சென்னையில் வரும் 16ம் தேதி நடைபெறும் அதிமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டContinue Reading

தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை மக்கள் சிரமமின்றி கொண்டாடும் வகையில், 500 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் சித்திரை 1ம் தேதி நாளை (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை தினம் என்பதால், வெளியூர்களில் வேலை நிமித்தமாக வசிப்போர் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து ஒரே நேரத்தில் பலContinue Reading

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்தன. பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்காபாளையத்தில் மோகன ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இந்த தொழிற்சாலையில் தென்னை நார் உற்பத்தி செய்யப்பட்டு உரிய விலை கிடைக்காததால் டன் கணக்கில் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று உற்பத்திContinue Reading

நீலகிரி மாவட்டம் உதகையில் திருடிய நகைகளை பங்கு போட்டு கொள்வதில் திருடர்கள் இருவரிடையே பட்டப்பகலில் ஏற்பட்ட சண்டையால், இருவரும் போலீசரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உதகை நகரின் மைய பகுதியில் உள்ள திமுக அறிவாலயம் அருகே மதியம் 2 நபர்கள் மதுபோதையில் நகைகளை கையில் வைத்து கொண்டு பங்குபோட சண்டையிட்டு கொண்டிருந்தனர். அது குறித்து தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு விரைந்த உதகை B1 காவல்துறையினர் இருவரையும் பிடித்துContinue Reading

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள சென்ற கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கோவிலின் உள்ளே வழிபடச் செல்லும், தான் அணிந்திருந்த காலணியை கழட்டி, உதவியாளரிடம் கொடுத்து எடுத்துச் செல்லக்கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா வருகின்ற 18ஆம் தேதி சாகை வார்த்தை நிகழ்ச்சியுடன் தொடங்கவுள்ளது. மே மாதம் 2ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியானContinue Reading

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளைக் காண அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டுமென கேட்ட அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணிக்கு, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அளித்த சுவாரஷ்யமான பதிலால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சிரிப்பலை நீடித்தது. தமிழக சட்டப்பேரவையில் பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பிரத்யேக பாஸ் வழங்க வேண்டும். கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு 400Continue Reading

கோவை துடியலூரில் உள்ள அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் விதமாக மத்திய அரசின் சார்பில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி (PM NAM) மாணவர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில், கோவை, பொள்ளாச்சி, காரமடை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தகுதி வாய்ந்த இளைஞர்களை வேலைக்கு தேர்ந்தெடுத்து கொள்கின்றனர். நேற்று நடைபெற்றContinue Reading

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐஏஎஸ் அதிகாரி அமுதா முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று முதல் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அம்பாசமுத்திரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில், திங்கள்கிழமை முதல் விசாரணை நடைபெறும். ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள்,Continue Reading

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து நெல்லையில் வரும் 15ம் தேதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கொக்கிரகுளத்தில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் அதானி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதனால் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பைContinue Reading

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடிபோதையில் வந்ததால் வாகனத்தை பறிமுதல் செய்த ரோந்து போலீசாரை கண்டித்து, போதை ஆசாமி பேருந்தை வழிமறித்து நின்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வடசென்னை புது வண்ணாரப்பேட்டை இந்திரா நகரை சேர்ந்த செந்தில் என்பவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்றிரவு வேலை முடிந்து குடித்துவிட்டு வாகனத்தில் சென்றுள்ளார். புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே சட்டம் ஒழுங்கு போலீசார் வாகனத் தணிகையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, குடித்துவிட்டுContinue Reading