மே.25 தமிழ்நாட்டில் அனைத்து அரசு பேருந்துகளிலும் 5 வயது வரையுள்ள குழந்தைகள் இலவசப் பயணம் மேற்கொள்ளும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை. 3 வயது முதல் 12 வயது வரையான சிறுவர், சிறுமிகளுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது,Continue Reading

மே.24 சென்னை மெரினா கடற்கரையில் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைக்க திர்ப்புத் தெரிவித்து மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற கருத்துக்Continue Reading

மே.23 சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்ட 5500 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழங்கு சீர்கேடு, மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.Continue Reading

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 18 ஆண்டுகளாக தக்காராக இருந்த கருமுத்து கண்ணன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. கருமுத்து தி. கண்ணன், கருமுத்து தியாகராஜர் – இராதா தம்பதியரின் ஒரே மகன். இவர் மதுரை தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி மற்றும் தியாகராசர் மேலாண்மைக் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நிர்வாகியாகவும் செயல்பட்டுள்ளார். பல நூற்பாலைகளின் தலைவராகவும் உள்ளார். மேலும்Continue Reading

தனியார் பள்ளிகளின் கட்டண விகிதங்களை முறைப்படுத்தி புதிய பட்டியல் வெளியிட வேண்டும் என்று கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் செயல்பட்டுவரும் 14 ஆயிரம் தனியார்மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் முடிவுக்கு வருகிறது. தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு 2011-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த குழு தனியார்பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்கிறது. இப்போது நீதிபதி ஆர்.பாலசுப்பிரமணியம்Continue Reading

மே.22 தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஜூன் 20ஆம் தேதி திருவாரூர் அருகே காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக்க கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு. ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் வரும் ஜூன்Continue Reading

தமிழ்நாட்டில் அழியும் நிலையில் உள்ள 10 லட்சம் ஓலைச்சுவடிகளை பதிப்பிக்க தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழர்களின் கணிதவியல், வானியல், சித்த மருத்துவவியல், தமிழ் இலக்கியங்கள் தொடர்பான 10 லட்சம் ஓலைச்சுவடிகள் கேட்பாரின்றி கிடக்கின்றன என்பது தெரியவந்துள்ளது. சுவடி நூலகங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பண்ணையார்களின் இல்லங்கள் போன்றவற்றில் கிடக்கும் இவை உடனடியாகContinue Reading

may 21, 2023 தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடல் அறிவிப்போடு போனதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அறிவித்தார். அதன்பின் இன்றுடன் 40 நாட்கள்Continue Reading

மே.21 தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மே 27ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெருங்கருணை மற்றும் இ.கே.ஆர்.குப்பம் கிராமத்தை சேர்ந்த 22 பேர் மது அருந்திContinue Reading

மே.20 தமிழ்நாடுஅரசின் உத்தரவின்படி 39 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராஜீவ் குமார் உள்ளிட்ட 4 பேருக்கு புதியதாக டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் இந்தோ திபெத் எல்லை படையின் ஏடிஜிபி ஆக உள்ள ராஜீவ் குமாருக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகர ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோருக்கு போலீஸ் பயிற்சி அகாடெமியின்Continue Reading