டிசம்பர்-23. குஜராத் மாநிலத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இருந்த மது பானங்கள் அனைத்தையும் முன்று மணி நேரத்தில் பயணிகள் குடித்துத் தீர்த்தது பெரும் செய்தியாக பரவி வருகிறது. சூரத் நகரத்தில் இருந்து பாங்காக் நகரத்திற்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவை டிசம்பர் 20- ஆம் தேதி ஆரம்பமானது. முதல் விமானத்தில் 175 பயணிகள் இருந்தனர். விமானத்தில் ரெட் லேபுள், ஷிவாஸ் ரீகல் போன்ற விஸ்கி வகைகளும் பிளாக் பகாடிContinue Reading

ஆகஸ்டு,08- மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள  மலைநகரம், லவாசா சிட்டி. எழில் மிகுந்த இந்த  நகரின் அழகை ரசிக்க  நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்..  2010-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இந்த நகரத்தை மேம்படுத்த தனியார் நிறுவனம் ஒன்று காண்டிராக்ட் பெற்றுள்ளது. இங்கு பிரதமர் மோடிக்கு 200 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிலையை நிறுவ , அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தச் சிலையை  டிசம்பர் மாதத்துக்குள்Continue Reading

ஆகஸ்டு,05- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேரவை கூட்டம் துணைவேந்தர் ந.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் செலவுகளுக்கு பணம் இல்லாமல்  திண்டாடுவது குறித்து இந்த கூட்டத்தில் பேரவை உறுப்பினர்கள், கவலை தெரிவித்தனர். நிதி நெருக்கடியில் பல்கலைகழகம் தத்தளிப்பது குறித்து உறுப்பினர் நாகராஜன் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அவர் பேசியதாவது: “தமிழகத்திலுள்ள 13 மாநில பல்கலைக்கழகங்களில் சுந்தரனார் பல்கலைக்கழகமும் ஒன்று. இங்கு 28 துறைகள் செயல்படுகின்றன. . 78 லட்சம்Continue Reading

இந்திய சினிமாவை உலக அளவில் கவனிக்க வைத்தவர்களில் முக்கியமானவர் ராஜமவுலி. பாகுபலி ஒன்று மற்றும் இரண்டு ஆகிய படங்கள் இவருடைய இயக்கத்தின் மகுடங்கள். காட்சி அமைப்புகள்,கதை சொல்லும் விதம் என அனைத்திலும வித்தியாசம் காட்டி ரசிகர்களைக் கட்டிப் போட்டிருந்தார் ராஜமவுலி. பாகுபலிக்குப் பிறகு அவர் இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’. படமும் இன்னுமொரு வெற்றிக் காவியம். அந்த படத்தில் இடம்பெற்று உள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் உலகின் உயரிய திரை விருதான ஆஸ்கர்Continue Reading

ஜுலை, 10- அருவிகள் ஆர்ப்பரிக்கும் குற்றாலத்தில் இப்போது உச்சக்கட்ட சீசன். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வெளுத்து வாங்கும் மழையால் அனைத்து அருவிகளிலும் நீர் கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால், சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்திறங்கினர். இதமான சாரலின் அரவணைப்பில் அவர்கள் குளிர்ந்து போனார்கள். பேரிறைச்சலோடு மூலிகை தண்ணீர் பொழிந்த பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கூட்டம் அலை மோதியது.குடும்பம் ,குடும்பமாக வந்திருந்த பயணிகள் ஆசை தீர குளித்து மகிழ்ந்தனர்.Continue Reading

தமிழகத்தில் உள்ள சொற்பமான சுற்றுலா மையங்களில் குற்றாலம், நினைத்தாலேயே மனதை குளிர வைக்கும்  இடம். ஜுன் மாதம் ஆரம்பித்து ஆகஸ்டு வரை சீசன், களை கட்டும். விடிய விடிய நனைந்தாலும் ஜலதோஷம் போன்ற தொந்தரவுகளை அண்ட விடாத இதமான சாரல், குற்றாலத்துக்கு மட்டுமே சொந்தம். கொட்டும் அருவிகளில் மூலிகை குணம் இருப்பதால், இவற்றில் குளிப்போருக்கு நோய்கள் பறந்து போகும். ஐந்தாறு அருவிகள் இருந்தாலும் மெயின் அருவி, ஐந்தருவி,பழைய அருவிகள் மட்டுமேContinue Reading

அட்லான்டிக் பெருங்கடலில் நான்கு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலைக் காண்பதற்கு சுற்றுலா சென்று மாயமான நீர் மூழ்கி கப்பலில் இருந்த ஐந்து கோடீசுவரர்களும் இறந்துவிட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறத. ‘டைட்டன்’ என்று பெயர் கொண்ட அந்த நீர் மூழ்கிக் கப்பலின் சிதைவுகளை அமெரிக்காவின் கடலோரக் காவல் படை தனது தேடுதல் பணியின் போது கண்டறிந்து உள்ளது. அட்லாட்டிக் பெருங்கடலில் நடைபெற்ற தேடுதல் பணியின்Continue Reading

அட்லான்டிக் பெருங்கடலில் நான்கு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலைக் காண்பதற்கு சுற்றுலா சென்று மாயமான நீர் மூழ்கி கப்பலில் இருந்த ஆக்சிஜன் இன்றுடன் தீர்ந்து விடும் என்பதால் பதற்றம் கூடியிருக்கிறது. இதனால் அந்தக் கப்பலில் இருந்த 5 பேரையும் விரைவாக மீட்பதற்கான நடவடிக்கையை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டுக் கடலோரக் காவல் படைகள் தீவிரப்படுத்தி உள்ளன. அட்லாட்டிக் பெருங்கடலில் நடைபெறும் தேடுதல் பணியின் போது, கடலுக்கடியில்Continue Reading

நெல்லை எக்ஸ்பிரஸ் உப்பட பல ரயில்களில் தென்னக ரயிவே செய்து உள்ள மாற்றம் இரண்டாம் வகுப்புப் பயணகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சென்னை- திருநெல்வேலி இடையே இயக்கப்படும் நெல்லை விரைவு ரயில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய ரயிலாக திகழ்கிறது. இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு தூங்கு வசதியுடன் கூடிய S1,S2 வில் தொடங்கி S13 வரை 13 பெட்டிகள் இருந்தன. ஒவ்வொரு பெட்டியிலும் 72 படுக்கைகள் உண்டு.Continue Reading

அட்லாண்டிக் பெருங் கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் மூன்று பேரை அழைத்துக் கொண்டு, ஓசான் கேட் நிறுவனத்தின் நீர்மூழ்கிக் கப்பல் புறப்பட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டனள. அந்தக் கப்பல் கடலில் மாயமாகி விட்டதாக வெளியான தகவல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது நீர் மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்து அதில் இருந்த மூன்று பயணிகள், இரண்டு பணியாளர்கள் ஆகிய 5 பேரையும் கரைக்குContinue Reading