சென்னை மெரினா கடற்கரையி்ல் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதை தொடர்பான வழக்கை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தள்ளிவைத்து விட்டது. இந்த வழக்கு மீது புதன் கிழமை விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த மாதம் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மெரினா கடற்கரையில் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தடைகோரியும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் விதிமீறல்களைContinue Reading

துப்புரவு பணியாளராக மாறிய பெண்கவுன்சிலர்

ஏப்ரல்.18 கோவை மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் தூய்மை பணி மேற்கொள்ளப்படாததால், அதிருப்தியடைந்த பெண் கவுன்சிலர் ஷர்மிளா சந்திரசேகர், தானே களத்தில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சி பகுதியான வடவள்ளி பகுதியில் உள்ள பூங்கா மற்றும் தெருக்களில் சரிவர தூய்மை பணி மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் 38வது வார்டு அதிமுக கவுன்சிலரான ஷர்மிளா சந்திரசேகரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநகராட்சிContinue Reading

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அதிரப்பள்ளி வன பகுதிக்குள் சுற்றத்திரிந்த தும்பிக்கை இல்லாத யானைக்குட்டி, நீண்ட நாட்களுக்குப் பிறகு யானைக் கூட்டத்துடன் சேர்ந்தது. இது தொடர்பாக கேரள வனத்துறை வெளியிட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது. திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு தும்பிக்கை இல்லாமல் குட்டியானை ஒன்று சுற்றுலா பயணிகளால் புகைப்படம் எடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், குட்டி யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.Continue Reading

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கான ஆணையை உறுதிசெய்த உத்தரவை, மறுஆய்வு செய்யக் கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், பால் மற்றும் பால் பொருட்கள்,Continue Reading

நெல்லையில் மெகா தூய்மைப் பணித் திட்டத்தின்கீழ், மாநகராட்சிப் பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்டோர் அகற்றினர். சுத்தமான பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் வகையில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உத்தரவின் பேரில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுContinue Reading

தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் மனம் வைத்தால், 242 கோடி மரங்கள் நடுவது என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை என காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததார்கள் சங்கம் (சிபாகா) சார்பில் ‘பசுமை தொண்டாமுத்துர்’ திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியின் நிறைவு விழா கோவையில் நடைபெற்றது. போத்தனூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்தில் நடைபெற்றContinue Reading

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை நெல்லை மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, அகழ்வாய்ப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். பண்டைய தமிழர்களின் நாகரீகத்தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள், இரும்பாலான ஆயுதங்கள், தங்க அணிகலன்கள், வெண்கல பொருட்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, ஆதிச்சநல்லூரில் உலகத்தரம்Continue Reading