மே.3 கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதிக்குள் சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனத்தை, அங்கு குட்டியுடன் வந்த காட்டு யானை ஒன்று திடீரென தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை பகுதிக்கு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. வால்பாறை பகுதியை சுற்றி பார்க்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியிலிருந்துContinue Reading

மே.2 தமிழகத்தில் செயல்படும் சிறார் கூர்நோக்கு இல்லங்கள் சீர்திருத்தப் பள்ளியாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, தங்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டதே, சிறார் கூர்நோக்கு இல்லங்கள். மாவட்ட அளவில் உள்ள இந்த கூர்நோக்கு இல்லங்கள், மாநில அரசின் சமூகப் பாதுகாப்பு துறையின்கீழ் செயல்படுகின்றன.Continue Reading

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இந்தியாவின் முன்னணி வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்திய அணியின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 16-21, 21-17, 21-19 என்ற செட் கணக்கில் மலேசிய ஜோடியானContinue Reading

ஏப்ரல்.29 வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையம் வரும் மே 6-ம் தேதி நேரில் சென்னை விசாரணை நடத்தவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டContinue Reading

ஏப்ரல்.29 நீலகிரி மாவட்டம் முதுமலை அருகேயுள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் வளர்க்கப்பட்டு வந்த மசினி என்ற பெண் யானை தாக்கியதில், பாலன் என்ற பாகன் பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மனிதர்களை தாக்கி கொல்லும் யானைகள் மற்றும் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகள் இந்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த 2006ஆம்Continue Reading

ஏப்ரல்28 தூத்துக்குடி இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கடத்தி சென்ற கோவையை சேர்ந்த மெக்கானிக்கிற்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட மகளிர் மற்றும் கூடுதல் போக்சோ அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முறம்பன் கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் கோயம்புத்தூர் இடையர் பாளையம் பகுதியைContinue Reading

ஏப்ரல்.28 அதிமுக ஆட்சியில் நிலக்கரி வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 2011-2018 வரையிலான அதிமுக ஆட்சியில் விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகத்திற்கு நிலக்கரி கொண்டு வந்ததில் ரூ.908 கோடி மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த ஊழல் தொடர்பாக, சென்னையில் கடந்த 24ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (TANGEDCO)Continue Reading

ஏப்ரல்.28 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா உள்ளிட்ட சிலரிடம் மே முதல் வாரத்தில் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவுசெய்துள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாவலராக இருந்த உதவி ஆணையர் கனகராஜ் உள்ளிட்ட பலரிடம் அண்மையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். மேலும் கொலைContinue Reading

ஏப்ரல்.28 மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” என பெயர் வைத்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2023ம் மார்ச் மாதம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல்தியாகராஜன்,” மதுரையில் சர்வதேச தரத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்படும் என்றும், தமிழ்ச் சமுதாயத்திற்கு கலைஞர் ஆற்றிய பணிகளைப் போற்றும் வகையில் அமையவுள்ள இந்த நூலகம்Continue Reading

சென்னை பூவிருந்தவல்லியில் பிரபல ரவுடியும், பாஜக பிரமுகமான ஊராட்சி மன்ற தலைவர் பி பி ஜி சங்கர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் பகுதியைச் சேர்ந்தவர் பி பி ஜி சங்கர். பிரபல ரவுடியான இவர் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. வளர்பிறை ஊராட்சி மன்ற தலைவராகவும் பாஜகவில் எஸ் சி,எஸ் டி,மாநில பொருளாளராக பதவி வகித்து வந்தார்.Continue Reading