ஏப்ரல்.15 தமிழகத்தில் கிழக்குக் கடற்கரையோர மாவட்டங்களில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் விசைப்படகுகள், இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, குறிப்பிட்ட தடைக்காலத்தில்Continue Reading

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, திங்கட்கிழமை முதல் சென்னை உயர் நீதிமன்றத்திலும் மற்ற கீழமை நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமக்கப்பட்டுள்ளது. தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உயர் நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் திங்கள் கிழமை முதல் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயம் என்று தெரிவித்து உள்ளார். தனி மனித இடைவெளியைப் பின்பற்றி கைகளை அடிக்கடி கழுவவேண்டும் என்று வலியுறுத்திContinue Reading

பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான 2 வீரர்களின் உடல் சிறப்பு விமானம் மூலம் தமிழகம் கொண்டுவரப்பட்டது. கோவை மற்றும் மதுரை விமான நிலையங்களுக்கு தனித்தனியே வந்த 2 வீரர்களின் உடலும், ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டது. பஞ்சாப் மாநிலம் பதின்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் ஒருவர், சேலம்Continue Reading

ராணிப்பேட்டை அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரின் மேல் ஏறி விபத்துக்குள்ளானது. இதனால், அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது. ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த ஆட்டோ நகர் பகுதியில் இன்று அதிகாலை சென்னை துறைமுக பகுதியிலிருந்து வெள்ளை ஜல்லிக்கற்கள் லோடு ஏற்றி கொண்டு வந்த கனரக லாரி ஒன்று பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தContinue Reading

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கான ஜாமீனை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அவர் தமது பதவிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜேந்திர பாலாஜிContinue Reading

மராட்டிய மாநில முன்னாள் முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத்பவார் புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை வியாழக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். தலைநகர் டெல்லியில் கார்கேவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா அல்லாத கட்சிகள் ஒரே அணியாக போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் பீகார்Continue Reading

தமிழ் புத்தாண்டு தினத்தை சொந்த ஊரில் கொண்டாட ஏராளமானவர்கள் புறப்பட்டு உள்ளதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நெரிசல் நிலவுகிறது.புத்தாண்டோடு சேர்த்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டு உள்ளனர். சென்னையில் இருந்து தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கு அதிகம் பேர் கோயம் பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து இருந்தனர். நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன.Continue Reading

தமிழ் மொழி மீது இந்தியை ஒரு போதும் திணிக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுடன் “தமிழ் தர்ஷன்” என்ற நிகழ்ச்சியில் அவர் உரையாடினார். அப்போது ஆர்.என்.ரவி, இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது என்றார். சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என்று கூறிய ஆளுநர், தமிழ் மீது ஹிந்தி உட்பட எந்த மொழியையும்Continue Reading

இந்தியாவில் தற்போதுள்ள 30 முதலமைச்சர்களில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைவரும் கோடீஸ்வரர்கள் என ஏ.டி.ஆர் அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் (டெல்லி, புதுச்சேரி) முதலமைச்சர்கள் பதவி வகித்துவருகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்துவருவதால் அங்கு முதலமைச்சர் இல்லை. இந்நிலையில், தற்போது பதவியில் உள்ள இந்த 30 முதல்வர்களும்Continue Reading

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முந்தைய அரசால் தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக 10.5% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார் . சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் ஜி.கே.மணி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அளித்த பதிலில் முதல்வர் ஸ்டாலின் இதனை தெரிவித்து உள்ளார். மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் ஆணையம்Continue Reading