இந்தி திரைப்பட உலகில் பிரபலமாக இருக்கும் நடிகை இலியானா கர்ப்பமானதாக வெளியான செய்தி வலைதளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு பெண் கர்ப்பம் ஆவது இயற்கை தானே, இதில் என்ன விவாதம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் தான் விவாதமே. இலியானா டி குரூஸ் என்ற இவர் மும்பையில் கடந்த 1987ஆம் ஆண்டு பிறந்தவர். இப்போது வயது 36. கடந்த 2006 ஆம் ஆண்டில்Continue Reading

ஏப்ரல்.18 சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 257வது பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின்பிறந்த நாளை ஆண்டுதோறும் ஏப்ரல் 17ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தீரன் சின்னமலையின் 257வது பிறந்தநாளையொட்டி, அவர் பிறந்த இடமான, ஈரோடுContinue Reading

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி மேலும் பல வரலாற்றுப் படங்களின் வெற்றிக்கு முன்னோட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக இயக்குநர் மணிரத்னம் தெரிவித்து உள்ளார். அவருடைய இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன்-2 பாகம் இந்த மாதம் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை விளம்பரப் படுத்தும் உத்தியுடன் படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்Continue Reading

ஏப்ரல். 17 கோவையில் பொன்னியின் செல்வன் 2ம் பாக விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற திரிஷாவிடம் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தின் அப்டேட் குறித்து ரசிர்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள பிரோஜோன் மாலில் பொன்னியின் செல்வன்-2 விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அந்தப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, மற்றும் நடிகைகள் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர்Continue Reading

தமிழ் சினிமா உலகத்தில் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான ‘சின்னத்தம்பி’ வெளியாகி 32 ஆண்டுகள் ஆகிவிட்டதை நடிகை குஷ்பு நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், “தமிழ் சினிமாவில் புயலைக் கிளப்பிய சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆகிவிட்டதை தன்னால் நம்பமுடியவில்லை.என் இதயம் இயக்குநர் பி.வாசுவுக்கும் மற்றும் நடிகர் பிரபுவுக்கும் துடிக்கும். ஆன்மாவைத் தொடும் பாடல்களைத் தந்த இளையராஜாவுக்காக என்றென்றும் கடைமைப்பட்டு இருப்பேன். நந்தினி ஒவ்வொருவரதுContinue Reading

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் “எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” புகைப்பட கண்காட்சியை நாட்டுப்புற கலைஞர்களான செந்தில்-ராஜலெட்சுமி தம்பதி பார்வையிட்டனர். கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் “எங்கள் முதல்வர்-எங்கள் பெருமை” கண்காட்சியை கடந்த 7ஆம் தேதி நடிகர் சத்யராஜ் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாட்டுப்புற கலைஞர்களான செந்தில்-ராஜலெட்சுமி தம்பதி, இன்று புகைப்பட கண்காட்சியைContinue Reading

கோவை வ.உ.சி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியினை நேரில் பார்வையிட்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், முதல்வரை சிலையாக வைக்கப்பட்டது தனக்கு பிடித்திருந்ததாக தெரிவித்தார். கோவை வ.உ.சி பூங்காவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பான, “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியினை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.வி.பிரகாஷ், “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்று இங்கு வைக்கப்பட்டுள்ளContinue Reading

கோவையை சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு-வின் வாழ்க்கை வரலாறு நடிகர் மாதவன் நடிப்பில் திரைப்படமாக உருவாகிவருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய விஞ்ஞானிகளில் முக்கியமானவர் கோவையை சேர்ந்த ஜி.டி.நாயுடு. தமிழ் வழியில் 4 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஜி.டி.நாயுடு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் ஏராளமான கருவிகளை கண்டுபிடித்து சாதனைபடைத்தவர். ஷேவிங் ரேசர், ஜுசர், உருளைக்கிழங்கு தோல் எடுக்கும் கருவி,Continue Reading

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, மற்றும் விஜய் சேதுபதி நடித்த விடுதலை படம் கடந்த மாதம் 31 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ முதல் நாள் வசூல் சமீபத்தில் வெளியாகியது. அதன் படி தமிழ் நாட்டில் மட்டுமே 8 கோடி வசூல் செய்திருப்பதாகவும், உலகம் முழுவதும் சேர்த்து 12 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் பலContinue Reading

இந்தியாவின் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது சினிமாவில் நீண்ட நாட்கள் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது நாம் அறிந்தததுதான். சரி, அந்த விருதுக்கு ஏன் தாதா சாகேப் பால்கே என்று பெயர் வந்தது?பால்கே என்பவர் யார்? தாதா சாகேப் பால்கே இன்றைய மராட்டிய மாநிலத்தில் நாசிக்கில் 1870 ஆம் ஆண்டு பிறந்தவர். இளமையில்  புகைப்படக் கலை கற்றார். பிறகு ரவி வர்மாவிடம் ஓவியம் பழகினார். மேஜிக்Continue Reading