கோவை வ.உ.சி மைதானத்தில் வரும் 7ம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரலாற்றுப் புகைப்பட கண்காட்சி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். கோவை வ.உ.சி மைதானத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்தப் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்Continue Reading

சென்னை கலாஷேத்ரா நாட்டியப் பள்ளி மீதான பாலியல் புகார் வழக்கில் ஆசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு உள்ளார். மாதவரத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவர்,திங்கள் கிழமை அதிகாலை போலிசால் சுற்றிவளைக்கப்ட்டார். பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவரை ஏப்ரல் 13 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதன் பிறகு ஹரி பத்மன் சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டு உள்ளார்.Continue Reading

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, இறுதி விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்Continue Reading

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நல்விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரமலான். இந்த ஆண்டுக்கான ரமலான் பண்டிகையை வரும் 21ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, கடந்த மாதம் 31ம் தேதி முதல் இஸ்லாமிய மக்கள் ரமலான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். ஏழை எளிய மக்களின் இன்பதுன்பங்களில் பங்கு பெற்று அவர்கள் பசியைContinue Reading

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திமுகவில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவின் முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக-வில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி,Continue Reading

திருவாரூரில் புகழ்பெற்ற தியாகராஜர் கோயில் ஆழித்தோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். சைவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவின் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப் புகழ்பெற்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் ஏப்.1ஆம் தேதி காலை 7:30 மணிக்கு தொடங்கியது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் திருவாரூர்Continue Reading

அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று ஆஜராக ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்கிற்கு மாநில மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக வந்த புகாரின்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதுதொடர்பாக சேரன்மாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டContinue Reading

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு காவல்துறையால் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட நபர்கள் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜராகினர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரகத்தில் உதவி காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பல்வீர்சிங், குற்ற வழக்குகளில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக வெளியாக புகார் பல்வேறு தரப்பிலும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. இதைத்தொடர்ந்து, உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.Continue Reading

கோவை மாவட்டத்தை “விபத்தில்லா கோவை”யாக உருவாக்கும் நோக்கத்தில் மாநகரின் 6 இடங்களில் காவல்துறை சார்பில் சிறப்பு வாகனத் தணிக்கை முகாம் நடத்தப்பட்டது. கோவை மாநகரத்தில், வாகன விபத்துகள் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, “விபத்தில்லா கோவையாக” உருவாக்கும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி, கோவை மாநகரில் 6 இடங்களில் (பொள்ளாச்சி ரோடு – ரத்தினம் காலேஜ், பாலக்காடு ரோடு – நேரு காலேஜ், பேரூர் பைபாஸ் ரோடுContinue Reading

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும்Continue Reading