June 20, 23 அரசின் அனைத்து வரி மற்றும் கட்டணங்கள் ஏற்கனவே உயர்த்தப்பட்ட நிலையில், சாலை வரியை உயர்த்த திமுக அரசு முடிவெடுத்து உள்ளது கண்டனத்திற்க்கு உரியது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள  அறிக்கை வருமாறு, “‘விடியல் தருவோம்’ என்று கூறி ஆட்சியைப் பிடித்த விடியா திமுக அரசு, சாலை வரியை 5 சதவீதம் அளவிற்கு உயர்த்துவதற்கு முடிவெடுத்துள்ளதாக அனைத்து நாளிதழ்களிலும் வெளிவந்துள்ள செய்தி,Continue Reading

June 20, 23 அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு நாளை ( புதன் கிழமை)  விசாரணைக்கு வரவுள்ள  நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களின் பேரில்  அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த வாரம் கைது செய்தது. நீதிமன்றக் காவலில் உள்ள அவருக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறவும்  நீதிமன்றம்Continue Reading

June 20, 23 தமிழக அரசு சாலை வரி விதிப்பை உயர்த்த இருப்பதால் புதிய வாகனங்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் 14.77 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 12.47 லட்சம் வாகனங்கள் இரு சக்கர வாகனங்கள் ஆகும். இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசு சாலை போக்குவரத்து வரியை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ரூ.1Continue Reading

சென்னை. ஜுன்,-20 திருமணம் மற்றும் விருந்து மண்டபங்கள் போன்ற வணிக இடங்களில் மதுவை வைத்திருக்க அனுமதி உண்டா இல்லையா என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு தெளிவுபடுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசின் மதுபான உரிமம் மற்றும் அனுமதிப்பதற்காக கடந்த 1981 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட விதிகளில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி தமிழ்நாடு அரசு சில திருத்தங்களை செய்தது.  அன்று செய்யப்பட்ட திருத்தம், திருமணம் மற்றும் விருந்து மண்டபங்கள்Continue Reading

சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தினார்கள் என்பது அமைச்சர் பொன்முடி, மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் மீதான புகாராகும்.Continue Reading

அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை, உச்ச நீதிமன்றத்தில்மேல்முறையீடு செய்துள்ளது. சட்ட விரோதப் பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யபட்ட  செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவின் பேரில் காவலில் உள்ளார். உடல் நிலையைக் கருதி அவரை சிறைக்கு கொண்டு செல்லாமல் மருத்துவ மனையில் வைத்து சிகிச்சை தரவும் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில்Continue Reading

சென்னை மாநகரில் இனி மேல் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை மீறி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். இதே  போன்று இரவில் 50 கி.மீ வேகத்தை கடந்து வாகனங்கள் சென்றால் அதிவேக பயணம் என வழக்கு பதியப்படும்.மோட்டார் வாகன சட்டப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களால் விபத்துகளும் போக்குவரத்துContinue Reading

சென்னையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஜுன் மாதத்தில் அதிக மழை பெய்துள்ள. இதற்கு முன்பு 1996 ஆண்டு தான் இந்த பருவத்தில் அதிக மழை பெய்திருந்தது. வழக்கமாக வடகிழக்குப்  பருவ மழைக் காலமான அக்டோபர்,நவம்பர் மாதங்களில் தான் கன மழை பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையின்  தொடக்கதிலேயே நல்ல மழை பெய்து உள்ளது. சென்னையில் செய்திளார்களிடம் பேசிய வானிலை மைய அதிகாரி பாலச் சந்திரன், கடந்த 24Continue Reading

  June 19, 23 தமிழநாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சென்னை சுற்றியுள்ள பல மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது.. ” தமிழ் நாட்டின் ஒரு சில இடங்களில் இடியுடன்Continue Reading

June 19, 23 கடலூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்தும், பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றிகொண்டு தனியார் பேருந்தும் மேல்பட்டாம்பாக்கம் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வந்த பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் நிலைதடுமாறிContinue Reading