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஷென்ஜென் நகரில் உள்ள பெயர் வெளியிடாத நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களுக்கு இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து இருந்தது. கொரோனா பெருந்தொற்று பரவலை அடுத்து, 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த விருந்து நிகழ்ச்சிக்குContinue Reading

ஜப்பான் பிரதமர் மீது வெடிகுண்டுத் தாக்குதல்

ஏப்ரல்.15 ஜப்பான் நாட்டின் வயகமா பகுதியில் பிரதமர் புமியோ கிஷிடா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் திடீரென பைப் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பிரதமர் கிஷிடா காயங்களின்றி உயிர்தப்பினார். தென்மேற்கு ஜப்பானில் உள்ள வயகமா மீன்பிடித் துறைமுகத்தை அந்நாட்டுப் பிரதமர் புமியோ கிஷிடா சுற்றிப்பார்த்தார்.பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவரை உரை நிகழ்த்த தொடங்கினார். அப்போது, திடீரென பிரதமரை குறிவைத்து ஒரு நபர்Continue Reading

14 Apr 2023 டெக்சாஸில் இருக்கும் சவுத்ஃபோர்க் டெய்ரி பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18,000 க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்தன. இந்த சம்பவம் அமெரிக்காவில் இதுவரை ஏற்பட்ட பண்ணை தீ விபத்தில் மிக மோசமானது என தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும் பண்ணையை உரிமையாளர்கள் இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. காஸ்ட்ரோ கவுண்டி ஷெரிப் அலுவலகம்Continue Reading

Fri, 14 Apr 2023 இந்தோனேசியாவில் இன்று பிற்பகலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.0 என பதிவாகி உள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியான டூபன் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில்  7.0Continue Reading

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைத் தவிர்த்து, 28 மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் என மொத்தமுள்ள 30 முதலமைச்சர்களில் 29 முதலமைச்சர்கள் கோடீஸ்வரர்கள். தற்கால அரசியலில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும், மக்கள் உரிமையை மீட்க வேண்டும், வறுமை ஊழலை ஒழிக்க வேண்டும் எனப் பலர் சித்தாந்தங்களோடும், கொள்கைகளோடும் களமிறங்குகின்றனர். ஒரு பக்கம் அது நிதர்சனம் என்றாலும்கூட, இன்னொரு பக்கம் அரசியலைப் பலரும், தேர்தலில் செய்த முதலீடுகளைContinue Reading

ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்று அந்நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியது முதல், எலான் மஸ்க் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். ட்விட்டர் நிறுவனத்தில் வருவாயை பெருக்கும் வகையில் பல்வேறு கெடுபிடிகளை மஸ்க் விதித்து வருகிறார். குறிப்பாக ப்ளூ டிக் பெற கட்டணம், ப்ளூ டிக் சேவையை தொடர்ந்து பெற மாதாந்திர கட்டணம், விளம்பரமின்றி பார்க்கContinue Reading