டிசம்பர்-25. கிண்டியில் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் நேற்றிரவு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தகவல் சென்னை நகரில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு காவல் துறை மூன்று தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டு இருக்கிறது. நேற்றிரவு உணவு அருந்திவிட்டு அந்த மாணவியும் சக மாணவரானஅவருடைய காதலனும் பேசிக்கொண்டிருந்து உள்ளனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அந்த மாணவரை அடித்து விரட்டிContinue Reading

டிசம்பர்-25. தமிழ் நாடு ஆளுநர் ரவி மாற்றப்பட வேண்டும் என்று பல் வேறு கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில் அவரை மாற்றாதது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்து உள்ளது. ஏன் என்றால் பல்வேறு மாநில ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் அந்த மாநிலத்திற்கு மிசோரம் ஆளுநராகContinue Reading

டிசம்பர்-23. அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் காளிப்பிரியனின் சொத்து விபரங்களை பெறுவதற்கு தகவல் பெறும் சட்டத்தின் கீழ் அனுப்பபப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் இந்த கருத்தை உயர்நீதிமன்றம் வெளியிட்டு இருக்கிறது. அடுத்த 2 மாதங்களில் இதனைப் பரிசீலித்து முடித்துவைக்குமாறு மாநில தகவல் ஆணையத்திற்கு நீதிபதி கார்த்திகேயன்Continue Reading

டிசம்பர்-22. நெல்லையில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்களை பணியில் அமர்த்த டிஜிபி உத்தரவு பிறப்பித்து உள்ளார். கூடுதல் பாதுகாப்பு, பிஸ்டல் மற்றும் நீண்ட ரேஞ்ச் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கும் அனுமதி கொடுத்து இருக்கிறார். இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 23- ஆம் தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று டிஜிபி தமது உத்தரவில் தெரிவித்துContinue Reading

டிசம்பர்-22, மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை உயர்த்தி வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் படி பொது இடங்களில் மின் விபத்துகளால் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு மின்சார வாரியம் வழங்கும் நிவாரணத் தொகை ₹5 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முழு பார்வை பாதிப்பு, 2 கை, கால்களும் செயலிழந்தால் வழங்கப்படும் நிவாரணம் ₹3 லட்சமாகவும், ஒரு கை, கால் செயலிழப்புக்கு நிவாரணம் ₹1.50Continue Reading

டிசம்பர்-22. கிறித்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உள்நாட்டு விமானக் கட்டணம் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்து உள்ளது, சாதாரண நாட்களில் சென்னையில் இருந்து தூத்துக்குடி 4,800 ஆக இருந்த விமானக் கட்டணம் தற்போது 14,250 ஆக உயர்ந்து இருக்கிறது. சென்னை-மதுரை கட்டணம் ரூ 4,300- ல் இருந்து 17,700 ஆகவும். சென்னை- திருச்சி கட்டணம் ரூ 2,390- ல் இருந்து ரூ 14,400 ஆகவும், சென்னைContinue Reading

டிசம்பர்-21 மின்சாரம் பாய்ந்து ஆதிபராசக்தி பக்தர் உயிரிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாணியம்பாடியில் இருந்து 20- க்கும் மேற்பட்டோர் பேருந்து ஒன்றில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி என்ற இடத்தில் டீ குடிப்பதற்காக பேருந்தை ஓரம் கட்டியபோது தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் பேருந்து உரசியுள்ளது. அப்போது மின்சாரம் பாய்ந்து அகல்யா (20) என்பவர் உயிரிழந்துவிட்டார். *Continue Reading

டிசம்பர்-20. திருநெல்வேலியில் பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே மாயாண்டி என்பவர் இன்று காலை வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாயாண்டியை வெட்டிக் கொலை செய்துவிட்டு காரில் தப்பிச் சென்றவர்களை கண்டுபிடிக்க போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் இவர்கள் மூன்று பேரும் பிடிட்டு உள்ளனர். கடந்த ஆண்டு கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக இருந்த ராஜாமணி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாகContinue Reading

டிசம்பர்-20, மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது. முதற்கட்டமாக இரவு 10.45 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் மதுரை விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. *Continue Reading

டிசம்பர்-19. சேலம் மாவட்டம் மேட்டூரில் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் இரண்டுப பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் 840, இரண்டாவது பிரிவில் 600 என மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் சிகிச்சைக்காகContinue Reading