June 06, 23 அடுத்த ஓராண்டிற்குள் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டுவரும் அரசு மதுக்கடையில் நேற்று அதிகாலையில் மது வாங்கிய செங்கோடம்பாளையத்தைச் சேர்ந்த கணேசன் என்ற விவசாயி அதில் நஞ்சு கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நண்பகல் 12.00 மணிக்குத் தான் மதுக்கடைContinue Reading

June 06, 23 தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் நிலவிவரும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதன் காரணமாக தமிழகத்தில்Continue Reading

ஜூன்.5 நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தொடங்கி வைத்தார். ‘உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது’ என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். காலை 9 மணிக்கு தமிழக ஆளுநர்-வேந்தர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் ஒடிசாContinue Reading

ஜூன்.5 தமிழகத்தில் நடப்பாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 1 ஒரு லட்சத்து 86 ஆயிரம் மாணவ-மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர். இதற்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்கவுள்ளது. 2023-24-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்கான விண்ணப்பப்பதிவை கடந்த மாதம் 5-ந் தேதி உயர்Continue Reading

தருமபுரி, ஜுன் 4. வன்னியர் சமூகத்துக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை சமூக நீதி பேசும் திமுக அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டு உள்ளார். தருமபுரியில் பேசிய அவர், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான போரட்டங்களை நடத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் அன்புமணி கூறியதாவது.. தமிழ்நாடு முதலமைச்சர், மதுவிலக்கு துறைக்கு சமூகContinue Reading

June 04, 2023 ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரின் நிலை இதுவரை தெரியப்படாத நிலையில், அவர்கள் விவரங்கள் அடங்கிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ளவர்கள் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒடிசா மாநிலம் பாலசூரில் ஏற்பட்ட பெரும்Continue Reading

June 04, 2023 தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒரு வார கால சுற்றுப்பயணமாக, உதகை வந்துள்ளதையடுத்து, அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர் மாளிகையில் ஜூன் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைContinue Reading

ஜூன்.3 ஒடிசா மாநிலத்தில் நேற்றிரவு நடைபெற்ற ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் ரயிலுடன் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதுவரை பலி எண்ணிக்கை 200ஐத் தாண்டியுள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 900-த்தை கடந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அமைச்சர்கள் உதயநிதி, எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையிலானContinue Reading

June 02, 2023 மூன்று நாட்களுக்கு 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து, வரும் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், இந்த வாரContinue Reading

June 02, 2023 கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் சாட்சிகளை பாதுகாப்பது பெரும் சவாலாக இருந்தது என அரசு தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015 ம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல,Continue Reading