ஏப்ரல்.15 சென்னை அரசு மருத்துவமனையில் தலைமைக் காவலரின் 10 வயது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு ஓட்டேரி போலீசார் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளனர். சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் கோதண்டபாணியின் 10 வயது மகள் பிரதிக்ஷா. இவர் 3 வயது முதல் சிறுநீரக பிரச்சனை (Nephrology) காரணமாக எழும்பூர்Continue Reading

ஏப்.15 மத்திய ரிசர்வ் காவல்படை (சி.ஆர்.பி.எப்)-ல் காலியாகவுள்ள பதவியிடங்களை நிரப்ப நடத்தப்படும் கணினி வழி எழுத்தேர்வை தமிழ் மொழியிலும் நடத்த வலியுறுத்தி, சென்னையில் வரும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி அறிவித்துள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,223 பதவியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இப்பதவிகளுக்கு கணினி வழியில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்Continue Reading

கோவையில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்துக்களும், கிறிஸ்தவர்களும் இணைந்து இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து வழங்கினர். கோவையில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு துவங்கியதை தொடர்ந்து, அனைத்து சமயத்தினர் கலந்து கொண்ட இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக்Continue Reading

காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவனத்தின் ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள், ஆட்கள் வந்ததைக் கண்டு தப்பியோடினர். காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில் தனியார் நிறுவனமான இண்டிகேஷ்(INDICASH) என்கிற ஏடிஎம் மையமானது அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த இரு ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர். அப்போது, அப்பகுதியில் ஆள்Continue Reading

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் இளைஞர் ஒருவர், போக்குவரத்து காவலர்களை தகாத வார்த்தையால் திட்டி பணிசெய்ய விடாமல் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் வழக்கம் போல நகர போலீசார் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் தாறுமாறாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததை கண்ட போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதனால்,Continue Reading

திருப்பூர் அருகே சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கரட்டாங்காடு பகுதியில் அனுமதியின்றி முறைகேடாக நடத்தப்பட்டுவந்த கிளினிக்கிற்கு சீல் வைத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் இயங்குகின்ற மருத்துவமனைகள் மற்றும்கிளினிக்குகள், மருந்தகங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், திருப்பூர்-தாராபுரம் சாலையில் உள்ள கரட்டாங்காடு பகுதியில் யஷ்வந்த் என்ற கிளினிக் முறைகேடாக செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் வினீத்திற்கு புகார் வந்தது. அது குறித்துContinue Reading

கோவையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதை எல்லாம் நீக்கி விடுகிறார்கள். அரசாங்கத்திற்கு எதிராக நடக்கின்ற சம்பவங்களை நாங்கள் சட்டமன்றத்தில் எடுத்து வைத்து பேசினால் அதனை நீக்கி விடுகிறார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை என தொடர்ந்து குரல்Continue Reading

தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் இன்று காலை 10.15 மணிக்கு வெளியிடவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை சென்னை கமலாலயத்தில் ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்காசியில் கடந்த மாதம் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாநிலத்தலைவர் அண்ணாமலை, “தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும். இதனை நான் வெளியிடும்போது, தமிழக மக்கள் இன்னும்Continue Reading

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் வழக்கில் சிக்கிய பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது புகார் கொடுத்த இளம் பெண்களிடம் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை தலைமை இடமாகக் கொண்ட மலங்கரை கத்தோலிக்க சபையின் பாதிரியார் பெனிடிக் ஆன்டோ. 30 வயதான இவர் பேச்சிப்பாறை பிலாங்காவிளை ஆகிய இடங்களில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். இறுதியாக பணியாற்றிய பிலாங்காவிளை தேவாலயத்துக்கு வரும் இளம் பெண்களிடம் அவர்களின் சொந்த பிரச்சனைகளில் தலையிட்டு அதற்காகContinue Reading

தமிழகத்தில் வருவாய்த்துறையில் வழங்கப்படும் 25 வகையான சான்றிதழ் அனைத்தும் இணைய வழியில் வழங்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வெளியிட்டார். அதன்படி, பேரிடர் முன்னறிவிப்புகளை தெரியப்படுத்த TN-Alert என்ற கைப்பேசி செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட TN-SMART செயலி உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளாகும் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்டContinue Reading