நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காட்டிற்கு வந்த பிரதமர் நரேந்திரமோடி, ஆஸ்கார் நாயகர்களான பொம்மன், பெள்ளி தம்பதியரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து, 50-வது ஆண்டு பொன்விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி மைசூருக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாகContinue Reading

கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு இரண்டாவது நாளாக குவிந்த சுற்றுலாப் பயணிகள் வருகையால் போக்குவரத்து முடங்கியது. கொடைக்கானலில் கடந்த இரண்டு வாரங்களாக பரவலாக தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் குளுமையான சீதோஷ்ன நிலை ஏற்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சுற்றுலா இடங்களான வெள்ளிநீர் வீழ்ச்சி,பில்லர் ராக்,மோயர் பாயிண்ட்,ரோஜாத் தோட்டம்,தாவரவியல்Continue Reading

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோவிலில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்டத்திலேயே முதல் முறையாக பெண் ஓதுவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வரும் பக்தர்களை தவிர வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். காசி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி செல்வதை வட மாநிலத்தவர்கள் இந்தக் கோயிலை புனித தலமாகContinue Reading

தொடர் விடுமுறையால் திருமலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசன டோக்கன் பெற ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். புனிதவெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையின் காரணமாக திருமலையில் ஏழுமலையானை தரிசன செய்ய திருப்பதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருப்பதியில் உள்ள இலவச தரிசனம் டோக்கன் அளிக்கும் மூன்று இடங்களிலும் அதிகாலையிலிருந்து மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்றுச்செல்கின்றனர். டோக்கன் இல்லாத பக்தர்கள் திருமலையில் இருக்கும்,Continue Reading

காசியில் நடைபெற்ற தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவையை சேர்ந்த துளசி அம்மாளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், நாட்டின் பன்முகத்தை காக்க இத்தகைய ஒற்றுமை உணர்வு ஊக்குவிக்கிறது எனத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி காசியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க, தமிழகத்தின் 12 இடங்களிலிருந்து காசிக்கு சிறப்பு ரயில்கள் மூலம் சுமார் 2,500 பேர் ஆன்லைனில் பதிவு செய்துContinue Reading

கோவையில் புகழ்பெற்ற மருதமலை சுப்பிரமணியசாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை தொடங்கியது. பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமியில் அனைத்து முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு, கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா இன்று முதல் 2Continue Reading

கோவை மாவட்டத்தில் உள்ள கோவைக் குற்றாலத்தில் கொளுத்தும் கோடையைச் சமாளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து, அருவியில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர். கோவை உட்பட தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கோடைக்காலம் முன்கூட்டியே தொடங்கிவிட்டது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். பல மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டிக் கொளுத்தும் வெப்பத்தால் குழந்தைகள், முதியவர்கள் என பல தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். கோடையின் கொடுமையிலிருந்துContinue Reading

நீலகிரியில் இன்று 136-ஆவது ஆண்டு குதிரை பந்தயம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனை பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். மலைகளின் ராணி என்றழைக்கப்படும நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் காலத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைதருவார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கோடை சீசனின்Continue Reading

கையில் காசும் கிடைத்து நேரமும் இருந்து எங்காவது இரண்டு, மூன்று நாள் சுற்றிவிட்டு வரவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு இருக்கிற பெரிய பிரச்சினையே எங்கு செல்வது என்பதுதான். சுற்றுலாவோ அல்லது இரண்டு நாள் ஓய்வோ என்றால் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு உடனே நினைவுக்கு வருவது உதகமண்டலம் அல்லது கொடைக்கானல்தான். இரண்டு இடங்களிலும் பிப்ரவரி வரை பனியும் குளிரும் அதிகம் என்பதால் போனாலும் கையைக் கட்டிக்கொண்டு சுற்ற வேண்டும். காலையில் எழுந்து ஆசையாக வாக்கிங்Continue Reading